(Reading time: 24 - 48 minutes)

2017 போட்டி சிறுகதை 143 - உங்கள் முகம் ஏன் வட்டமாக உள்ளது? – புவனேஸ்வரி கலைசெல்வி

This is entry #143 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி / கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

 Kids

ஹாய் ப்ரண்ட்ஸ் .. கதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பின்குறிப்பு மாதிரி ஒரு முன்குறிப்பு. இது ஒரு உண்மை கதையின் பின்னணியில் எழுதுவதினால், கதைக்களம் மலேசியாவில் இருப்பதாகவே எழுதியிருக்கேன். இந்த கதை 2025இல் நடப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்! வாங்க கதைக்குள் போவோம்!

டேசா செமெர்லாங் (இடம் பெயர்) தமிழ்ப் பள்ளி! அந்த பள்ளியின் பெயரைப் பார்த்ததுமே  மனதிற்குள் சிலிர்த்துக் கொண்டாள் அவள். ஒரு நாளில் சொல்லி முடித்துவிட முடியுமா இந்த பள்ளி அவளுக்கு வாரித் தந்த நினைவுகளும் படிப்பினைகளும்?

2005-இல் தனது பன்னிரண்டாம் வயதில், தொடக்கநிலை கல்வியை முடித்துவிட்டு அந்த பள்ளியிலிருந்து முழுவதுமாய் விடைப்பெற்றிருந்தாள் அவள். அதன்பின் இடைநிலைக் கல்வி பயில்வதற்கு தேசிய இடைநிலைக்கல்வி பள்ளியில் சேர்ந்தாள். அதன்பின் காலத்திற்கேற்ப வாழ்க்கை அதன் வழியில் போனது.

மலேசியாவை பொருத்தமட்டிலும், சீனர்களும் தமிழர்களும் ஆரம்ப கல்விக்கு மட்டுமே  அவரவர் விருப்பத்திற்கான பள்ளியில் படிக்க முடியும். வெவ்வேறு இடங்களில் பறக்கும் பறவைகளான மாணவர்கள் அனைவருமே இடைநிலைக் கல்வி , அதாவது ஏழாம் வகுப்பு படிக்கும்போது “தேசியப் பள்ளியில்” மற்ற இன மாணவர்களுடன்  இணைந்தே படிக்க வேண்டும்.

மாணவியாக அந்த பள்ளியை விட்டுச் சென்றவள், இப்போது தமிழ்ரஞ்சனின் அன்னையாக அங்கு தினமும் வருகிறாள். காரை பள்ளியின் முன் லாவகமாய் அவள் நிறுத்தவும்,

ம்மா.. டாட்டா” என்று  வாய்மொழிந்தான் அவளது ஏழு வயது மகன் தமிழ்ரஞ்சன். வழக்கம்போலவே, மகனின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு “ டாட்டா கண்ணா.. நல்ல பிள்ளையா இருக்கணும்.. பத்திரமா இருக்கணும்.. படிப்புல டவுட் இருந்தால் டீச்சர்கிட்ட தயங்காமல் கேட்கணும்.. சரியா?” என்று தனது வழக்கமான வசனத்தைக் கூறினாள் அவள்.

தமிழ்ரஞ்சன் அவள் பார்வையிலிருந்து மறையும்வரை அமைதியாய் இருந்த அந்த கார் மறுபடியும் சாலையில் சீரி பாயத் தொடங்கியது.

மலர்கள் கேட்டேன் வரமே தந்தனை” என்று வானொலியில் பாடல் ஒலிக்கவும், “ப்பா..எத்தனை வருஷம் ஆனாலும் சரி, ரஹமான் சார் ரஹமான் சார்தான்!” என்று சிலாகித்துக் கொண்டவள், அப்போதுதான் அந்த புத்தகத்தைப் பார்த்தாள்.

