(Reading time: 3 - 5 minutes)

சிறுகதை - உலக அழகி - ஆர்த்தி N

Beautiful heart

ச்சி வெயில் மண்டையை பிளக்க வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்து அப்பேருந்தில் ஏறி காலியான இருக்கையில் அமர்ந்தாள் அனாமிக்கா.

சில நிறுத்தங்களுக்குப் பிறகு ஒரு வயதான மூதாட்டி ஏறினார். சுமார் எண்பது வயதிற்கு மேல் இருக்கும் அம்மூதாட்டிக்கு. பார்க்க மிக மோசமான முக அமைப்பும் ஒரு கிழிசலான சேலையும் அழுக்கு கட்டப் பையும் சகிதம் இருந்தார். அனாமிக்காவோ ‘கடவுளே அந்தப் பாட்டி இங்க உக்காரக் கூடாது வெயில்’ல ஏற்கனவே கச கச’நு இருக்கு இதுல இவங்க வேற இங்க உட்கார்ந்தா நான் நொந்துருவேன் ப்லீஸ்’ என இரக்கம் இல்லாமல் ஒரு வேண்டுக்கோளை முன்வைத்தாள்.

ஆனால் அனாமிக்காவின் அருகே இருந்த இருக்கை மட்டுமே காலியாக இருந்ததால் அவர் இவளின் அருகே இடித்துக் கொண்டு அமர்ந்தார். அனாமிக்கா ஒரு முக சுலிப்போடு தள்ளி அமர்ந்து ‘நமக்குன்னே வராங்கயா சை’ என உள்ளுக்குள் எரிச்சல் பட்டுக்கொண்டாள்.

சிறிது நேரம் களித்து யாரோ அவள் கையை சுரண்டவும் யாரு டா’னுப் பார்த்தா அந்த பாட்டி அவளது உள்ளங்கையை எடுத்து சில திராட்சை பழங்களை திணித்து ‘வெயிலடிக்குது கண்ணு சாப்பிடு உடம்புக்கு குளிர்ச்கியா இருக்கும்’ நு சொல்லிய பொழுது அவள் மெய்யிலும் வெட்கி தான் போனாள். இவள் மறுத்தும் அவர் கேட்கவில்லை.

இவள் உண்ணாமல் கையிலையே வைத்து இருப்பதை பார்த்து ‘அட இன்னும் சாப்பிடாம கையில வெச்சுட்டு என்ன கண்ணு செய்யற.. ம்ம் சாப்பிடு‘ என அவள் உண்ணும்வரை அவளை விடவில்லை அம்மூதாட்டி. அவர் தன்னை சுற்றி இருந்த அனைவருக்கும் பஸ்ஸின் நடத்துனர் உட்பட இதுப் போல தான் சில பழங்களை தந்துக் கொண்டிருந்தார். அனாமிக்கா எடுத்த கண் வாங்காமல் தன்னை கண்டுக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்ட அம்மூதாட்டி ‘என்ன கண்ணு இப்படி பார்க்கிற ½ கிலோ வாங்கினேன். நான் எப்பவும் மத்தவங்களுக்கு தந்துட்டு தான் சாப்பிடுவேன்’ என அம்மூதாட்டி கூறிய பொழுது அவரின் தோற்றம் வேனாலும் அழுக்காக பார்ப்பதற்கு அகோரமாக இருக்கலாம் ஆனால் அவரை விட உலகத்தில் சிறந்த அழகி எவரும் இல்லை என்றே தோன்றியது மனம் வெட்கிய அனாமிக்காவிற்கு.

அப்பேருந்தில் அனைவரின் மனதிலும் அம்மூதாட்டி ஓர் உயர்ந்த இடத்தில் சிம்மாசினமிட்டு அமர்ந்துவிட்டார். அன்பால் எவரையும் கட்டிப் போடலாம் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.!!!!

நன்பர்களே இது உண்மையில் என் கண்முன் நடந்த ஒரு விஷயம். அனாமிக்கா என்ற பெயர் எனது கற்பனை ஆனால் இங்கு நான் பகிர்ந்து இருக்கும் செய்தி உண்மையே. தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது என்பது நமக்கு தெரியும். ஆனால் அதை அன்று நான் நேரில் கண்டேன். காசு இருக்கும் பலரே மற்றவர்களிடம் எவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்துக்கொள்ள யோசிப்பார்கள். ஆனால் அன்று இவரின் தன்னலமற்ற அன்பு என்னை பிரமிக்க தான் செய்து விட்டது. குணத்தால் அவர் மிகப் பெரிய செல்வந்தரே!!!! என் கண்களுக்கு அவர் உலக அழகியாக தான் தெரிந்தார். இச்சம்பவத்தை தங்கள் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பியே சிறுகதையாக உங்களிடம் தந்திருக்கிறேன்.

ஏதாவது பொருந்தாமல் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.

தங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!!!

நன்றி!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.