(Reading time: 19 - 37 minutes)

மாத வாடகை கட்ட முடியாமல் 10ம் வகுப்பு படித்தவர்கள் செய்யும் வேலை பார்த்தது. அதை பார்த்து விட்டு வேற வேலை தேடி செல்வதுக்கு லீவ் கேட்டால் கிடைக்கும் திட்டை வாங்கி கொண்டு அடித்து பிடித்து அங்கு சென்றால் அங்கு 100 கழியிடத்துக்கு ஒரு லட்சம் பேர் குவிந்திருபார்கள்

ஓவொரு முறையும் கிடைக்கும் தோல்வி வழியைும் தாங்கி கொண்டு வாழ்ந்திருக்கிறேன் நான் ஆனால் அதையும் சும்மா விடுவார்களா சொந்தங்கள்  அந்த வேலையை பார்த்தால் எப்படி தேட முடியும் என்று சொல்லி அதையும் விட வைத்து கடைசியில் வீட்டில் இருந்து பணமும் அனுப்ப முடியாமல் போய் ஊருக்கே திரும்ப வந்து அங்கு ஒரு அலுவலகத்தில் வெறும் 3000 ஒரு வேலை பார்த்தேன்.

அதும் குறை சொல்ல வந்து விடுவார்கள் தானே இது ஒரு வேலையா என்று . அடுத்து அரசு கல்லூரியில் எம் ஈ கிடைத்தால் படிக்கலாம் என்று நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று அரசு கல்லூரியில் கிடைத்து அதையும் முடித்து விட்டேன்

ஒவ்வொரு கல்லூரியிலும் ஏறி  இறங்கி வேலைக்காக அலைந்து திரிந்து ஒவ்வொரு கல்லூரி முகவரிக்கும் அப்ளிகேசன்  அனுப்பி அனுப்பி பணம் வீணானது தான் மிச்சம். கல்லூரியில் கேட்டது ஒன்று பணம் இல்லாவிட்டால் ரெகம்மன்டேசன் . ஆனால் தெரிந்தவார்களிடம் ரெகம்மன்டேசன்  கேட்டால்  அவர்களும் கேட்டது பணம் தான். கடைசியில் ஒன்றும் முடியாமல் போக மறுபடியும் முன்பு பார்த்த வேலையிலே இப்போதும் பார்க்கிறேன் நான்.

சம்பளம் மட்டும் 3000 இருந்து 7000 வந்திருக்கிறது. என்னுடைய படிப்புக்கு ஏத்த வேலை தான் வீட்டில் சும்மா அமர்ந்திருப்பதர்க்கு இதை பார்த்தால்  அனுபவம் கிடைக்கும். நாளை எங்காவது வேலைக்கு சென்றாலும் இத்தனை வருடம் என்ன செய்தீர்கள் என்று கேப்பார்களே அப்போது இந்த கம்பனி  பெயரையாவது  சொல்லி கொள்ளலாம் இல்லாவிட்டால் எதர்க்கும்  உபயோகம் இல்லாமல் போய் இருப்பேன்

அம்மா அப்பா வாள் நாலு பேரிடம் என் பொண்ணு பெரிய வேலையில்  இல்லை என்று சொல்ல முடிய  வில்லையே என்று வருத்தம் இருக்கும் தானே அதை சரி செய்ய  வேண்டும் என்று நினைத்து அரசு வேலைக்கு  படித்து கொண்டிருக்கிறேன் அதுவும் என்னுடைய நேரம் 10 மதிப்பெண்களில் அந்த வாய்ப்பும் என்னை விட்டு சென்றது

ஒரே தடவையில் கிடைக்கும் என்று எதிர் பார்த்தால் அது முட்டாள் தானம் தானே . இத்தனை வருடம் தமிழ் பாடத்தையே தொடாமல் புதிதாக அனைத்தையும் நாலு மாதத்தில் படித்து இத்தனை மதிப்பெண் பெற்றது என்னை பொருத்த வரைஇல் சாதனையே 3000 வாங்கிய சம்பளம் ஒரே வருடத்தில் 7000 வாங்குவது அதுவும் சாதனையே 

அது வரை இருந்த மன நிலை மாறி என்னால எதுவுமே முடியாது என்ற எண்ணம் என்னை விட்டு நீங்கி முயற்சி செய்தால் முடியும் என்று நம்பி என்னை நானே செதுக்கி கொண்டிருந்த நேரம் தான் அது 

சொந்த வீட்டில் இருந்து கொண்டு காலையில் 9 மணிக்கு வேலைக்கு சென்று ௫ மணி வரை என்னுடைய பதிப்பு சம்பந்தமான வேலையை பார்த்து கொண்டு 9 மணி வரை டீயூசன் எடுத்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நானும் பரிச்சை க்கு படித்து கொண்டு நிம்மதியாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கல் எறிந்து விட்டார்கள் 

சொந்த குடும்பத்தை விட சொந்தங்கள் தான் முக்கியம் என்று நினைக்கும் சில மூளை இல்லாதவர்கள் சொல்லலாம் அவர்கள் சொன்னது உன் நன்மைக்கு என்று ஆனால் இதே விசயத்தை அம்மாவின் தம்பி என் தாய் மாமா என்ன சொன்னார்கள் தெரி யுமா என்னை தனியாக கூப்பிட்டு பக்கத்தில் உக்காற வச்சு அதை யெ தான் சொன்னார்கள் 

நீ  முயற்சி செய் உன்னால முடியும் நான் உன்னை நம்புகிரேன் உனக்கு திறமை இருக்கு என்று. 

இப்ப இவளுக்கு எதுக்கு கல்யாணம் ஒழுங்கா ஒரு வேலைக்கு போக சொல்லு அதிகமா படிச்சிட்டு ஒண்ணுக்கும் உதவாம இருக்கூறததுக்கு எதுக்கு கல்யாணம் னு சொல்லுற கூட்டம் ஒரு புறம் உன்னால் முடியும் னே முயற்சி செய் உன் மேல அதிகமா நம்பிக்கை வைத்திருக்கிறேன் சொல்லுற உறவு ஒரு புறம் .

பொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் அம்மாவின் உறவுகள் தான் அதிக ஒற்றுதலுடன் இருப்பார்கள் அப்பாவின் உறவுகளில் பொறாமை நிறைந்தவர்கள் அதிகம் உண்டு உங்களின் வீட்டில் எப்படியோ என்னுடைய வீட்டில் அது தான் உண்மை என்று புரிந்து விட்டது 

எல்லாரும் பார்த்து சிரிக்கும் பாடி செய்து விட்டார்கள் அப்போதும் தனியாக உக்காந்து அழுது கொண்டிருந்த என்னை அம்மா அவர்களிடம் இருந்து பிறிது தனியே கூட்டி சென்று ஆறுதல் சொன்னார்கள் ஆனால் அம்மாவின் கண்ணிலும் கண்ணீர் 

உங்களையும் அவமான படுத்தி விட்டேன் மா என்னால தான் எல்லாமே எனக்கு திறமையே இல்லையாமா 

இங்க பாரு சிந்து அவங்க என்ன சொல்றது நான் உன் அம்மா சொல்றேன் என் பிள்ளைய பற்றி எனக்கு தெரியும் அவங்க சொல்றதை ஏதும் நினைக்காதே நீ கடைசி வரைக்கும் வேலைக்கு போக வில்லை என்றாலும் கூட நான் உன்னை பார்த்துகொள்ளுவெண் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.