(Reading time: 22 - 43 minutes)

தற்கிடையில் ரஞ்சித்திற்கு வேலை விஷயமாக ஆறுமாத காலம் டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்தது... இருவருக்குமே ஒருவரையொருவர் விட்டு பிரிய மனமில்லை... இருந்தாலும் அவனுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை...  போகும்போது கூட நீ இங்கேயே இரு என்று அவளை வற்புறுத்தவில்லை... அம்மாவும், அப்பாவும் ஒருத்தரொக்கொருத்தர் துணையா இருப்பாங்க... இருந்தாலும் வயசானவங்க இல்லையா..?? நீ கூட இருந்தா நல்லா இருக்கும்... உனக்கு கஷ்டமா இருந்தா நீ அப்பாக் கூட போய் இருடா.." என்றான்...

காவ்யாவோ இங்கேயே இருக்க சம்மதித்துவிட்டாள்... அவனும் டெல்லியிலிருந்து இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வந்துப்போனான்... அப்படி வரும் நேரங்களில் இவளோடே நேரத்தை செலவிடுவான்... இந்த சூழ்நிலையில் தான் தன் பழைய நண்பன் ஆனந்தை காவ்யா சந்தித்தாள்...

இவளின் கெட்ட நேரமோ... அந்த நேரம் ஆனந்திற்கு பணம் தட்டுப்பாடு இருக்க..

காவ்யா நண்பர்களோடு சேர்ந்தெடுத்த புகைப்படங்கள் தன்னிடம் இருந்ததால், அதை வைத்து ஆபாச புகைப்படங்கள் தயார் செய்து அவளை மிரட்டி பணம் கேட்டான்... இதைப்பற்றி வெளியில் சொல்ல பயந்து, தன் தந்தையிடம் பணம் வாங்கி அவனுக்கு கொடுத்தாள்... முதலில் பணத்தை எதிர்பார்த்தவன், பிறகு அவளையே எதிர்பார்த்தான்... அதற்கு சம்மதிக்காதவளோ... நீ இந்த புகைப்படத்தை வைத்து என்ன செய்ய நினைத்தாயோ செய்... என்று சொல்லிவிட்டு வந்தாள்...

பணம் கொடுத்தது தவறு, இவ்வாறு பேசிவிட்டு வந்ததால் அவனுக்கு லாபமில்லை என்பதால் விட்டுவிடுவான் என்று நினைத்தாள்... அவனுக்கோ கிடைத்த வரை லாபம்... இருந்தும் அவள் அவ்வாறு பேசியதால், வலைத்தளங்களில் போட்டால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்பதால் அவள் வீட்டிற்கு அதை அனுப்பி வைத்தான்...

தன் மருமகளிடம் என்ன குற்றம் கண்டுப்பிடிக்கலாம் என்ற இவளின் மாமனார், மாமியார் ரஞ்சித் வரும்வரைக்கும் கூட காத்திருக்காமல் வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர்... என் மகன் இருந்தாலும் இதையே தான் செய்வான் என்றனர்...

வீட்டிற்கு வந்து தந்தையிடம் சொன்னால், உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைச்சா, நீயும் உங்கம்மா போல பேர் வாங்குவ போல.. என்று திட்டினார்.. அதன்பிறகு தான் இந்த முடிவை எடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.