(Reading time: 17 - 33 minutes)

நானும் வீட்ல இருந்து ஹொஸ்பிடலுக்கு உடனே கிளம்புனேன் என்னோட கார்ல. போற வழியில் திடீரென்று ஒரு பொண்ணு வந்து ரெண்டு பக்கமும் கையை காமிச்சு ட்ராபிக்கை நிறுத்த ஆரம்பிச்சுட்டா . என்னடான்னு பார்த்தா ஸ்கூல் பசங்க கிராஸ் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தா . அப்பா என்னா பொண்ணு டா சாமி செம்ம அழகு . அவ முகத்த பார்த்த எனக்கு இந்த உலகமே மறந்து போச்சு. நான் என்ன பண்றேன் எங்க இருக்கேன் எல்லாம் மறந்து . உடனே கார விட்டு இறங்கி அவ பின்னாடியே போக ஆரம்பிச்சுட்டேன். எவ்ளோ தூரம் போனேனோ தெரியல யாரோ ஒருத்தவங்க என்கிட்ட யார் சார் வேணும்னு கேட்டாங்க. அப்ப தான் தெரிஞ்சது நான் ஹாஸ்பிடல் வந்துருக்கேன்னு. நான் முன்னாடி போற பொண்ண கை காமிக்க அவங்க பிளட் குடுக்க வந்தவன்னு நினைச்சுகிட்டு உள்ள கூட்டிட்டு போய்ட்டாங்க .

"சகலகலா வல்லவனே ........" அப்படினு பாட்டு கேட்ட உடனே என் மொபைலை எடுத்து பார்த்தா ரமேஷ் .

ஹலோ , டேய் லக்கி எங்க டா இருக்க . இங்க டீன் உனக்காக வைட்டிங் டா .

ஹேய் ரமேஷ் , நான் பிளட் தான் குடுத்துட்டு இருக்கேன் .

ஹான் ..... பிளட் ..... எங்க டா ..........

அப்போது தான் லக்கி தன்னை சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு ஒன்றும் புரியாமல் அங்கே வந்த நர்ஸிடம் இது எந்த பிளோர் என்று கேட்டான். அதற்கு அந்த நர்ஸ் அவனிடம் இது முதல் பிளோர் என்று சொன்னார்.

ரமேஷிடம் டேய் நான் அதே ஹொஸ்பிடல்ல முதல் தளத்தில பிளட் குடுத்துட்டு இருக்கேன் டா.

அங்கே ரமேஷோ தன் தலையில் அடித்து கொண்டு ஹய்யோ டேய் நான் சொன்னது தேர்ட் பிளோர் டா . நீ ஏன் டா அங்க போன . ஓஹ் எப்பவும் போல மறந்துட்டியா சரி வச்சு தொலை நான் இங்க மேனேஜ் பண்றேன் .

அதுக்கு அப்பறம் லக்கி ரமேஷ தனியா கவனிச்சது அவனோட ரத்தம் வேறு ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியது எல்லாம் தனி கதை . ரத்தம் குடுத்து முடித்து ஹொஸ்பிடலில் இருந்து அந்த பொண்ணை தேடி கொண்டே வந்தான்.அப்போது அருகில் இருந்தவர்களில் ஒருவன் இவனிடம் வந்து வெளியே ஒரு ஆக்சிடென்ட் காரை பயங்கரமாக இடித்து விட்டார்கள் . வந்து உங்க காரான்னு செக் பண்ணிடுங்க அப்படினு சொன்னான்.

லக்கி சட்டென யோவ் போயி யாரு காரோ அவங்ககிட்ட சொல்லு . அப்டின்னு சொல்லி முடிக்கும்போது தான் நினைவு வந்தது தான் காரில் வந்தது. வேகமாக வெளியே வந்து பார்த்தால் அந்த பரிதாபத்துக்கு உரிய கார் அவனோடது தான். நல்ல வேலையாக இடித்தவர்களை அங்கு இருந்த ஒருத்தர் பிடித்து வைத்து இருந்தார். அவருக்கு நன்றி கூறி விட்டு காரை பார்த்தால் பின்பகுதி மொத்தமும் டேமேஜ் . அவன்களிடம் அடித்து பிடித்து கறாராக பேசி ஒரு வழியாக பணம் தர ஒத்துக்கொண்டார்கள்.

சார் எவ்வளவு எதிர்ப்பார்க்கிறீங்க ?

ஹ்ம்ம் ...... ஒரு இருபது ஆயிரம் .", லக்கி

சார் இது ரொம்ப ஜாஸ்தி .இருபது எல்லாம் முடியாது வேணா பத்துல முடிச்சுக்கலாம் .என்ன சொல்றீங்க.

அது ...... "சகலகலா வல்லவனே ..........." பாட்டு கேட்ட உடனே போன எடுத்து பார்த்து விட்டு சொல்லு டா ரமேஷ் என்று அவனிடம் உரையாடிவிட்டு வைத்தவன் எதிரில் பார்த்தான்.

இப்போ எவ்ளோ தான்னு முடிவை சொல்லுங்க . சார் ஒரு பதினஞ்சு என்று ஒருவன் சொல்ல லக்கி அமைதியாக இருக்கவும் இன்னொருவன் பதினேழு ....... அவன் சொல்லி முடிப்பதற்குள் லக்கி வேகமாக என்னிடம் பத்தாயிரம் தான் இருக்கு இந்தாங்க புடிங்க . இதுக்கு மேல ஒரு பைசா இல்லன்னு சொல்லி பணத்தை கொடுக்க அவன்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு பெற்றனர். அவன்கள் கிளம்பியதும் திரும்பி காரை பார்த்தான் லக்கி . அச்சச்சோ போச்சு மறந்துட்டேனா டேய் நில்லுங்க டா டேய் ....................................................

ரு நாள் ஹொஸ்பிடல்ல லக்கி பிளட் டெஸ்ட் பண்ணும் போது அப்பா கால் பண்ணி உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன் . இன்னைக்கு உன்ன மீட் பண்ண அவங்க அப்பா வருவாங்க .சரியா பத்து மணிக்கு டா .

டேய் லக்கி மறந்துடாத டா . சரியா பத்து மணிக்கு. அவன் மும்முரமாக டெஸ்ட் பண்ணி கொண்டு இருந்த போது அவனுடைய கலீக் வந்து அவனை பார்க்க விசிட்டர் வந்திருப்பதாக கூறி சென்றான். லக்கி சிரித்து கொண்டே ஓகே என்று தலையாட்டினான். தன்னை ஒரு முறை சரி பார்த்து கொண்டு லேபில் இருந்து வெளியே வந்து லாபி நோக்கி திரும்பியவனிடம் டீயை நீட்டினான் பியூன் . லக்கி தான் அப்பறம் எடுத்து கொள்வதாக சொல்ல பியுனோ சார் திரும்ப எல்லாம் கொண்டு வரமாட்டேன் .இப்பவே எடுத்துக்கோங்க.

சரி என்று டீ கப்பை எடுத்து ஒரு சிப் பண்ணான் லக்கி. உடனே அவன் முகம் அஷ்டகோணலாக மாறியது . பியூனை பார்த்து கோபமாய் ஹேய் இது டீயா இல்ல சக்கரை தண்ணியா என்று கேட்டான் லக்கி .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.