(Reading time: 9 - 17 minutes)

தனால் அவன் அம்மா கொடுத்த பத்திரத்தை அடமானம் வைத்து சொந்தமாக டீக்கடை வைத்து கொள்கிறான். ஆனால் பிரேமுக்கோ 12 - ஆம் வகுப்புக்கு மேல் படிக்க ஆர்வம் இல்லை. எனவே அவனை வேலைக்கு அனுப்ப முடிவு செய்த முத்துவேல், மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்த்து விடுகிறான்.

மெக்கானிக் தொழிலை செய்து வந்த பிரேம், சில மாதங்கள் கழித்து நண்பர் ஒருவர் மூலமாக, சிங்கப்பூரில் இதே மெக்கானிக் வேலைக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கேள்விப் படுகிறான். சிபாரிசு மூலம் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒன்றரை லட்சம் செலவாகும் என்பதையும் தெரிந்துக் கொள்கிறான்.

இதை தந்தையிடம் தெரியப்படுத்தி எப்படியாவது பணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்துகிறான்.

முதலில் தயக்கம் காட்டிய முத்துவேல், மகனின் பிடிவாதத்தாலும், மனைவியின் வற்புறுத்தலாலும் சம்மதிக்கிறான்.

நிலத்தை அடமானம் வைத்த இடத்தில், மகன் பணம் அனுப்புவான் என்றும் விரைவில் வட்டியுடன் பணம் கொடுத்து நிலத்தை மீட்டு விடுவேன் என்று உறுதியளித்து மேலும் பணம் கடன் வாங்குகிறான் முத்துவேல்.

நிலத்தின் மேல் வாங்கிய பணம் போதாததால் மேலும் தெரிந்த நண்பர்களிடம் கடனாக பணம் வாங்கி ஒன்றரை லட்சம் பணம் புரட்டி, தன் மகனிடம் கொடுத்து, சிங்கப்பூர் அனுப்பி வைக்கிறான் முத்துவேல்.

சிங்கப்பூர் சென்ற பிரேம் அந்த ஊர் பிரம்மாண்டத்தை கண்டு வியந்து, அங்கேயே இருந்து விட மாட்டோமா என்று கனவு காண்கிறான்.

அதற்கு தகுர்ந்தாற்போல் உடன் வேலை பார்க்கும் பெண்ணின் மீது அவன் கவனம் செல்கிறது. இருவருக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாகிறது.

ஒரு நாள் மாலை இருவரும் வழக்கம் போல் பூங்காவில் சந்திக்கிறார்கள்,

"பிரேம்! எங்கப்பா அம்மாவிற்கு நான் ஒரே பெண். வேறு வாரிசு எதுவும் கிடையாது. என்னைப் பிரிய அவர்களுக்கு விருப்பம் இல்லை. பெண்ணையும் மருமகனையும் தங்களுடனேயே இருக்க வைக்கணும்னு ஆசைப்படறாங்க.

இவ்வளவு நாளா பழகறேன். ஆனா உங்க சொந்தங்களைப் பற்றி நான் தெரிஞ்சுக்கவே இல்ல. உங்களுக்கு அப்படி யாரவது இருக்காங்களா? ஒரு வேளை அப்படி இருந்தால் நாங்க எதிர்ப்பார்த்தபடி உங்களை எங்களோடு கல்யாணத்துக்குப் பிறகு இருக்கச் சொல்லக் கூடாது இல்லையா" என்றாள்

இடை மறித்த பிரேம், எங்கே தன் காதல் கை கூடாம போய்டுமோ என்ற பயத்தில் சற்றும் தாமதிக்காமல், "அந்தக் கவலையே வேண்டாம். எனக்குச் சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லை. என்னைப் பெற்றவர்களும் என்னுடைய சிறு வயதிலேயே இறந்துவிட்டார்கள். அதன் பிறகு தெரிந்தவர்கள் மூலம் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு அங்கேயே வளர்ந்தேன்".

