(Reading time: 17 - 33 minutes)

மேஷ் உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் டா . நீ தைரியமா ரெஸ்ட் எடு . உன்னோட லக்கி உனக்காக எதுவும் செய்வான். இதை விட வேறு என்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு ரமேஷுக்கு இப்போது உலகமே அவனுக்கு சொந்தம் ஆனது போல் தோன்றியது. லக்கி யை சந்திக்கும் வரை தனக்கு என்று யாரும் இல்லையே என்று தினமும் கடவுளை நிந்திப்பவன் . இப்போது கடவுளுக்கு கோடி முறை நன்றி கூறி கொண்டிருந்தான் லக்கி யை தன் வாழ்வில் அறிமுக படுத்தியதற்கு. லக்கி மூலமாக அவன் இது நாள் வரை அனுபவித்து இராத சந்தோஷம் மற்றும் நட்பின் ஆழம் எல்லாம் கிடைத்தது.

லக்கி டாக்டரிடம் அட்ரஸ் எல்லாம் கேட்டு கொண்டு கிளம்பி விட்டான் . அவன் சென்ற பின் டாக்டர் மிகவும் சோகமாக கடவுளே நீ தான் ரமேஷை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டி கொண்டார். மற்றொரு டாக்டர் அவரிடம் என்னாச்சு எதுக்காக இப்படி சோகமா இருக்கீங்க அதான் லக்கி போயிருக்கான்ல . அதுக்கு அவர் அவன் போயிருக்கது தான் சார் என்னோட கவலையே .

உங்களுக்கு அவன பத்தி தெரியாது. ஒரு சமயம் அவன் பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போய் இருந்துருக்கான் . அங்க பக்கத்துல ஒரு வீட்ல ஏதோ காண்ணாடி உடையற சத்தம் கேட்டுருக்கு . அங்க போய் பார்த்தா ஒரு கர்ப்பிணி பெண் வலியில கிழ விழுந்து கெடந்துருக்காங்க . லக்கி கொஞ்சம் கூட தாமிதக்காம அவங்கள தூக்கிட்டு கார்ல ஹாஸ்பிடல் கிளம்பிட்டான் . போறான் போறான் சந்து போந்து எல்லாம் போறான் ஆனா ஹாஸ்பிடல் தான் வரவே இல்ல . ஒரு ஒரு சந்துலயும் நின்னு எல்லார்கிட்டயும் கேட்டா இவன ஒரு மாதிரி பார்த்துகிட்டே சொல்றாங்க . யோவ் முட்டுசந்துல வந்து ஹாஸ்பிடல் எங்க இருக்குன்னு கேட்டா எப்படியா போ மெயின் ரோட்டுக்கு போ. எங்கெங்கேயோ போய் கடைசில ஒரு இடத்துல வந்து நின்னு அங்க போறதுன்னு தெரியலையேன்னு முழிச்சுக்கிட்டு நின்னான். சுத்தி முத்தி பார்த்தா கடைசில ஒரு ஹாஸ்பிடல் இருந்தது அங்க. ஒரு பத்து நிமிஷத்துல போக வேண்டிய இடத்துக்கு முக்கால்மணி நேரமா போயிருக்கான்.இப்ப சொல்லுங்க என் டென்ஷன்ல ஒரு நியாயம் இருக்குல்ல.

இங்க இப்படி இருக்க நம்ம லக்கி சென்னை டு பெங்களுரு ஜெட் வேகத்துல போயிட்டு இருந்தான். மனசுக்குள்ள லக்கி நோ டைவெர்சன் ரமேஷை பத்தி மட்டும் தான் திங்க் பண்ணனும். ஆனா போகும்போது நிறையா தடைகள் வந்தது லக்கி முதல் முறையா தன்னோட மனதை சிதற விடல. ஒரே சீராக ஹாஸ்பிடல் சென்று இதயத்தை பெற்று கொண்டு சென்னை வந்து சேர்ந்து விட்டான்.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் ஆபரேஷன் முடிய போகுது . அங்கு இருந்த டாக்டரால் இன்னமும் நம்ப முடியவில்லை . அதோ இதோ என்று டாக்டர் ot விட்டு வெளியே வந்தார் . லக்கி யை பார்த்து பெரியதாக புன்னகைத்து ஆபரேஷன் சக்ஸஸ் . இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் ரமேஷ் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று சொன்னார். இதுநாள் வரை அவர் லக்கி யை பார்த்த கண்ணோட்டம் இன்று முதல் மாறிவிட்டது போல் தோன்றியது அவனுக்கு.

இதோ நட்பு என்னும் ஒன்று பந்தத்திற்குள்ளும் வராது உறவுக்குள்ளும் வராது . லக்கி மற்றும் ரமேஷின் நட்பு தன் மனதையே கட்டுப்படுத்தி செயல் பட வைத்ததை நினைக்கும் போது பெருமையாக இருந்தது.

மேஷ் பழைய படி பூரணமாக உடல்நலம் தேறி விட்டான்.லக்கி க்கு அவனுடைய ஹாஸ்பிடலில் இருந்து ட்ரான்ஸ்பிளான்டேஷனுக்கு உதவியதற்காக ஒரு அவார்ட் பங்கசன் ஏற்பாடு பன்னிருந்தார்கள் .அந்த அவார்டை வாங்கி தன் நட்பிற்கு சமர்ப்பித்தான் . எல்லாம் முடிந்து அடுத்த நாள் ஹொஸ்பிடலுக்கு வேலைக்கு வந்து காரில் இருந்து இறங்கினான் லக்கி. அவனை பார்த்ததும் வேகமாக வந்த செக்யூரிட்டி அவனை பார்த்து சார் நீங்க ஏன் செப்பல் போட்டிருக்கீங்க .ஷூ போடலையா .

அச்சச்சோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மறந்துட்டேனே . ஹ்ம்ம் ............. சமாளிப்போம் .

அது ..........வந்து ......................... நியூ ஸ்டைல் .........ஹா ஹா ஹா ........... இது எப்டி இருக்கு....

This is entry #144 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - நிவேதா கார்த்திகேயன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.