(Reading time: 9 - 17 minutes)

டுத்த பத்து நாட்களும் சாதாரணமாய் போக அதை நினைத்து சந்தோஷப்பட்டாலும் உள்ளூர பீதியோடு தான் இருந்தான்..அன்று அவன் பிறந்தநாள் காலையில் வழக்கப்போல் வித்யாவின் சர்ப்ரைஸ் கிப்ட்க்காக ரூம் முழுவதையும் அலசிப் பார்க்க ஒன்றும் கிடைக்கவில்லை அந்த நேரம் உள்நுழைந்த வித்யாவும் அதை கண்டும் காணாமல் சென்றுவிட்டாள்..சிறு ஏமாற்றத்தோடு புது உடையை அணிந்து தன் அன்னையிடம் ஆசிப் பெற்று உணவு மேஜையில் அமரவும் காலிங் பெல் அடிக்கவும் சரியாயிருந்தது..அவன் அன்னையும் மனைவியும் அவனை பார்க்க கேள்வியாய் நோக்கிய வண்ணம் அவனே எழுந்து சென்று கதவை திறக்க ஹாப்பி பேர்த்டே மச்சான் என்று உற்சாக கூக்குரலோடு அவன் முன் நின்றவர்கள் அவனின் பள்ளி கல்லூரி தோழர்கள்..ஒரு நிமிடம் புரியாமல் விழித்தவன் சட்டென தன் மனைவியை பார்க்க அழகாய் சிரித்து கண்சிமிட்டினாள் அவள் அதற்குள் வந்தவர்கள் அவனை சூழ்ந்து கொள்ள அன்றைய பொழுது அற்புதமாய் ஆரம்பித்தது..அனைவருக்கும் வித்யாவும் மாமியாரும் உணவு பரிமாற கேலி கிண்டல் என அத்தனை வருட கதைகளையும் பேச பேச தீரவில்லை அவர்களுக்கு..இதனிடையே வித்யா அவள் அறைக்குச் செல்வதை கண்டு மெதுவாய் உள்ளே சென்றவன் பின்னிருந்து அவளை இறுக அணைத்து கன்னத்தில் இதழ்பதித்து தேங்க் யு சோ மச் விதுகுட்டி என மின்னல் வேகத்தில் வெளியே சென்றுவிட்டான்..தன் கன்னத்தை தடவியவாறே தனக்குள் சிரித்துக் கொண்டாள் பெண்ணவள்..

இரவு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்த மனைவியை இறுக கட்டிக்கொண்டான்..தேங்க்ஸ் விது யு மேட் மை டே..

அடடா போதும் போதும் எத்தனை தடவ தான் தேங்க்ஸ் சொல்லுவீங்க??என அவனை கட்டிலில் அமர வைத்து அருகில் அமர்ந்தாள்..

எப்போ டீ இதெல்லாம் ப்ளான் பண்ண??மார்னிங் கிப்ட் தேடினப்போ ஒண்ணுமே தெரியாதமாறி போன??

ம்ம் சர்ப்ரைஸ்னா அப்படிதான்..இந்த பர்த்டேவ ஸ்பெஷல் ஆக்கலாம்நு யோசிச்சேன் அப்போதான் இந்த ஐடியா வந்தது..எல்லாருக்கும் மேரேஜ் ஆனாப்பறம் அவங்கவங்க வேலைதான் சரியாயிருக்கு மீட் பண்ணவும் டைம் இல்ல சோ இந்த தடவ கரெக்ட்டா வீக்கெண்ட்ல பர்த்டே வந்ததால எல்லாருக்கும் கண்வீணியண்டா இருக்கும்நு யோசிச்சு கேட்டேன் எல்லாரும் ஓ.கே சொல்லிட்டாங்க..ரகு அண்ணாக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் அவருதான் எல்லாரோடயும் கொர்டினேட் பண்ண ஹெல்ப் பண்ணாரு..உங்களுக்கு பிடிச்சுருந்துதா??

பிடிச்சுருந்துதாவா??இனி நீயும் அம்மாவும் டெய்லி டார்ச்சர் பண்ணாகூட ஜாலியா இருப்பேன் அவ்ளோ எனர்ஜி வந்துருக்கு என எதார்த்தமாய் சொல்ல..

சாரிப்பா என்றாள் பாவமாய்..

ஹேய் எதுக்கு இப்போ சாரி சொல்ற??

