(Reading time: 17 - 34 minutes)

2017 போட்டி சிறுகதை 139 - ஒரு தென்றல்... புயலாகி.... - ஜெய்

This is entry #139 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவிற்கான கதை

எழுத்தாளர் - ஜெய்

Woman

ர்ச்சனா முதுகலை கணிதம் கடைசி வருடம் முடியும் தருவாயில் இருந்தபோது வந்த வரன் ஆதர்ஷ்.... பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணம்.... கொடுக்கல், வாங்கல் என்று எல்லா பேரமும் திருப்தியுடன் முடிய ஒரு சுபயோக நன்னாளில் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அர்ச்சனாவிற்கும், ஆதர்ஷிற்கும் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.... இரண்டு பக்க பெற்றோர்களும் தங்கள் கடமையை நல்ல முறையில் முடித்த திருப்தியில் வாழ்த்தியவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கை கொடுத்தனர்.... மாங்கல்ய தாரணம் முடிந்து பிற சடங்குகளை அர்ச்சனா பயத்துடனும், ஆதர்ஷ் கடமைக்கும்  செய்து கொண்டிருந்தனர்....

அர்ச்சனாவின் பயத்திற்கு காரணம் தான் செல்லப்போகும் புகுந்த வீடு எப்படி இருக்குமோ என்று.... பெண் பார்த்து ஒரு மாதத்தில் நல்ல நாள் கிடைக்க அந்த முஹூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைத்து விட்டனர் இரு பக்க பெற்றோர்களும்... கல்யாண வேலைகளே மிகுதியாக இருக்க இரு பக்க வீட்டிற்கும் மற்றவர்களால் போக முடியாமல் போனது... இதில் ஆதர்ஷையும் பெண் பார்த்த அன்று பார்த்ததுதான்... அதன் பின் அவனும் அர்ச்சனாவைத் தொடர்பு கொள்ளவில்லை.... அர்ச்சனாவும் தானே பேசினால் ஏதேனும் தவறாகப் போய்விடுமோ என்ற அச்சத்தில் பேசாமல் விட்டுவிட்டாள்.... இதில் அவளுக்கு கல்லூரியில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் வேறு...

ஒரு வழியாக அனைத்து சடங்குகளும் முடிந்து முதலிரவை ஆதர்ஷ்  வீட்டில் வைக்கப் பிரியப்பட்டதால் அன்றே அர்ச்சனாவை ஆதர்ஷ்  வீட்டில் விட்டு வந்தார்கள் அவளின் பெற்றோர்... வலது கால் எடுத்து உள்நுழையும்வரை கூட இருந்த ஆதர்ஷ் அதன் பின் அந்தரர்த்தனம் ஆகி விட்டான்.... உறவினர்கள் கூட்டம் மாலை வரை இருந்ததால் பெரிதாக அர்ச்சனாவிற்கு தனிமை தெரியவில்லை...

அவளின் மாமியாரும்,நாத்தனாரும் மட்டும் அர்ச்சனாவைப் பார்ப்பதும் பின் தங்களுக்குள் ஏதோ பேசுவதுமாக இருந்தனர்... மாலையில் மீதம் இருந்த உறவினர்கள் கிளம்ப ஆதர்ஷின் அம்மா அவனை அழைத்து அர்ச்சனாவை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்...

“அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கும்மா.... இப்போ கோவிலுக்கு எல்லாம் போக முடியாது... உங்களுக்கு வேணும்ன்னா நீங்க அவளை கூட்டிட்டு போயிட்டு வாங்க...”, என்று கூறி அவனின் போனில் பேசியபடியே அந்த இடத்தை விட்டு அகன்றான்.

“கல்யாணத்துக்கு ஒரு வாரம் லீவ் எடுத்ததால அதுக்கு முன்னாடி எல்லா வேலையும் முடிக்கணும்ன்னு ரெண்டு வாரமாவே ஆபீஸ்ல இருந்து லேட்டாத்தான் வரான்ம்மா.... அந்த அலுப்பு, கல்யாண அலைச்சல் எல்லாம் சேர்ந்து ரொம்ப சோர்ந்து போய்ட்டான் போல... அதனாலதான் வரலைன்னு சொல்றான்... நீ எதுவும் நினைக்காத....”, மாமியார் சொல்ல, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

இரவு உணவின்போது வீட்டினர் மட்டுமே இருந்ததால் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் போனது. அதன்பின் அர்ச்சனாவின் நாத்தனார் அவளை எளிமையாக அலங்கரித்து ஆதர்ஷின் அறையில் விட்டுவிட்டு வந்தாள்.

பெண் பார்த்துவிட்டு போன பிறகு ஆதர்ஷ் உடனான முதல் சந்திப்பு, அதுவும் தனிமையில், இரண்டு நாட்களாக அவன் அருகில் இருந்தாலும், சுற்றிலும் உறவுக்காரர்கள் இருந்ததால், அருகில் இருந்தும் இல்லாத நிலை.  ஒரு விதமான பயம் மற்றும் பதட்டத்துடனேயே அவனுக்காக காத்திருந்தாள் அர்ச்சனா. அந்த அறையில் ஒரு கட்டிலும், டிரெஸ்ஸிங் டேபிளும் இருக்க, எங்கு அமருவது என்று தெரியாமல், டிரெஸ்ஸிங் டேபிள் அருகிலேயே  நின்றாள்.

அவளின் பத்து நிமிட காத்திருக்கலுக்குப் பின் அறையின் உள்ளே வந்தான் ஆதர்ஷ்.  வந்தவன் கதவின் அருகிலேயே சிறிது தயங்கி, பின் பெருமூச்சுடன் கதவைத் தாளிட்டுவிட்டு  கட்டிலினருகில் வந்தான்.

ஆதர்ஷ் கட்டிலில் அமர்ந்து அர்ச்சனாவைப் பார்க்க, அப்பொழுது அவளும் அவனைத்தான் பார்த்தபடி இருந்தாள்.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... உன்னோட பேர் என்ன.....”

“என்னது என்னோட பேரே உங்களுக்குத் தெரியாதா...”,அதிர்ச்சியுடன் அர்ச்சனா கேட்க....

“இப்படி எல்லாத்துக்கும் அதிர்ச்சி ரியாக்ஷன் கொடுத்து எதிர் கேள்வி கேட்காத... நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு....”

“அர்ச்சனா....”

“ஹ்ம்ம் அர்ச்சனா.... இங்கப் பாரு... நான் இப்போ சொல்லப்போறதைக் கேட்டா உனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கும்... அதுக்குன்னு கத்தி ஆர்பாட்டம் பண்ணி டிராமா பண்ற வேலை எல்லாம் வச்சுக்காத... அமைதியான முறைல கேளு....”, அவன் சொல்ல கல்யாணம் ஆன முதல் நாள்ல அப்படி நான் கத்தி கூச்சல் போடற அளவு இவர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தாள் அர்ச்சனா.

அவள் ஏதேனும் பதில் சொல்வாளா என்று பார்த்த ஆதர்ஷ், அப்படி எதுவும் வராததால், எப்படித் தொடங்குவது என்று சிறிது நேரம் யோசனையில் இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.