(Reading time: 22 - 43 minutes)

2017 போட்டி சிறுகதை 89 - பெண் என்னும் மங்கைக்குள் - தேவி

This is entry #89 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - தேவி

pen enum mangaikkul

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

மணப்பெண் ராதிகா. மணமகன் பாலா.

ராதிகாவிற்கு அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அம்மா ஹவுஸ் wife. ஒரே பெண்.

பாலாவிற்கு அப்பா இல்லை. அம்மா மட்டுமே. அவன் அப்பாவின் பென்ஷன் பணத்தில் தான் வாழ்க்கை நடத்தி வந்தனர். அவன் உறவினர்கள் தான் எல்லா சடங்குகளிலும் முன்னின்று நடத்தினர்.

பெண் வீட்டு கல்யாணம், அதோடு லீவ் நாளில் வைத்ததால் இரு பக்கமும் திருமணத்திற்கே வந்தனர். அதிகாலை முஹுர்த்தம். தன் வலியை மறைத்துக் கொண்டு திருமணத்திற்கு பின்னான சடங்குகளில் கலந்து கொண்டாள் ராதிகா.

மாப்பிள்ளை வீட்டினருக்கும் இவர்கள் ஊர் பக்கமே குலதெய்வம் என்பதால் திருமண விருந்து முடிந்ததும் பெண், மாப்பிள்ளையை அவர்கள் கோவிலுக்கு அழைத்து சென்றனர். பின் reception எதுவும் இல்லாததால் இரவு உணவு முடிந்த பின் மண்டபத்திலேயே சடங்கு நடத்த முடிவு செய்தனர்.

ராதிகாவின் வீடு மிகவும் சிறியது. அவள் அப்பா வருமானத்தில் ஆரம்பத்தில் அந்த வீட்டில்தான் இருக்க முடிந்தது. பிறகு வீடு மாறலாம் என்றாலும் பழகின இடம், பாதுகாப்பு இவற்றை கருதி அவர்கள் வேறு எங்கும் மாறவில்லை. அதனால் உறவினர்கள் எல்லாம் வீட்டில் தங்க இயலாது என்பதால் எல்லோரும் மண்டபத்திலேயே இருந்தனர். நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் என்றாலும் கூட வீட்டிற்கு செல்ல முடியாது.

மதியம் சம்பிரதாயத்திற்கு பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் பெண், மாப்பிள்ளையை அங்கே அழைத்து சென்றிருக்க , வீட்டை பார்த்த பாலாவிற்கு அங்கே சென்று இரவு தங்க முடியாது , மண்டபத்திலேயே இருக்கிறோம் என்று கூறி விட்டான். அவன் அம்மாவும் அதேயே சொன்னார்கள்.

தன் கணவனை தனிமையில் சந்திக்க வேண்டிய நேரம் வந்தது ராதிகாவிற்கு. ஒரு விதமான படபடப்போடு அவனை சந்தித்தாள்.

பாலா தன்னை பெண் பார்க்க வந்த தினத்திற்கு தன் நினைவுகள் கொண்டு சென்றாள் ராதிகா.

ராதிகா சாதாரண பெண். மிகவும் ப்ரில்லியன்ட் என்றோ, இல்லை அதிக துடுக்குதனமனவள் என்றோ இல்லாத average , தான் உண்டு தன் வேலை உண்டு என்று சொல்லக் கூடிய வகை. சற்று பயந்த சுபாவமும் கூட.

அவள் டிகிரி முடித்து கொஞ்ச நாட்களில் திருமணதிற்கு பார்க்க ஆரம்பித்து , இதோ பெண் பார்க்கும் படலம்.

பாலா தன் அன்னையின் கஷ்டத்தை உணர்ந்து டிகிரியோ, இன்ஜினியரிங்கோ படிக்காமல், டிப்ளோமா படித்து புகழ் பெற்ற கம்பனியில் supervisor பணியில் இருக்கிறான். பெரிய வசதி என்று இல்லாவிட்டாலும் நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலாக இருந்தார்கள்.

பாலாவின் அம்மாவிற்கு வரும் மருமகளும் படித்து வேலைக்கு செல்பவளாக இருந்தால் தன் பையன் வாழ்க்கை முன்னேற்றம் இருக்கும் என்று எண்ணி, இங்கே வந்தவுடன் ராதிகாவின் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் தன் பெண் படிப்பை பற்றி சொல்லி, அவர்களின் எண்ணம் ஈடேறும் என்று கூறினார்கள்.

ராதிகா, பாலா இருவரையும் தனியாக பேச சொல்லி இருக்க, இருவரும் உள்ளே பேசிக் கொண்டு இருந்தனர்.

பாலா அவளிடம் சாதரணமாக பேசிக் கொண்டிருந்து விட்டு, அவளும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறினான். முடிந்தால் தன் கம்பெனி அல்லது நண்பர்களிடம் சொல்லி வைப்பதாக கூறி அவளின் biodata அனுப்ப சொன்னான்.

திடுக்கிட்ட ராதிகாவோ , வெகுவாக தயங்கி விட்டு

“வந்து .. உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.. நான் டிகிரி முடிக்க வில்லை. இரண்டு papers அரியர் இருக்கு .. இந்த வருடம் முடித்து விடுவேன் .. அதற்கு பின் வேலைக்கு போகிறேனே” என்றாள்.

இதை கேட்ட பாலாவிற்கு முகம் மாறியது. என்றாலும் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்து விட்டான்.

ராதிகாவிற்கு இதை சொல்லி இருக்க வேண்டாமோ என்று தோன்றியது. இருந்தாலும் ஒரு பொய்யில் உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாமல் சொல்லி விட்டாள். மேலும் பாலா கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் போது, பின்னாடி தெரிய வந்தால் வம்பு என்று எண்ணியும் சொல்லி விட்டாள்.

வெளியே வந்த பாலாவிடம் அவன் அம்மா பெண்ணை பிடித்து இருக்கிறதா என்று கேட்க, அவன் அம்மாவிடம் அதற்கு பதில் சொல்வதை விட்டு, அவளின் படிப்பு முடிக்க வில்லை என்று சொல்லி விட்டான்.

அவன் மேல் தவறு இல்லை. தன் அன்னையின் விருப்பம் அறிந்ததே. அதோடு அவன் வெகு காலமாக தன் அன்னையிடம் மட்டுமே உணர்வுகளை பகிர்ந்து வாழ்பவன் என்பதால் அவரிடம் சொல்லி விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.