(Reading time: 17 - 33 minutes)

மேஷுக்கு லக்கி யை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை . ஆனால் லக்கி யோ , டேய் வாடா மச்சான் காபி சாப்பிட்டு போகலாம் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.

ஏனென்றால் அவனுக்கு தெரியும் லக்கி எதுவும் வேண்டும் என்றே செய்யவில்லையே . அப்பறம் வருத்தப்பட்டு பட்டு என்ன ஆக போகிறது . இதை தான் அவன் ரமேஷிடம் முதல் முறை கேட்ட போது சொன்னான்.

திடீரென ஒரு நாள் ஹாஸ்பிடலில் இருந்து லக்கி க்கு ஒரு போன் கால் வந்தது.அதை அட்டென்ட் செய்தவன் முகமே மாறி போனது . உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்து கொண்டிருந்தான் . மனம் முழுக்க பயம் வியாபித்திருந்தது. அங்கு சென்று பார்த்தால் ரமேஷை ஐசியூவில் அட்மிட் செய்து இருந்தார்கள். அவனுக்கு என்ன ஆயிற்று என்று மனதுக்குள் புலம்பி கொண்டே லக்கி டாக்டர் அறைக்கு சென்றான். அங்கே அவன் கேட்ட செய்தி அவனை கதி கலங்க வைத்தது.

அவன் மொத்தமாக ஆடி தான் போனான் .இருந்தும் தன்னை சமாளித்து கொண்டு ரமேஷை பார்க்க ஐசியூ சென்றான் லக்கி.

உள்ளே தன் நண்பன் சோர்ந்து போய் படுத்து கொண்டிருந்தான். ரமேஷ் இவனை பார்த்ததும் புன்னகைக்க முயன்று கொண்டிருந்தான். ஆனால் பாவம் லக்கி யின் நிலைமை தான் . அவனால் சிரிக்க முடியவில்லை. வேகமாக ஓடி சென்று ரமேஷை கட்டி பிடித்து அழுது விட்டான். லக்கி யை ஒருவாறு சமாதான படுத்தினான் ரமேஷ்.

அவனை அமர சொல்லி பருக தண்ணீர் தந்தான். லக்கி ரமேஷையே பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு ரமேஷின் மேல் கோவம் கோவமாக வந்தது.

ஏன் டா என்கிட்டே முன்னாடியே சொல்லல .

அது ...... வந்து ........ சொல்லி மட்டும் என்ன ஆக போகுது . உன்னை கஷ்டப்படுத்த விரும்பல டா . அதுவும் இல்லாம நம்ம கைல ஒன்னும் இல்லையே . இப்ப தான் எல்லாம் கிடைச்சிருச்சே . சோ பீ ஹாப்பி மேன் .

என்னமோ போடா . உன்கிட்ட ரொம்ப நேரம் கோவம் கூட படமுடியல .

ஹா ஹா ஹா ..........

நீ எப்பவும் இப்படியே சிரிச்சு கிட்டே சந்தோசமா இருக்கணும் டா .

ரமேஷிடம் பேசி விட்டு அவனை ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு வீடு நோக்கி புறப்பட்டான் லக்கி.கை தான் கார் ஒட்டுகிறதே ஒழிய மனம் முழுவதும் டாக்டர் சொன்னதிலேயே இருந்தது. எப்படி அப்படி சொல்ல முடியும். அவர் சொன்னது இது தான் ரமேஷிற்கு இதயம் ரொம்ப பலவீனமா இருக்காம் . அதுனால சீக்கிரம் ட்ரான்ஸ்பிளான்டேஷன் செய்ய வேண்டுமாம். கேட்ட இவனது மனது சுக்குநூறாய் உடைந்தது. மேலும் டாக்டர் சொன்னார் ரமேஷிற்கு இது பற்றி ஏற்கனவே தெரியும். தான் அவனிடம் ஆபரேஷனை முன்பே செய்ய சொல்லிருந்தேன் . ஆனால் அவன் கேட்கவில்லை. அவனுக்கு இப்போது ஒரு இதயம் கிடைச்சு இருக்கு . அது பெங்களுருவில் உள்ள ஹாஸ்பிடலில் இருந்து இங்க கொண்டு வரணும். எங்ககிட்ட இப்போதைக்கு யாரும் அவைலபிலா இல்ல . ஸோ நீங்க தான் அதுக்கு அரேஞ் பண்ணனும். எவ்ளோ சீக்கிரம் கொண்டு வரீங்களோ ரமேஷிற்கு அது ரொம்ப உதவி பண்ணும். நாம லேட் பண்ற ஒவ்வொரு நொடி ஆப்பரேஷனுக்கு சிக்கல் கூடிட்டே போகும்.

லக்கி அடுத்த நாள் டாக்டரிடம் சென்று அந்த இதயத்தை நான் கொண்டு வருகிறேன் என் நண்பனுக்காக என்றான். அவருக்கு அதிர்ச்சி ஏனென்றால் லக்கி யை பற்றி அவருக்கு தெரியும். அதனால் அவர் ஒத்துக்கவில்லை .

டாக்டர் என்ன நம்புங்க . என் நண்பனோட உயிர் விஷயத்துல நான் எந்த அலட்சியமும் இல்லாம நடந்துப்பேன்.

லக்கி நான் உன்ன நம்புறேன் .

இதை கேட்டதும் அவன் மெல்லிய புன்னகை பூத்தான் ஆனால் அதை முடிப்பதற்குள் டாக்டர் அவனிடம்,

உன்னோட மைண்ட என்னால எந்த காரணத்துக்காகவும் நம்ப முடியாது. என்னால ரமேஷோட லைஃப்ல எந்த ரிஸ்கும் எடுக்க முடியாது.

எவ்வளவோ முயன்றும் டாக்டரை கன்வின்ஸ் பண்ண முடியல லக்கி யால . இத எல்லாம் கேள்விப்பட்ட ரமேஷ் டாக்டரிடம் சார் ப்ளீஸ் லக்கி என்ன சொல்றானோ அத அவனையே பண்ண விடுங்க. எனக்கு அவன் மேல முழு நம்பிக்கை இருக்கு. எனக்கு ஒன்னும் ஆகாது டாக்டர்.லக்கி க்கு ரமேஷை நினைத்து பூரிப்பாக இருந்தது.

அவனை சந்தித்து தேங்க்ஸ் சொன்னான் லக்கி . டேய் தேங்க்ஸ் எல்லாம் சொன்ன அப்பறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் டா லக்கி. போடா நீ மனுஷன்னு யார் சொன்னது . அடேய் ..........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.