(Reading time: 19 - 37 minutes)

வர்களுக்கு பெருத்த அவமானம் தான் தலை குனிந்த படியே சென்று விட்டார்கள்

அடுத்து அன்று இரவு அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது ஆச்சி என்னிடம் வந்து உங்க அத்தை சங்கிலி போட வந்ததை வேண்டாம்ணு சொல்லீட்டியாம் அப்படி சொல்லலாமா சிந்து

விடுங்க ஆச்சி நான் செஞ்சது சரி தான் பேத அம்மா உங்களை இது வரைக்கும் கண்டு கொண்டது கிடையாது நீங்க அவங்க வீட்டுக்கு போனாலும் நல்ல சாப்பாடு குடுத்தது கிடையாது திரும்பி வர பஸ் க்கு பணம் குடுத்தது கிடையாது சொந்த அம்மாவை கண்ணீர் விட வைத்தவர்களின் கையில் இருந்து நான் ஒத்த பைசா வாங்க மாட்டேன்

அப்படி சொல்ல கூடாது தாயி சொந்த பந்தங்கள் அப்படி தான் இருக்கும் நாம தான் பொறுத்து போகணும்

நீங்க பொறுத்து போங்க ஆச்சி ஆனால் நான் போக மாட்டேன் எனக்கு எப்போதும் ஒன்று போல தான் இருப்பேன் மாற மாட்டேன். சொந்தங்கள் எப்போதும் நமக்கு துணையா தான் இருக்கணும் தொல்லை யா இருக்க கூடாது இவங்க கூட நான் பொறுமையா போய் ஒரு பெரிய ஹோட்டல் ல போய் சாப்பாடு சாப்பிட்டா கூட கிடைக்காத நிம்மதி நாலு சாப்பாடு இல்லாதவங்களுக்கு சாப்பாடு குடுத்தா கிடைத்து விடும்

நீங்க தான் உங்க பொண்ணுக்கு பரிந்து வரணும். அவங்க இங்க இருந்து போன அடுத்த நிமிடம் உங்களை எல்லாம் மறந்து விடுவார்கள். இப்போது அவங்களுக்கு தெரியாது கட்டிய கணவனும் இறந்து போய் விட்டார் பிறந்தது இரண்டுமே பையன்கள் தான் நாளைக்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்தவுடன் உங்கள் மகள் மட்டும் தனியே இருப்பார்கள் பாருங்கள் அப்போது தெரியும் உறவுகள் என்றாள் என்ன அவர்களிடம் எப்படி பழக வேண்டும் அம்மா அப்பா வாய் நாம் பார்க்க வில்லை என்று

எத்தனை படித்து என்ன செய்ய அதிகமான பணம் இருந்து தான் என்ன செய்ய . சொந்த அத்தை யாக எனக்கு அவர்கள் ஏதும் செய்ய வில்லை அவர்களின் படிப்பை பயன் படுத்தி எனக்கு இது படிக்கலாம் அது படிக்கலாம் என்று அறிவுரையும் வழங்க வில்லை என்னை மதிக்காமல் வேலை கிடைக்க வில்லை என்று என்னையும் என்னை பெற்றவர்களையும் அவமான படுத்தி னார்கள் அவர்கள் சொல்லா விட்டாலும் கண்டிப்பாக நான் வேலை வாங்கி இருப்பேன் ஆனால் எங்களை கண்ணீர் விட செய்தவர்களின் உறவு எங்களுக்கு வேண்டாம் என் அம்மா அப்பா வேணும்னா அவர்களை மன்ணிககலாம் ஆனால் நான் மாட்டேன். அவர்களுக்கு நன்றியும் சொல்லணும் அப்படி பேச விட்டால் எனக்கு வேலைக்கு போகணும் என்று வெறியும் வந்திருக்காது எங்க அப்பாவும் என் கல்யாணத்துக்கு  அவர்கள் கொடுக்கும் பணத்தை பிச்சை வாங்கி இருப்பார் இப்போது தான் எல்லாருக்கும் நிம்மதி

இத்தனை கோபத்தை வைத்து கொண்டு அவர்களை மாதிரி என்னால் நடிக்க முடியாது இப்படியே போகட்டும் ஆச்சி விட்டு விடுங்கள் நீங்க உங்க மகள் வீட்டுக்கு போக வேண்டும் என்றால் போய் வாருங்கள் நாங்கள் எதுவும் சொல்ல வில்லை ஆனால் எங்களை அவர்களுடன் பொறுமையாய் பேச சொல்லாதிர்கள் எங்களால் முடியாது

நான் போக மாட்டேன் மா இது வரைக்கும் உங்க அப்பன் வீட்டில தான் இருந்துருக்கேன் அவனும் உங்க அம்மாவும் இது வரைக்கும் நல்லா பாத்து கொண்டார்கள் வேற யார் வீட்டிலும் போய் என்னால் நிம்மதியாய் இருக்க முடியாது எப்போ மண்டைய போட போறானோ அப்படியே உங்க தாத்தா மாதிரி என்னையும் நீங்களே தூக்கி போற்றுங்க

என்ன ஆச்சி அதுக்குள்ள போரததை பற்றி பேசுரீங்க இன்னும் ஏன் பிள்ளைங்கள பாத்துட்டு தான் போகணும் சரியா

சொந்தங்கள் என்பது வரமா சாபமா

எனக்கும் கோபம் இருக்கிறது அன்று விட்ட கண்ணீர் அவர்கள் சொன்ன வார்த்தைகள் ஊரில் உள்ளவர்கள் பார்த்த பார்வை அனைத்தும் ஞாபகம் இருக்கிறது ஆனால் சிறிது நாள் கழித்து இதே அத்தை அனைத்தையும் மறந்து தம்பி என்று வந்தால் அப்பா கண்டு கொள்ளாமல் போவாரா தான் ஒரே அக்காவை

இல்லை என் வீட்டுக்கு மன்னித்து வீடு என்று வந்தால் நான் தான் முகம் திருப்பி கொள்ள முடியுமா.

உறவுகள் என்பது எத்தனை பெரிய வரம் குழந்தைகள் முதல் கிழவன் வரை அனைவரும் ஒன்றாக இருப்பது எத்தனை நல்ல விசயம்

சித்தி சித்தப்பா அத்தை மாமா தம்பி தங்கை அண்ணன் அண்ணி பெரியம்மா பெரியப்பா சுற்றி இத்தனை பேர் இருந்தால் அந்த சுகமே தனி தான் ஏதாவது கவலை இருந்தாலும் யாராவ்து ஒருத்தர் முகம் பார்த்து கண்டறிந்து தீர்த்து விடுவார்கள்

எனக்கு கிடைத்த உறவுகள் அத்தனையும் நல்ல மனது உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது ஆனால் என் பிள்ளைகளுக்கு அனைத்து உறவுகளும் கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.