(Reading time: 7 - 13 minutes)

சிறுகதைத் தொடர் - ஆகாய வீதியில் நான் - 04. நானும் சாம்பாரும் - ரேவதிசிவா

Sambar

சாம்பார் என்றாலே உணவுப் பிரியர்கள் பல பேருக்கு வாயில் நீர் ஊறும்.இதை எழுதும் பொழுதே எனக்கும் அவர்கள் நிலைதான்! (நானும் உணவுப் பிரியைபா)

வாவ்! இட்லியை சாம்பாரில் மூழ்க வைத்து உண்பதுப் போல் வேறு எதிலும் வராது! சாம்பார் இந்தியர்களின் உணவு வகை என்றாலும் பொதுவாக எல்லாரும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதைப்பற்றி அறிந்துக் கொள்வதற்கு முன், எனக்கு சாம்பாருக்கும் இடையே நடந்த ஊடலைப் பற்றி உங்களிடம் பகிருகிறேன்.

சாம்பார் என்றாலே அவ்வளவு பிடிக்கும் என்றிருந்த என்னை, சாம்பாரைக் கண்டாலே ஒடிவிடும் நிலைக்கு மாற்றிவிட்டப் பெருமை, என் அன்னையையே சேரும்!

சாதத்திற்கு,இட்லிக்கு,தோசைக்கு,பூரிக்கு,அடைக்கு,பொங்கலுக்கு,உப்புமாவிற்கு,சப்பாத்திக்கு என்று எதற்கு வேண்டுமானாலும் சாம்பாரை இணைத்து சாப்பிடலாம்.ஆனால் முக்கியம் அதை ஒவ்வொன்றிற்கும் ஏற்ற வகையில், பொருந்தியக் காய்கறிகளோடு செய்ய வேண்டும்.

உதாரணமாக, அடைக்கு சற்றுக் கெட்டியாக வைக்க வேண்டும்,சாதத்திற்கு நடுநிலையில்(அதாவது நீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல்) வைக்க வேண்டும்.இட்லிக்குக் கொஞ்சம் நீராக, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். காய்கறிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வெண்டைக் காய் சாம்பார் சாதத்திற்கு மட்டுமே நன்றாக பொருந்தும்.

எனக்கு மிகவும் பிடித்தது இட்லியும் சாம்பாரும்தான்.

இப்படி நான் சாம்பாருடன் சந்தோஷித்திக் கொண்டிருந்தது என் அன்னைக்குப் பொருக்கவில்லைப் போல்!

திடீரென்று ஒருநாள்,”இன்று நீ வை சாம்பார்” என்று சொல்லிவிட்டார்கள். நானும் சாம்பாரும் சண்டையிட ஆரம்பித்தோம். ஒருதடவை தண்ணீராக, மறுதடவை மிகவும் கெட்டியாக,இன்னொருதடவை காய்கறி சரியாக வேகாமல், புளி அதிகம், புளி குறைவு இப்படி பலமுறை பேச்சு வாங்க வைத்துவிட்டது அப்பொல்லா சாம்பார்! அன்று தொடங்கியது அதன்மேல் வெறுப்பு!

இரசித்து இருசித்துக் கொண்டிருந்த என்னை, அது மற்றவர் முன் சிரிக்க வைத்து விட்டது. இந்த சகோதரர்களுக்கு மிகப்பெரிய வேலையே தங்கள் சகோதிரிகளின் சமையல் திறனை மட்டம் தட்டுவதுதான்!

என் தமையன் மட்டுமென்ன விதிவிலக்கா? இந்த சாம்பாரினால் நான் பலதடவை வாங்கிக் கட்டி உள்ளேன்.

இப்படி சாம்பாருடன் நான் தொடங்கிய யுத்தம், ஒருநாள் நிறைவடைத்து. அதற்கே என்மேல் பரிதாபம் வந்துவிட்டது போல்! அன்றிலிருந்து “சமத்து சாம்பாராக” ஆகிவிட்டது.

சாம்பார்தான் சமத்தாகிவிட்டதே,அப்புறம் உனக்கென்ன பிரச்சினை என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை, அன்றிலிருந்து சாம்பார் வைப்பது என் வேலையாகிவிட்டது.(ஒழுங்காக வைக்கவில்லை என்றால் பேச்சு,சரி வைக்கிறோம் என்றால் அதுவே வேலையாகிவிட்டது)

முழு வெறுப்பு வந்ததும் இங்குதான்! என் சாம்பாரை என்னால் சாப்பிட முடியவில்லை. ஒருநாள் இருநாள் என்றால் பரவாயில்லை,ஆனால் தொடர்ச்சியாக நான் செய்ததையே சாப்பிடனும் என்றால்? அது மிகக் கொடுமை.

இதனால்தான் நண்பர்களே! சமத்து சாம்பாரின் மேல் எனக்கு வெருப்பு வந்துவிட்டது.

ஆனால் இப்பொழுதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உண்ணும் பொழுது, அவர்களின் சாம்பார் என் தட்டில் இருக்கும்!

சாம்பாரில் உள்ள சத்துக்களைக் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாமா?

பயிறு-முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படும் இதில் புரதசத்து அதிகம் இருக்கிறது.அதனால்தான் குழந்தைகள் முதல் பெரியவர் வரை, இதை உட்கொள்ள சொல்வர்.இதில் வைட்டமின்கள் மட்டும் தாதுப் பொருட்கள் இருக்கின்றன.

இரவில் பயிறு உண்பதை தவிர்த்தல் நல்லது. செரிமானத்தில் பிரச்சனை வந்து வாயு தொல்லைக் கொடுக்கும்.

வாயு பிரச்சனை-சிறுகுடலில் செரிமானம் ஆகாமல்,பெருங்குடலில் வரும்போதுதான், இவை ஏற்படும்.இதற்கு பல காரணங்கள் உண்டு.அதில் பயிறும் ஒன்று.

காய்கறிகள்-இவைகளைப் பற்றி சொல்ல வேண்டாம். ஒவ்வொரு காய்கறிகளுக்கும் தனித்தன்மை உண்டு.முடிந்தவரை காய்கறிகள் நிறைய சேர்த்து சமையுங்கள்.

வெங்காயம் தக்காளியைத் தவிர்த்து மீதம் உள்ள காய்கறிகளைப் பருப்புடன் ஆவியில் வேகவைத்து சாம்பார் செய்தால் சக்தி அதிகம் கிடைக்கும்.அப்படியே வதக்கிதான் வைக்க வேண்டுமென்றால் தீயைக் குறைத்து வதக்கி சமையுங்கள்.

புளி எவ்வளவுக் குறைவாக சேர்க்கிறீர்களோ,அவ்வளவு நல்லது.புளியை சுடுநீரில் கரைத்து ஊற்றுவது மிகநன்று.

இங்கு நாம் சமத்து சாம்பாரிடமிருந்து விடைப்பெருவோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.