இல்ல நிதின் நானும் அத்தையும் உங்கல ரொம்ப படுத்திட்டோம்..இனி எங்களுக்குள்ள எந்த சண்டையும் வராம நாங்க பாத்துக்குறோம்..உங்களுக்கு ஆயிரம் டென்ஷன் இருக்கும் இதுல வீட்ல வந்தும் நிம்மதியில்லனா நீங்க என்னதான் பண்ணுவீங்க..

ஹேய் ஏன் என்னென்னவோ பேசுற??

அன்னைக்கு நீங்க கோபமா மொட்ட மாடிக்கு போனீங்கல அதுக்கப்பறம் உங்க மொபைலுக்கு மெசெஜ் வந்துட்டேயிருந்தது யாருடா இது இப்படி அனுப்பிட்டேயிருக்காங்கநு இருந்த கடுப்புல போய் ஓபன் பண்ணேன் உங்க ஆபீஸ்ல இருக்குறவங்கதான்..அன்னையோட இஷு பத்தி ஏதேதோ அனுப்பிட்டு இருந்தாங்க பாதிக்கு மேல எனக்கு ஒண்ணும் புரில..அதபாத்துட்டு தான் ரொம்ப ஒருமாறி ஆய்டுச்சு ஆபீஸ்ல இவ்ளோ ப்ரஷரோட வொர்க் பண்ணிட்டு வீடுக்கு வந்து குடும்பத்தோட டைம் ரிலாக்ஸ்ட்டா  ஸ்பெண்ட் பண்ண வேண்டிய நேரத்துல நாங்களும் இப்படி மூஞ்சிய தூக்கிவச்சுட்டு இருந்தா நல்லாவா இருக்கும்நு நினைச்சேன்..அத்தைகிட்டயும் பேசுற விதமா பேசி புரிய வச்சேன்..அவங்களும் நல்லவங்க தான்ப்பா..தனியா இருக்காங்க இல்லையா எங்க அவங்க பையனையும் வந்த மருமக பிரிச்சு கூட்டிட்டூ போய்டுவாளோநு ஒரு இன்செக்யூரிடி ப்லீங் வேற ஒண்ணுமில்ல..இதுல பாக்குறவங்கலா எதாவது சொல்லி ஏத்திவிட்டுருப்பாங்க எல்லாம் சேர்ந்து அவங்களை குழப்பிடுச்சு..இப்போ நாங்க தெளிவா இருக்கோம்..

நாணயத்தை மாதிரி தான் மனுஷங்களுக்கும் இரண்டுபக்கம் இருக்கு..கணவனா மகனா அப்பாவா நிறைய கடைமைகள் ஒரு பக்கம் இருந்தாலும்..அதை எல்லாத்தையும் சரியா செய்றதுக்கு பணம் சம்பாதிக்குறதுக்கு உழைப்பாளியா இருக்க வேண்டீய இன்னொருபக்கமும் இருக்குநு புரிஞ்சுகிட்டேன்..இந்த ரெண்டுல மொதல்ல இருக்குற ஒண்ணு பேலெண்ஸ்ட்டா இருந்தா தான் இன்னொரு பக்கம் நிம்மதியா இருக்கும் கரெக்ட் தான நிதின் நா சொல்றது??

என் விது குட்டி எப்போ தப்பா பேசியிருக்கா உன்னமாறி வைப் எல்லாருக்கும் இருந்துட்டா கணவன்மார்கள் எல்லாருக்கும் ப்ரச்சனையே இல்ல என் செல்லக்குட்டி என அவளோடு சிரிப்பில் கலந்து கொண்டான்..

இன்றைய இளைஞர்களின் ஐடி வேலை முறையானது அளவுகடந்த சம்பளத்தை மட்டும் கொடுப்பதில்லை அளவுக்கதிகமான ஸ்ட்ரெஸ்யும் அவர்களிடம் திணிக்கிறது..இதோடு சேர்த்து வீட்டுக்கடன் வாகனக்கடன் திருமண கடன் என்ற கமிட்மெண்ட்ஸ் வேறு..இந்த நிலையில் அவர்களுக்கு மன நிம்மதி தூக்கம் உணவு என்பது மிக மிக அவசியம் இதை அனைத்தையும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் தாயும் மனைவியும் ஆண்களின் நிலையுணர்ந்து நடப்பது அவர்களின் வேலை முன்னேற்றத்தை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்..கணவன் என்ற ஒருபக்கத்தை மட்டும் வைத்து அவர்களை கையாள்வதைவிட மறுபக்கத்தையும் கருத்தில் கொள்வது சாலச்சிறந்தது..

 

This is entry #87 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - ஸ்ரீ

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.