(Reading time: 13 - 25 minutes)

2017 போட்டி சிறுகதை 151 - நலம் நலமறிய ஆவல்! - நீலா

This is entry #151 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - நீலா

Sad

ர்தா புயல்!!!

வர்தா புயல் வந்து கொண்டிருக்கிறது...எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்... தாழ்வான பகுதிகளிள் இருந்து வெளியேருங்கள்... தேவையான உணவு வகைகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்...' என்று பலவாராக செய்திகள் வந்துக்கொண்டிருந்தது.

வியாழக்கிழமை ...அலுவலகத்தில் உள்ள அந்த மீட்டிங் அறையில் சிரிப்பும் கூத்துமாய் இருந்தது!

ஏன்டீ மச்சி... இப்போதான்... இந்த திங்களும் செவ்வாயும் தான் போராட்டமா.. ரணகளமா.. போச்சு... அதுக்கே பீசிபி ரெடி பண்றதுக்குள்ள ஒரு வழியாய் போச்சு... இப்போ இது வேற புயல் வருது... புயல் வருதுனு வேற பயமுறுத்துராங்க... இந்த லட்சணத்துல இந்த ரணகளத்திலேயும் ஒரு குதுகலம் கேட்குதா?? எவடீ அது இப்போ மீட்டிங் வர சொன்னது?? என்று அலுத்துக்கொண்டேன் நான்.

என்னா மச்சி நீ... எல்லாம் உன் மேனேஜர் தான் இன்வைட் அனுபினாங்க... ' என்றாள் திவ்யா.

என் அஜண்டா திவ்ஸ்??' என்றது காயத்ரி

ஹும்ம்ம்... கிறிஸ்துமஸ் செலிப்ரேஷ்ன்ஸ்...' என்றது ஐஸ்வரியா...

அச்சோ!' என்று தலையில் கை வைத்துகொண்டேன். சட்டேன தட்டிவிட்டது இன்னோரு கை! 

எத்தன முறை சொல்றது உனக்கு கண்மணி... இப்படி தலையில கைவைக்காதேனு... எந்த கப்பல் கவுந்து போச்சுனு இப்படி ஒரு போஸ்... சொல்லுடீ??' என்று சிரித்த முகமாய் கண்களில் கோபத்துடன் நின்றிருந்தாள் தனு... தனுஜா!

ப்ச்ச்ச்... என்ன தனு?? எனக்கு வேலையிருக்கு தனு... ஸ்பான்சர் மீட்டிங் ஏழு மணிக்கு இருக்கு... அதுக்கான பிரச்ண்டேஷன் இன்னும் ரெடியாகல... நீ வேற ஏன்மா...?? என்றேன் நான்.

இரு இரு எங்க போற?? இரு உன் மேனேஜர் வரட்டும்.... அதுவரைக்கும் வெயிட் மச்சி என்றாள் தனு.

ஏண்டீ பேசமாட்ட... எல்லாம் என் காலம் என்று அலுத்துக்கொண்டேன் நான். ஏண்டீ உன் பொன்னு மனோரஞ்சனி எப்படியிருக்கா?? என்ன சொல்றார் அவங்க அப்பா?? என்றேன்.

மனோ நல்லாயிருக்காடி...இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு போகனும்...அவ ப்ளே ஸ்கூல்ல ஈவ்னிங் ஒரு பங்ஷன் இருக்கு...

அப்புறம்... உன்ற பாஸ் என்ன சொல்றார்?? என்று கண்சிமிட்டினேன்.

பாவம்டீ அவர்... இன்னைக்கு காலைல தான் வந்தார் ஊரிலிருந்து...அவருக்கு பிடிச்சதை சமைச்சி வெச்சிட்டு வந்தேன். ஈவினிங் பங்ஷன் போய்ட்டு அப்படியே மொபைல் வாங்கி தரேனு சொன்னார்... அதனால நான் சீக்கிரமா இன்னைக்கு ஜூட்!

அதற்குள் மேனேஜர் ரதி உள்ளே வர எல்லோரும் அதில் திசை திருப்பினோம்.

அரைமணி நேரம் கழிந்து தான் அனைவரும் வெளியே வந்தோம். மச்சி இதுதானு முன்னாடியே தெரியுமே... அப்புறம் எதுக்குடீ என்னைய வேற கூப்பிட்டீங்க...அதுதான் டீமுக்குநு ஒருத்தர்... திவ்ஸ்... காயூ..ஐஸ்...நு எல்லாரும் இருக்காங்களே...அது மட்டும் இல்லாம எங்க கிரியேடிவ் தல தனு.. நீயிருக்க... அதுமட்டும் இல்லாம என் மேனேஜர் ரதி வேற இருக்காங்க... இதுல நான் என்னடீ செய்ய போறேன்?? இதுல வாட்ஸாப் க்ரூப் வேற?!' என்று என்னால் அலுத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது!

ரொம்ப அலுத்துக்காத கண்மணி...நீ மேற்பார்வை பார்த்தா மட்டும் போதும்... அப்போ அப்போ உன் டூவீலரையும் Facilities டீமுக்கு டிக்கட் மட்டும் போட்டா போதும்... மத்தது எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்...கவலைய விடு... தனு இருக்க பயமேன்?' என்றாள் தனு என்கிற தனுஜா சிரித்தவாரே!

இதுதான்... இந்த சிரித்த முகம் தான்... இந்த சிரிப்பினூடே கேட்ட வார்த்தைகள் தான்...அவளிடம் நாங்கள் அனைவரும் பேசி மகிழ்ந்த நொடிகள் தான்... அவளுடன் நான் பகிர்ந்துக்கொண்ட கடைசி நொடிகள் என்று தெரியாமல் போய்விட்டது!

இதோ... இன்று அடுத்த வியாழக்கிழமை வர்தா புயல் முடிந்து ஆய்ந்து ஓய்ந்து அலுவலகம் வந்து சேர்ந்தேன் நான். மேனேஜர் வேகேஷனில் இருக்க மூன்று டீமையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு! காலை முதல் இருந்த மன சஞ்சலத்தை ஒதுக்கிவிட்டு அதி முக்கிய வேலைகளை முடித்து சற்றே நிமிர்ந்த நேரம் மணி மதியம் 12.15 என்றது! மிகவும் களைப்பாய் ஏதோ ஒன்று மனதை அழுத்திக்கொண்டேயிருக்க எழுந்து சென்று குடிக்க தண்ணீர் எடுக்க வந்தேன். அங்கே பதட்டத்துடன் ஓடி வந்த எங்கள் நண்பன் வேணு சத்தமில்லாமல் அந்த இடியை தலையில் இறக்கினான்.

என்னடா பிரச்சன உனக்கு எதுக்கு இப்படி இழுத்துட்டு போற?? அப்படி என்னடா எமர்ஜன்சி??

அமைதியாய் என் கண்பார்த்து சொன்னான்..."தனு இஸ் நோ மோர்!"

'என்ன??' என்று அதிர்ந்து நின்றேன்

தனு..நம்ம தனுஜா... இஸ் நோ மோர்!' என்றான்.

என்னடா சொல்ற?? அப்போதும் ஒன்றும் புரியவில்லை எனக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.