(Reading time: 17 - 34 minutes)

ன்னையும் பிடிக்கலை, இந்தக் கல்யாணத்தையும் பிடிக்கலைன்னு இப்படி ஓபனா சொல்றேனே... இன்னமும் என்கூட வாழணும்ன்னு உனக்கு ஆசை இருக்கா.....”, ஆத்திரத்துடன் கேட்டான் ஆதர்ஷ்.

“இல்லை, நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் மண்டைய ஆட்டுவேன்னு நீங்க நினைச்சுட்டு பேசினீங்களே அதான் கேட்டேன்... நீங்க first என்னோட ரெண்டாவது கேள்விக்கு பதில் சொல்லுங்க...”

“நான் அடுத்த வாரம் பெங்களூர் போய்ட்டா, அப்பறம் இந்த சைடு ஒரு வருஷம் வர்றதாவே இல்லை.... நேருல பார்த்தாதான் அவங்களால என்னை மிரட்ட முடியும்.... எப்படியும் உனக்கும், எனக்கும் விவாகரத்து ஆகிட்டா அப்பறம் அவங்க ரேஷ்மாவை ஏத்துக்கறதுல ஒண்ணும் பிரச்சனை இருக்காது... சரி இப்போ என்னோட கேள்விக்கு பதில் சொல்லு.... நீ ஒரு வருஷம் கழிச்சு என்னை விவாகரத்து பண்ண ஒத்துக்கறியா...”

“நான் ஒத்துக்கறது இருக்கட்டும்... அதுக்கப்பறம் உங்க ரேஷ்மா உங்களை கல்யாணம் பண்ண சம்மதிப்பாங்களா...”

“நான் சொன்னதையே நீ கேக்கலையா.... எங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்துதானே பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னேன்... அங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் தங்கப்போகிறோம்....”, அவன் மேலும் சொல்ல வருவதற்குள் கை நீட்டித் தடுத்தாள் அர்ச்சனா.

“இதுக்குமேல உங்களோட இந்தக் கேவலமான பேச்சைத் தொடறாதீங்க.... நாளைக்கு காலைல என்னோட முடிவை சொல்றேன்.... எப்படியும் உங்க வீட்டுல உங்களோட லவ், அப்பறம் இஷ்டமில்லாத கல்யாணம் இதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கும்... So ஒண்ணு நீங்க வெளிய போய் படுங்க... இல்லைன்னா எனக்கு வேற ரூம் காட்டுங்க நான் அங்க படுக்கறேன்.... உங்கக்கூட ஒரே ரூம்ல என்னால இருக்க முடியாது....”

“இல்லை நீ இங்கப் படு, நான் மாடிக்குப் போறேன்... நாளைக்கு காலைல உன்னோட முடிவை சொல்லு...”,என்று கூறி ஒரு தலைகாணி, பெட்ஷீட்டை எடுத்தபடி வெளியேறினான் ஆதர்ஷ்.

தர்ஷ் மிக மிக சந்தோஷமாகவே இருந்தான்.... அவன் நினைத்தது அர்ச்சனாவிற்கு புரிய வைத்து அவளை கன்வின்ஸ் செய்ய மிகவும் கஷ்டப்பட வேண்டும் என்று... அதேப் போல் அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் அதை அடக்குவது பெரும்பாடாக இருக்கும் என்று.... ஆனால் அதைப்போல எந்த வேலையும் வைக்காமல் அர்ச்சனா சாதாரணமாக அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டதை அவனால் இன்னும் நம்ப முடியவில்லை... மிகுந்த உற்சாகத்துடன் ரேஷ்மாவிற்கு அழைத்து இங்கு நடந்ததை பகிர ஆரம்பித்தான் ஆதர்ஷ்.

அழகான அலங்காரத்துடன் இருந்த முதலிரவு அறையைப் பார்த்த அர்ச்சனாவிற்கு முதலில் வேதனை கலந்த சிரிப்புத்தான் வந்தது... இத்தனை அலங்காரமும் யாருக்காக என்று... அடுத்து என்ன செய்வதென்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..... அத்தனை நேரம் ஆதர்ஷிற்கு நேராகக் காட்டக் கூடாது என்று அடக்கி வைத்திருந்த கண்ணீர் தானாகவே வழிய ஆரம்பித்தது... பிறகு அழுவதால் ஒரு நன்மையும் இல்லை இது சிந்திக்க வேண்டிய நேரம் என்று அடுத்து என்ன செய்ய என்று யோசிக்க ஆரம்பித்தாள்.... அரை மணிநேர சிந்தனைக்குப் பின் ஒருவாறாக முடிவுக்கு வந்தாள்....

றுநாள் காலை ஏழு  மணிக்கு எழுந்த ஆதர்ஷ், அவன் அறைக்கு வர, அங்கு அர்ச்சனாவைக் காணாது திகைத்தான்.... ஒரு வேளை கீழே அம்மாவுடன் இருக்கிறாளோ என்று கீழே வந்து பார்க்க, அங்கும் காணவில்லை....

“என்னப்பா ஆதர்ஷ்... நீ மட்டும் வர்ற.... அர்ச்சனா குளிச்சுட்டு இருக்காளா?”

“இல்லைம்மா அவ ரூம்ல இல்லை... அதுதான் கீழ இருக்காளான்னு பார்க்க வந்தேன்....”

“அவ இன்னும் கீழ இறங்கி வரவே இல்லையேப்பா... ஒரு வேளை தோட்டத்துல இருக்காளோ...”, என்று கூற அங்கு சென்று பார்த்தும் அவளைக் காணவில்லை.  ஆதர்ஷிற்கு பயம் பிடித்துக் கொண்டது.... தான் சொன்னதைக் கேட்டு விரக்தியில் தவறான முடிவுக்கு வந்துவிட்டாளோ என்று....

வீடு முழுவதும் அவளைத் தேடியும் காணவில்லை... அவளின் கைப்பேசிக்கு அழைத்தால் அது அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.... இப்பொழுது அவளை சென்று எங்கு தேடுவது என்று தெரியாமல் அனைவரும் தவிக்க.... ஆதர்ஷின் கைப்பேசி ஒலித்தது.... அர்ச்சனாவின் அப்பா அவனை அழைத்து, அவர்கள் வீட்டில் உள்ளவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு உடனடியாக அவர்களின் வீட்டிற்கு வர சொன்னார்.

“எதுக்குடா இப்போ அந்த மனுஷன் நம்மளை அங்க வர சொல்லுறார்....”

“அர்ச்சனா அங்கதான் இருக்காளாம்மா....”

“இவ எதுக்கு காலங்கார்த்தால எழுந்து அங்க போனா... ஆதர்ஷ் உண்மைய சொல்லு... நீ ஏதாவது அந்தப் பொண்ணு கூட தகராறு பண்ணினியா...”

“ஏம்மா அவ அங்கப் போனா அவளைப் போய் ஏன் போனான்னு கேளுங்க... எங்கிட்ட எதுக்குக் கேள்வி கேக்கறீங்க...”

“சரி மொதல்ல கிளம்பி அங்க போவோம்.... இங்க உக்கார்ந்து பேசறதால ஒரு பிரயோஜனமும் இல்லை....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.