(Reading time: 22 - 43 minutes)

னால் அவளை இங்கே அழைத்து வந்த இத்தனை நாட்களில் தன் கணவனையோ, ஏன் பெற்ற பிள்ளையை கூட அவள் கேட்கவில்லை. முதலில் அவளிடம் அவர்களை பற்றி பேசிய அவள் பெற்றோர் , அந்த நாட்களில் எல்லாம் அவள் பழைய மாதிரி மாறுவதை கண்டு அவர்களை பற்றி பேசுவதை விட்டு விட்டனர்.

காலங்கள் உருண்டு ஓடின. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகி விட்டன. ராதிகா இப்போதும் அதிகமாக வெளியே செல்வதில்லை. அவர்கள் கொஞ்சம் பெரிய வீட்டிற்கு மாறி இருந்தனர். அதனால் வீட்டிலேயே இருந்தபடி சிறு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பது, வீட்டின் வாசலில் சிறு கம்ப்யூட்டர் வித் செராக்ஸ் சென்டர் மாதிரி வைத்து அதை பார்த்துக் கொள்கிறாள்.

இது சினிமாவோ, கதையோ அல்ல.. ஒரு தோல்வியில் துவண்டு பின் எழும்போது பல படிகள் முன்னேறி சாதனை படைக்க. நிஜ வாழ்க்கை. ஆனால்  யாருக்கும் பாரமாக இல்லாமல், தன் பாட்டை பார்த்துக் கொள்ளும் அளவு தேறி இருந்தாள்.

அங்கே பாலாவின் வாழ்விலும் எந்த மாற்றமும் இல்லை. அவன் அம்மா ராதிகாவை அழைத்துக் கொண்டு போகும்போது அவளின் கையெழுத்து வாங்கி தான் அனுப்பினார். எதற்கு என்று பாலா வினவிய போது அவர்கள் நம் மேல் வரதட்சனை கேட்டு அனுப்பினோம் என்று கேஸ் போடாமல் இருக்க என்றார். பாலாவிற்கும் அது சரியென்று தான் தோன்றியது.

பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து அவனை மறுமணம் செய்து கொள்ள சொல்ல, அவனோ அதற்கு மறுத்தான். பாலாவின் அம்மாவோ அதற்கு தோதாய் ராதிகாவிடம் வாங்கிய கையெழுத்தின் மேல், பாலாவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தான் மனம் ஒப்பியே அவனை பிரிவதாகவும், அதோடு தன் உடல்நிலை காரணமாக குழந்தையும் பாலாவிடமே வளரட்டும் என்றும் எழுதி இருந்தார். இதை வைத்து பாலாவிடம் எந்த பிரச்சினையும் வராது என்று மறுமணத்திற்கு வற்புறுத்த,

பாலாவோ “ அம்மா.. என்னை பொறுத்தவரை மனைவி என்றால் அது ராதிகாதான். வேறு யாரும் வர முடியாது “ என,

அவன் அம்மாவோ “சரி உனக்கு மனைவி வேண்டாம்.. உன் குழந்தைக்கு அம்மா வேண்டாமா?” என்று வினவ,

“தேவை இல்லை.. அவனை நான் வளர்த்துக் கொள்கிறேன். உங்களால் முடிந்தால் எனக்கு உதவுங்கள்.. இல்லை என்றால் நானே பார்த்துக் கொள்கிறேன்..”

அவரும் எவ்வளவோ போராடி பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. தன் பேரனை விட்டும் பேசி பார்த்தார் பாலா அதற்கும் மசியவில்லை.

இப்படியே நாட்கள் நகர, ஒரு கட்டத்தில் அவர்கள் பையனும் அம்மா இல்லாத வாழ்க்கைக்கு பழகி கொண்டான்.

தினைந்து வருடங்கள் நகர்ந்ததில், இப்போ சற்று நாட்களுக்கு முன்பாக பாலாவின் அம்மா மறைந்து விட, அதற்கு ராதிகாவிற்கு தகவல் சொல்ல வேண்டும் என்று கூட அவர்களுக்கு தோன்றவில்லை. அந்த அளவு ராதிகா என்ற ஒருத்தி அவர்கள் வாழ்வில் இருந்தாள் என்பதையே மறந்து இருந்தனர்.

பாலா தன் மகனின் படிப்புக்காக ஊர் மாற வேண்டி வர, தங்கள் வீட்டை கிளீன் செய்தனர். அப்போது பரனை சுத்தம் செய்யும்போது பாலாவின் திருமண ஆல்பம் அவன் மகனின் கையில் கிடைக்க, அதை பார்க்க ஆரம்பித்தவனுக்கு, தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

மெதுவாக தன் தந்தையிடம் கேட்க, முதலில் மறுத்த பாலா , பிறகு சரி என ஒப்புக் கொண்டு, ராதிகாவின் சொந்த ஊருக்கு சென்றனர்.

அங்கே அவர்களின் பழைய வீட்டில் சென்று தேட, அவர்களோ வீடு மாறி இருந்தனர். அங்குள்ளவர்களுக்கு ராதிகாவை பற்றி தெரியவில்லை.

என்ன செய்ய என்று யோசித்த போது , முதலில் ராதிகாவை பொண்ணு கேட்ட அவர்கள் குடும்ப நண்பன் , இவர்கள் யாரை பற்றி விசாரிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, தற்போது அவர்களின் இருப்பிட முகவரி கொடுத்தார்.

பாலாவும், அவன் மகனும் சென்று ராதிகாவை பார்த்தபோது பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை என்றாலும் , ஒரு தெளிவு அவளிடம் இருந்தது. இவர்கள் திருமணத்தின் போது இருந்த அந்த களை இருந்தது.

பாலாவிடம் அவள் சாதாரணமாகவே பேச, அவனுக்குதான் மிகுந்த குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவள் தனியாக கடை நடத்துகிறாள் என்று தெரிந்ததும், அவன் மிகவும் வேதனை பட்டான். இப்போதும் அவளை அவள் பெற்றோரிடம் அனுப்பியது தவறு என்று தோன்றவில்லை. ஆனால் அவளது பொருளாதார தேவையை தான் பூர்த்தி செய்துருக்க வேண்டும் என்று எண்ணினான். அவனை பொறுத்தவரை அவள் அப்பா வீட்டில் தானே இருக்கிறாள் என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  திருமணம் முடிந்த பின் தன் மனைவியை காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை என்னும்போது அதை செய்யாதது தவறு என்று புரிந்து கொண்டான்.

இப்போது இத்தனை நாட்கள் தன் மகனுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருந்த பாலா, தன் மனைவி விஷயத்தில் தவறு செய்து தலை குனிந்து நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.