“தமிழ்ரஞ்சன்!”  என்ற பெயரைப் பார்த்ததுமே காரை மீண்டும் பள்ளிக்கு திருப்பினாள் அவள். “ இந்த வாண்டுக்கு இந்த வயசுலேயே அப்படி என்னத்தான் ஞாபக மறதியோ! என்னை மாதிரியே இருக்கான்! கையில் வெச்சிருந்த புக்கை இப்படி விட்டுட்டு போயிட்டானே! என் அருமை புதல்வா!” என்று வாய்விட்டு வசனம் பேசிக்கொண்டே காரை பள்ளி வளாகத்தின் வெளியே நிறுத்தினாள் அவள்.

முக்கியமான காரணங்கள் இல்லாமல் இதுவரை அவள் அந்த பள்ளியில் காலடி வைப்பதில்லை!காரணம் அவளுக்கு மட்டும்தான் தெரியும்!அவளைப் பொருத்தவரை பள்ளி வாழ்க்கை என்பது இமைக்கும் நொடியில் நினைத்து பார்த்துவிட்டு மறந்துவிடும் விஷயம் இல்லை. நினைவுகள் என்பவை மீள முடியாத சுழல். அந்த சுழலுக்குள் விழுந்தால் நிகழ்காலத்திற்கு உடனே திரும்புவது என்பது அவளுக்கு சிரமம் தான். அதனாலேயே பள்ளியின் நினைவுகளை ஒதுக்கி வைத்து விடுவாள் அவள். ஆனால் விதியோ,இன்று உன்னை நினைவெனும் சுழலில் தள்ளி விடுகிறேன் பார் என சூளுரைத்தது.

வாசலில் இருந்த செக்யூரிட்டியிடம், “ நான் மிசர்ஸ் பார்கவி மனோரஞ்சன், முதலாம் வகுப்பு க்லாஸ் டீச்சர் மிசர்ஸ் லீலாவதியை நான் பார்க்கணும்!” என்றாள் பார்கவி.

“என்ன விஷயம் மேடம் ?”

“ என் மகன் தமிழ்ரஞ்சன் அவருடைய புக் விட்டுட்டு போயிட்டார்..” என்று புத்தகத்தை பார்கவி சுட்டிக் காட்டவும், அதே நேரம், அங்கிருந்த ஃபோன் அடிக்க, செக்யூரிட்டி ஃபோனில் பேசத் தொடங்கினார்.

தன் கையில் இருந்த புத்தகத்தை லேசாய் புரட்டி பார்த்தாள் பார்கவி. அதில் ட்ராயிங் பேப்பரில் வரைந்திருந்த ஓவியமொன்று இருந்தது.

“ தமிழ் இப்படி வரைய மாட்டானே..” என்று சந்தேகித்தப்படி அந்த ஓவியத்தை அவள் பார்க்க, அந்த காகிதத்தின் ஓர் ஓரத்தில் “ காவியா ரவீன் ஜெயராம் ”என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

“ரவீன் ஜெயராம்!’ என்ற பெயரை படித்தவளின் இதயம் நூறு மடங்கு அதிவேகமாய் துடித்தது. இத்தனை நாட்களாய் இதயத்தில் ஓர் ஓரமாய் இருந்த அவனது முகம் சட்டென கண்முன் மின்னியது!

காவியா,தமிழ்ரஞ்சனின் தோழி. சிலமுறைகள் தான் அவளுடம் பேசி இருக்கிறாள் பார்கவி. ஆனால், காவியா “ரவீன் ஜெயராமின்” மகள் என்று அவளுக்கு தெரியாமலே போனது! இதைத்தான் விதி என்பார்களோ?

“என் ரவீனோட பொண்ணா காவியா?”என்று முணுமுணுத்தாள் பார்கவி. ஃபோன் பேசிவிட்டு வந்த செக்யூரிட்டியிடம்,

“ சார் , நானே இதை கொண்டு போயி கொடுக்க முடியுமா?” என தவிப்புடன் கேட்டாள் அவள்.

“ உங்க ஐடென்டிடீ கார்டு கொடுத்துட்டு போகலாம் மேடம்” என்று அவர் பதில் கூறவும், தனது அடையாள அட்டையை கொடுத்துவிட்டு தமிழின் வகுப்பறைக்கு ஓட்டமும் நடையுமாய் விரைந்தாள் பார்கவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.