(Reading time: 17 - 33 minutes)

ங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே வச்சுக்கோங்க சார் , பியூன்

ஓஹ் , அப்படியா சரி வா உனக்கு டீ எப்டி போடுறதுன்னு சொல்லி தரேன் . ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கோ .

ம்ம்ம்ம் ........ முதல்ல ஒரு கப் பால அடுப்புல வச்சுனு ஆரம்பிச்சு லக்கி ஒரு ரெண்டரை மணி நேரமா அந்த பியூனுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தான். சரியாக அதே நேரம் ரமேஷ் வந்து டேய் லக்கி , இங்க என்ன பண்ணிட்டு இருக்க லஞ்ச் டைம்ல . லக்கி தன் வாட்சில் டைம் பார்க்க அது ஒன்று என்று காட்டியது.

ஓஹ் , சரி வாடா ரமேஷ் என்று அவனை கூட்டிக்கொண்டு சென்று விட்டான் லக்கி. அங்கே அந்த பியூனின் நிலைமையை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . பாவம் இன்னும் ரெண்டு நாளைக்கு அவனுக்கு காதே கேக்காது.

லக்கி தன் நண்பன் ரமேஷுடன் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டு சென்றான். இங்கே லாபியிலோ அவனை பார்க்க வந்தவர் தன் வாட்ச்சையும் வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்.அவர் வந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகிவிட்டது . அவரின் பொறுமை போய்க்கொண்டு இருந்தது .லக்கி தன் உணவில் கை வைக்கும் போது அவனின் அப்பா அவனுக்கு கால் செய்து அவனிடம் , " டேய் அவர் என்ன டா சொன்னார் "

யாருப்பா , என்ன சொல்லணும் .

அச்சச்சோ போச்சு மறந்துட்டியா . டேய் உனக்கு பொண்ணு பார்த்தேன் . அவங்க அப்பா உன்ன பார்க்க வந்தாரே . இப்ப எல்லாம் போச்சா . உன்னை எல்லாம் என்ன டா பண்றது .

அப்பா அவர் நம்பர் கொடுங்க . நான் பார்த்துகிறேன்..

இன்னும் என்ன பார்க்க போற . போடா டேய் .......

அப்பா கொடுங்க பா .என்னைய அப்பறம் திட்டிக்கலாம் .

நம்பரா , அச்சோ இப்போ நான் மறந்துட்டேனே . சரி உனக்கு மெசேஜ் பண்றேன்.

பை பா .

தாமதிக்காமல் உடனே அவருக்கு கால் பண்ணி லக்கி அவரிடம் மன்னிப்பு கேட்டு தான் அவர் இருக்கும் இடம் உடனே வருவதாக சொன்னான். அவர் வேண்டாம் என்று மறுக்க அவரை சமாதானம் செய்து தான் கிளம்பி விட்டதாக சொன்னான். இந்தமுறை கூடவே ரமேஷையும் உடன் அழைத்து சென்றான் அந்த காபி ஷாப்பிற்கு .அங்கே சென்றதும் வண்டியை பார்க் செய்து விட்டு இறங்கிய லக்கியின் கண்களுக்கு கண்ணாடியில் அந்த பெண்ணின் முகம் தெரிந்தது.அவன் தன்னை மறந்து போனான் . அப்போது அவனிடம் வந்து ஒரு பிச்சைக்காரன் காசு கேட்க . லக்கி அந்த பெண்ணை பார்த்து கொண்டே தான் கையில் இருந்த பைக் சாவியை அவன் தட்டில் போட்டு விட்டான்.

நம்ம ரமேஷ் ஜெர்க் ஆகிட்டான். ஆனா அது எல்லாம் ஒரு வினாடி தான். தன்னை சுதாரித்து லக்கி யை இந்த உலகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தான் . ஒன்னும் பலன் தரவில்லை. இந்த கேப்பை பயன்படுத்தி அந்த பிச்சைக்காரன் பைக்கில் சென்று விட்டான். ரமேஷ் வேகமாக ஒரு பாட்டில் தண்ணியை லக்கி மீது தெளித்து அவனை தெளிய வைத்தான். ஒரு வழியாக லக்கி யிடம் நடந்ததை கூறினான் ரமேஷ் . இது எல்லாம் சில நொடிகளில் நடந்தது. அந்த பிச்சைக்காரனை துரத்தி ஓடி கொண்டு இருந்தார்கள்.

டேய் என் பைக்கை கொடு டா , லக்கி .

தர்மம் பண்ணிட்டா கேக்க கூடாது . இதுல போர்த்த் கியர் எப்படி போறதுன்னு தெரியலையே .

டேய் கிளட்ச் அமுக்கி கியர் பெடலை பின்னாடி அழுத்து டா . லக்கி யை சொல்லாதே என்று கத்தி கொண்டே ரமேஷ் ஓடி வர அதற்குள் அந்த பிச்சைக்காரன் பறந்திருந்தான்.

ரமேஷ் தன் தலையில் அடித்து கொண்டே லக்கி யிடம் ஏன் டா நான் தான் சொல்லாதேன்னு சொன்னேன்ல . உன்னலாம் ஒண்ணுமே பண்ண முடியாது டா. போடா என்று சலிப்பாக சொல்லி விட்டு திரும்பி காபி ஷாப்பிற்கு சென்றான். லக்கி யும் பின்தொடர்ந்தான்.

உள்ளே சோகமாக சென்றனர் இரு நண்பர்களும் . லக்கி அப்பா சொன்ன நபரை பார்த்து சிரித்து கொண்டே சென்றான் உடன் ரமேஷும் .பாதி தூரம் தான் சென்று இருப்பான் லக்கி யின் கல்லூரி தோழன் ஒருத்தன் அவனிடம் வந்து டேய் எப்படி இருக்க என்று கேட்டான். ரமேஷும் லக்கி யும் அவனிடம் டேய் இரு டா அப்படினு சொல்றதுக்குள்ள அவன் ஹேய் நான் லவ் பண்ண பொண்ண தூக்கிட்டேன்னு சொன்னான்.அடுத்த செகண்ட் நம்ம லக்கி அவன் காலேஜ்மெட் கூட பிளான் டிஸ்கஷன் . ரமேஷ் எவ்ளவோ சமாளித்தும் ஒன்றும் முடியவில்லை.அந்த டிஸ்கஷன் சென்றது ஒரு மணி நேரம் . எதிரில் காத்திருந்தவரோ கோபமாக எழுந்து லக்கி யிடம் வந்து திட்டி விட்டு சென்று விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.