(Reading time: 17 - 34 minutes)

ர்ச்சனா, எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லை.....”,ஆதர்ஷ் சொல்ல, மறுபடி  அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள் அர்ச்சனா.

அவளின் அதிர்ச்சிப் பார்வையைப் பார்த்து சிறிது தயங்கிய ஆதர்ஷ் சொல்லாமல் தீராது என்று அவளிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

“நான் என்கூட வேலை பண்ற ஒரு நார்த் இந்தியன் பெண்ணை கிட்டத்தட்ட மூணு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கேன்...”

“ஓ... அப்போ அதை உங்க வீட்டுல சொல்லி அவங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாமே...”

“சொல்லாம இருப்பேனா.... எங்க வீட்டுல ஜாதி, மதம், மொழின்னு ஆயிரத்தெட்டு விஷயம் சொல்லி ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க...”

“பெற்றோர் அப்படித்தான் சொல்லுவாங்க... நீங்கதான் உங்க காதல்ல உறுதியா இருந்து போராடி இருக்கணும்...”

“நான் போராடலைன்னு கண்டயா நீ.... நான் லவ் பண்ண ஆரம்பிச்ச ரெண்டாவது வருஷமே எங்க வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு.... அதுலேர்ந்து எங்க வீட்டுல இருக்கறவங்க கூட போராடிட்டுதான் இருக்கேன்.... உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர விஷயம் கூட எனக்குத் தெரியாது... சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகணும் அப்படின்னு சொல்லித்தான் என்னை வர சொன்னாங்க... அங்க வந்த பிறகுதான் அது பொண்ணு பார்க்கற படலம்ன்னே தெரியும்....  வீட்டுக்கு வந்த பிறகு நானும் பலவிதமா இந்த கல்யாணத்தை நிறுத்த ட்ரை பண்ணினேன்....”, அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த அர்ச்சனா...

“என்ன இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா உங்கம்மா, அப்பா தற்கொலை பண்ணிப்போம்ன்னு மிரட்டினாங்களா....”

“ஆமாம், எலி மருந்து எடுத்து வச்சுட்டு குடிச்சுடுவோன்னு மிரட்டல்... ஹேய், ஒரு நிமிஷம்... உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்... ஏற்கனவே எங்க வீட்டுல இருக்கறவங்க சொல்லிட்டாங்களா...”

“ச்சே ச்சே, யாரும் சொல்லலை... இந்த சினிமா, கதை இதுல எல்லாம் இப்படித்தானே வருது.... அதுனாலதான் அப்படி நடந்து இருக்குமோன்னு கேட்டேன்”, அர்ச்சனா சொல்ல அவள் நக்கலாக கூறுகிறாளோ என்று பார்த்தான் ஆதர்ஷ், ஆனால் அர்ச்சனாவின் முகம் அதி தீவிரமாக இருந்தது.... அர்ச்சனா ஆதர்ஷ் நினைத்ததை விட படு அழுத்தக்காரியாக இருந்தாள்.

“ஹ்ம்ம் அவங்க என்னைப் படிக்க வச்சு இந்த நிலைமைக்கு கொண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க.... So ஒரு லெவல்க்கு மேல எதிர்ப்பு தெரிவிக்க முடியலை.....”

“உங்க அம்மா, அப்பா விஷ பாட்டிலைக் கையில எடுத்தா மாதிரி நீங்களும் எடுத்து இருக்கலாமே... உங்களுக்கு அவங்க மேல பாசம் இருக்கறா மாதிரி அவங்களுக்கும் உங்க மேல இருக்குமே.... ஈஸியா தற்கொலை செஞ்சுப்பேன்னு மிரட்டி அவங்களைப் பணிய வச்சிருக்கலாமே...”

“நான் அப்படி சொன்னா, சரி வா குடும்பத்தோட செஞ்சுக்கலாமேன்னு சொல்லுவாங்களேத் தவிர கல்யாணத்துக்கு ஒத்து வர மாட்டாங்க....”

“சரி இப்போ இந்தக் கதை எல்லாம் எங்கிட்ட எதுக்காக சொன்னீங்க.... கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு காதல் இருந்ததுன்னு எனக்குத் தெரியணும் அப்படிங்கறத்துக்காகவா, அப்படின்னா எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை..... ஏன்னா கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் நான் கேள்வி கேக்க முடியாது..”

“அதுக்காக மட்டும் இல்லை... என்னால உன்னோட சேர்ந்து வாழ முடியாது....”

“நீங்க சொல்றது புரியலை....”

“இதுல புரியாம இருக்க என்ன இருக்கு அர்ச்சனா... என்னால ரேஷ்மாவத் தவிர யார்கூடவும் வாழ முடியாது.... அதனால நீ விலகிடு...”

“ரேஷ்மா.... நைஸ் நேம்... விலகிடுன்னு ஈஸியா சொல்றீங்களே.... நேத்து கல்யாணம் பண்ணி இன்னைக்கு விலகறது அப்படின்னா என்ன அர்த்தம்... உங்க வீட்டுல எப்படின்னு எனக்குத் தெரியாது... ஆனா எங்க வீட்டுல எல்லாரும் இடிஞ்சு போய்டுவாங்க...”

“அது... விலகறதுன்னா உடனே இல்லை... ரேஷ்மா ஒரு ஐடியா கொடுத்தா....”, ரேஷ்மா சொல்லியதை எப்படி அர்ச்சனாவிடம் சொல்லுவது என்று தயங்கினான் ஆதர்ஷ்.

“பரவாயில்லை அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க... இத்தனை சொல்லிட்டீங்க... மத்ததை சொல்ல என்ன தயக்கம்....”

“அது வந்து... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் முடிஞ்ச உடனே mutual consent-ல டிவோர்ஸ் வாங்கிக்கலாமாம்.... நாம ஒரு வருஷம் பிரிஞ்சு இருக்கணும் அதுக்கு.... ரேஷ்மாக்கும், எனக்கும் பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு... அடுத்த வாரம் சேரணும்.... நானும், நீயும் தனியாத்தான் இருப்போம்... அதையே காரணமா சொல்லி டிவோர்ஸ் வாங்கிடலாம்... இந்த ஒரு வருஷ டைம்ல நீ ரெண்டு வீட்டு ஆளுங்களையும் கன்வின்ஸ் பண்ணிடு....”

“ரொம்ப ஈஸியா சொல்லிட்டீங்க.... உங்க ரேஷ்மா சொன்னா சரி.... இதுக்கு நான் எப்படி ஒத்துப்பேன்னு நீங்க நினைச்சீங்க... அதே மாதிரி நம்ம கல்யாணம் நடக்கணும்ன்னு விஷத்தை தூக்கின உங்க அப்பாம்மா இப்போ டிவோர்ஸ் பண்ணக்கூடாதுன்னு அதே விஷத்தை தூக்கினாங்கன்னா என்ன பண்ணுவீங்க....”, அர்ச்சனா கேட்க, முதல் கேள்வியிலேயே அதிர்ந்து நின்றான் ஆதர்ஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.