(Reading time: 17 - 34 minutes)

ன்னம்மா இப்படி பேசற....”

“நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு... சொல்லுங்க உங்கப்பையன் அடுத்த வாரத்திலிருந்து அந்தப் பொண்ணு கூடத்தான் இருக்கப் போறேன்னு சொல்றாரு...  இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்றார்.... நீங்க அவரை சமாதானப்படுத்தி அவரோட வாழ சொல்றீங்க... இதே நான் ஒருத்தரை காதலிச்சேன் இப்போ நடந்த கல்யாணத்தை ஒத்துக்க முடியாது, அடுத்த வாரத்திலிருந்து அவர் கூடத்தான் இருக்கப் போறேன்னு சொன்னா... என்னை சமாதானப் படுத்தி உங்கப் பையன் கூட வாழ வைப்பீங்களா... பதில் சொல்லுங்க....”

“என்னம்மா இது பொண்ணு நீ இப்படி பேசலாமா....”

“இந்த மாதிரி சொல்லி சொல்லித்தானே நீங்க ஆண்கள் ஆடறீங்க....”

“ஆண்கள்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேணா இருக்கலாம்.... கல்யாணத்துக்கு அப்பறம் அவன் ராமனா மாறினா பொண்ணோட அதிர்ஷ்டம்.... இல்லைன்னா தறி கெட்டுத்திரியும் அவனை நீதான்ம்மா திருத்தணும் அப்படின்னு கையைக் காமிச்சுட்டு ஒதுங்கிடுவீங்க... காலம் முழுக்க இப்படி ஒரு ஆளோட நாங்க கஷ்டப்படணும்..... எனக்கு ஒரு விஷயம் புரியலை.... ஒரு இருவத்தஞ்சு, முப்பது வருஷம் வளர்த்த உங்களாலேயே அவனைத் திருத்த முடியலைனும்போது, அவனைப் பத்தியோ, இல்லை அவனோட குடும்பத்தைப் பத்தியோ எதுவுமே தெரியாம வர்ற பொண்ணு திருத்தணும்ன்னு எப்படி நீங்க எதிர்ப்பார்க்கறீங்க.... உங்க வீட்டையே எடுத்துக்கோங்க.... அடுத்த வாரம் உங்கப் பையன் ஊரை விட்டு அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு ஓடப்போறாரு... ஒரு வருஷம் கழிச்சுத்தான் வரப்போறாரு.... இதுக்கு என்ன பண்ணப் போறீங்க.... அவர் கூடவே என்னைப் போக சொல்லி, அவங்க கூடவே இருந்து அவங்களுக்கு புத்தி சொல்ல சொல்றீங்களா.....”

“ஏய் எதுக்கு இப்போ எங்கப்பாவை எதிர்த்து பேசிட்டு இருக்க... எனக்கும், உனக்கும்தானே பிரச்சனை.... என்கிட்ட நேரடியாப் பேசு....”

“காதலிச்ச பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்காம, கல்யாணம் பண்ணின பெண்ணையும் ஒழுங்கா வச்சு வாழத் தெரியாத உன்னை மாதிரி கோழைக்கூட எல்லாம் நான் பேசத் தயாரா இல்லை..... உன்னை இதைவிட கேவலமான பேருல கூப்பிடத்தான் ஆசை... ஆனா எங்கம்மாப்பா இருக்காங்களேன்னு டீசென்ட்டா கூப்பிட்டேன்....”

“இந்த பேச்செல்லாம் வேண்டாம்.... நீ எனக்கு விவாகரத்து கொடுத்தாலும், கொடுக்காட்டியும் நான் ரேஷ்மா கூட சேர்ந்து வாழறது உறுதி....”, என்று கூற ஆத்திரத்தில் மறுபடி ஆதர்ஷை அடிக்க வந்தார்கள் அர்ச்சனாவின் அண்ணன்கள்.

“அண்ணா விடுங்க... இந்த மாதிரி கோழையை எல்லாம் அடிச்சு உங்க கையை அழுக்காக்கிக்காதீங்க.... விவாகரத்துதானே சார்.... கண்டிப்பாக் கிடைக்கும்... ஆனா நீ சொன்னியே காதும் காதும் வச்சா மாதிரி.... அதுக் கிடையாது....  விவாகரத்துக் கிடைக்கறதுக்குள்ள உன்னை எந்த அளவு ஆட்டி வைக்கறேன்னு பாரு... இனி ரேஷ்மா இல்லை எந்தப் பெண்ணையுமே நிமிர்ந்து பார்க்க முடியாத அளவு உன் மானத்தை வாங்கிட்டுதான் விடுவேன்.... பொண்ணுங்க எப்போவுமே பூப்போல இருக்கமாட்டாங்க... சில நேரம் புயலா மாறும்போது உங்களால அதோட தாக்கத்தை தாங்க முடியாது.... இதுதான் கடைசி முறை நான் உங்க வீட்டை சேர்ந்தவங்களை பார்த்து நல்ல விதமா பேசறது.... இனி கோர்ட்ல சந்திக்கலாம்...  அதுவரைக்கும் என் மூஞ்சிலேயே முழிக்காதீங்க....”, என்றாள் அவள்.

 

This is entry #139 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவிற்கான கதை

எழுத்தாளர் - ஜெய்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.