அவன் பதிலில் நிம்மதி அடைந்தாள் மாதுரி.

அதன் பின் அவளையே திருமணம் முடித்து நிரந்தரமாக அங்கேயே தங்கி விடுகிறான் பிரேம்.

ருடங்கள் பல கடந்தது. இதுவரை பிரேமிடம் இருந்து பணமோ தகவலோ வரவில்லை. அவன் பணம் அனுப்பினால் நிலத்தை மீட்டு விடலாம் என்று எதிர்பார்த்த முத்துவேல், வட்டி கூட கட்ட முடியாமல் திணறுகிறான்.

வட்டி கட்டாததால் நிலமும் பறிமுதல் செய்யப்படுகிறது. நண்பர்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால் டீ கடையை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இத்தனை வருடமாக மகனை காணாத ஏக்கத்தால் முத்துவேலின் மனைவியும் நோய்வாய்ப்பட்டு, அந்த ஏக்கத்திலேயே உயிர் பிரிகிறாள்.

மனைவியைப் பிரிந்து, மகனின் துணையை இழந்து, இருந்த ஒரு நிலத்தையும் பறிகொடுத்து, இப்படி நிர்கதியாய் இருக்கிறேனே என்று மனம் ஒடிந்து திண்ணையில் அமர்ந்த முத்துவேல் கண்ணீர் விடுகிறான். இதுவரை இல்லாமல் முதல் முதலாக அவன் அம்மாவின் நினைவு நிழலாடுகிறது. கட்டுக்கடங்காமல் கண்ணீர் பெருகியது.

"ஐயோ அம்மா ! அன்று உன்னை ஏமாற்றியல்லவா பத்திரத்தை வாங்கி, அனாதையா திண்ணைல உக்காரவெச்சுட்டு வந்தேன். நீ எப்படி இருக்கிறாய் என்று நினைச்சு கூட பார்க்காம இருந்துட்டேனேம்மா. புத்தி கெட்டுப்போய் உன் அருமை தெரியாமல் இன்று உன் கண்ணீருக்கு காரணமாயிட்டேனே".

துக்கம் அடைக்கிறது. ஆசிரமம் நோக்கி ஓடுகிறான் முத்துவேல்.

ஆபீஸ் அறைக்குள் தவிப்போடு நுழைந்தவன், அவர்களிடம் தன் பெயர், தாயின் பெயர் கூறி, அம்மாவை பார்க்க வந்திருப்பதாகக் கூறுகிறான்.

உள்ளே அழைத்துப் போகிறார்கள்.

"பொன்னுத்தாயம்மா, நீங்க சொன்ன மாதிரியே உங்க மகன் வந்துட்டான் பாருங்க!"

கண் மூடி இருந்தவள் ஒரு கணம் கண்கள் மலர தன் மகனை பார்க்கிறாள். விழியோரத்தில் கண்ணீர் துளிகள்...

இரண்டு நாளாக இருமலால் இரைத்துக் கொண்டிருந்த அவள் மூச்சு மகனை பார்த்தபடியே பிரிந்தது...

"அம்மா! அம்மா! என்று முத்துவேல் கதறி அழுகிறான். அவன் கதறல் காற்றோடு கலந்தது.

"நீங்க வந்தா இதைக் குடுக்க சொன்னாங்க சார்" என்று ஒரு கவரை கொடுத்தார்கள் அங்கு இருந்தவர்கள்.

வேதனையுடன் கவரைப் பிரித்தான் முத்துவேல். அதில் அவன் குடுத்த நூறு ரூபாய் நோட்டும், ஒரு கடிதமும் இருந்தது.

அதில் அம்மாவின் கையெழுத்து! "நலம், நலமறிய ஆவல் ...." மேலும் படிக்க முடியாமல் அவன் கண்களை கண்ணீர் திரையிட்டு மறைத்தது.

This is entry #117 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம், நலமறிய ஆவல்

எழுத்தாளர் - ஜெயா பத்மநாபன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.