(Reading time: 19 - 37 minutes)

சிறுகதை - சொந்தங்கள் வரமா சாபமா ? - கார்த்திகா கார்த்திகேயன்

Family

ரே நேரத்தில் இத்தனை பெரிய வலியையும்  வேதனையையும் தர முடியுமா  உறவுகளால் . சொந்தங்கள்  என்றால்  பலருக்கு மனத்தினுள் சந்தோசம் மட்டுமே தோன்றும். ஆனால் எனக்கு இன்று முதல் தோன்றுகிறது  வெறுப்பு

எப்போதுமே பாசத்துக்கு அடிமை தான் நான். ஆனால் பாசம் வைத்திருக்கிறேன் என்று நடிபபவர்களின் மேல் என்றுமே எனக்கு அன்பு வந்தது இல்லை. ஆனால் அப்படி நடித்தவர்களின் மேல் இனி மேல் எப்போதுமே இருக்க போவது வெறுப்பு மட்டுமே

வெறுப்பை மட்டும் வைத்து கொண்டு நான் ஒன்றும் செய்ய போவதில்லை தான். ஆனால் மலையளவு கோபத்தை வைத்து கொண்டு அவர்களை மாதிரி என்னால் பாசம் மாதிரி நடிக்க முடியாது.

மொத்தமான  அவமானம்  ஊரு சனம் அனைத்தும் கூடி இருக்கும் போது மொத்தமாக  கண்ணுக்குள் ஊசியை இறக்குவது போல் ஆழ  வைத்து விட்டார்கள்

எனக்குள் ஒரு நெருப்பை  பற்ற வைத்து போய் விட்டார்கள். காட்டுவேன் அவர்களுக்கு நான் யார் என்று. என்னை அத்தனை பேர் முன்னாடி  அசிங்க படுத்தி  கலங்கடிதவர்கள்  முகத்தில் கரியை  பூசாமல் விட மாட்டேன்

ஆனாலும் என்னால் என்னை  பெற்றவர்களையும்  அல்லவா இழிவு  படுத்தி விட்டார்கள். சரியான பதிலடி கொடுக்கும் வரை ஒய  மாட்டேன்.

இந்த உலகத்தில் வாழ்வது கடினம் மிக மிக. சுற்றி உள்ளவர்களின் கண் பார்வையில் இருந்தும் வாய் மொழியில் இருந்தும் தப்பிப்பது ரொம்பவும் கடினமான காரியம் . போட்டி  பொறாமை நிறைந்த உலகம் இது. தனக்கு ஒரு கண் போனால் அடுத்தவர்களுக்கு இரு கண்களும் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைந்த உலகம் இது.

இப்படி பொறாமை உள்ளவர்கள் தான் என் உறவினர்கள் என்று தெரிந்தும் நான் இத்தனை நாள் வேலை வாங்காமல் இருந்தது  என்னோட மிக  பெரிய  முட்டாள் தானம்.

யோசிக்க மறந்து விட்டேன் இத்தனை பெரிய விசயம் நடக்கும் இத்தனை பேர் முன்னிலையில்  அவமான  படுவேன்  என்று நினைத்து  பார்த்திருக்க வேண்டும்.

இத்தனை நாள் தாய் தந்தையின் சிறகுகடியில் நிம்மதியாய்  இருந்தேன். சிறகாய் மாறி அவர்களை காக்கும் வயது எனக்கு வந்து விட்டது என்பதை யோசிக்காமல் போய் விட்டேன் மற்றவர்களை பற்றி யோசிக்க மறந்து விட்டேன்

நான் சிந்து. படித்தது எம் ஈ . இரண்டு நாளாக தன்னை பார்த்த பாட்டி  தாத்தா அனைவரும் என் அப்பாவை பார்த்து  மகளா வலந்துட்ட  மா சின்ன  பிள்ளையில்  பார்த்தது நிறைய  படிச்சிருக்கனு  கேள்வி பட்டேன். அப்படி  தான் படிக்கணும். இந்த கிராமத்திலே அதிகம் படித்தது நீ தான் என்றார்கள்

அந்த சந்தோசாமானா  பேச்சை ஒரு நிமிடத்தில் குழைத்து விட்டார்கள். எனக்கு திறமை இல்லையாம் .படித்து வீண் . செலவு செஞ்சது வீணாம். எதுவுமே நான் முயற்சி செய்யலையாம் . இனியும்  பெற்றவர்களை காஸ்ட  படுத்த கூடாதாம்.

அவர்கள் சொன்ன வார்த்தை அனைத்தும் உண்மை தான். இல்லை என்று நானும் மறுக்க போவதில்லை. நான் முயற்சி செய்யாமலும் இல்லை  வேலை பார்காமலும்  இல்லை. பார்க்கிறேன் தான் ஆனால் சம்பளம் குறைவு. படித்த படிப்புக்கு ஏத்த வேலை தான்.

ஆனால் சொந்த ஊரில் வேலை பார்த்தால் சம்பளம் குறை வாக தானே தருவார்கள். எதை சொல்லி காயபடுத்தலாம்  என்று நினைப்பவர்கள் இந்த காரணம் கிடைத்தால் விடுவார்களா. மொத்தமாக சேர்த்து பழி வாங்கி விட்டார்கள்.

சொந்த வீட்டில் அம்மா அப்பா உடன் இருக்கும் இந்த சந்தோசம் எனக்கு கிடைத்தது குறைவு தான்.

இரண்டு நாளுக்கு முன்பு வீட்டுக்கு சொந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தது அப்பாவுக்கு தாத்தா இறந்து விட்டார் என்று. பெரியப்பா சித்தப்பா அத்தை  அனைவரும் தூரத்தில் இருப்பதால் நான் அம்மா அப்பா உடனடியாக சென்றோம். தாத்தாவுக்கு வயது 88 நல்ல சாவு தான் ஆனால் செத்தது மட்டும் சுடுகாட்டுக்கு அருகில்.

சிறு கலக மூட்டிகள்  உடலை ஊருக்குள் எடுத்து செல்ல கூடாது என்று சொல்ல அப்பா சண்டை பொடுவாரோ என்று பயந்தோம் ஆனால் அம்மா சொன்னாங்க அப்பா விடம்  அங்கயே காரியம் முடிக்கணும்  என்றாலும் முடித்து கொள்ளலாம்  நீங்க  பொறுமையாக இருங்க  என்று. சரி என்றார் அப்பா

முன்பு எல்லாம் அம்மா சொல்லுவதை எதையுமே  கேக்க மாட்டார் . அடுத்தும் ஊரில் இருந்து அழைத்தார்கள் என்ன செய்ய என்று வந்து கொண்டிருக்கிரம் வந்து பேசி கொள்ளலாம் என்றார் அப்பா.

 அதற்குள்  பெரியப்பா பெரியப்பா பையன்  எல்லாரும் நாங்க கிளம்பி விட்டோம் அதனால் வீட்டுக்கு கொண்டு வரட்டும் என்று.

அடுத்து ஊர்  காரங்க மறுபடியும்  கேட்டதர்க்கு இப்படி அண்ணன் வீட்டுக்கு கொண்டு வர சொல்கிறான் என்றார் அப்பா அவர்களும் சரி ஆனால் நீங்க  யாராவ்து இருந்தால் தான் எடுத்து செல்வோம் என்று விட்டனர். நாங்களும் போன பிறகு தான் வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.