(Reading time: 7 - 13 minutes)

ப்படி நான் சாம்பாரில் ஐக்கியமாகும் முன்பே(அதாவது சாம்பார் செய்வதற்கு முன்) பள்ளியில் படிக்கும்போது வந்ந ஒரு பெயர் சாம்பார் மான் (Sambhar deer).சமூக அறிவியலில் பல புது விலங்குகளின் பெயர்களைப் படித்திருந்தாலும்,இது நினைவில் உண்டு.காரணம் அதன் பெயரென்று சொல்லவும் வேண்டுமோ?

உங்களிடம் சமத்து சாம்பாரை மட்டும் சொல்லி தன்னைப் பற்றி சொல்லாததால், கனவில் கொம்புடன் வந்து மிரட்டுகிறது முரட்டு சாம்பார் மான்.

காலையில் எழுந்தவுடன், அதனைப் பார்க்க சென்றுவிட்டேன்.

சாம்பார் மான் ஆசியா கண்டத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது.பிற இடங்களிலும் காணப்படுகின்றன.இலை தழைகளை உண்பவை ஆகையால்,இவை காடுகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்களில் வசிக்கும்.இவைகளின் வாழும் காலம் 16-20 வருடங்கள். இவ்வினம் பாதிக்கப்படும் இடத்தில் உள்ளது. பெரும்பாலான புலிகளுக்கு இவையே பிரதான உணவு.புலிகள், இம்மானின் குரல் மாதிரி குரலெழுப்பி அவற்றை ஏமாற்றும் வல்லமைக் கொண்டது.

என்ன நீ உங்கள் இனம் செய்பவைப் பற்றி கூறாமல் இருக்கிறாய்? என்று கேட்டது மான்.

அதற்கான பதில் உங்களிடம்...

மனிதர்கள் இறைச்சிக்காகவும் அதன் கொம்புகளுக்காகவும் இம்மானை வேட்டையாடுகின்றனர்.

130-180 வரையிலான பிரிவுகள் உள்ள தாவரங்ளை இவை உட்கொள்கின்றன. இதன் மூலம் தாவரங்களின் எண்ணிக்கைக் குறைவதாலும், சில இடங்களில் இவை வேட்டையாடப்படுகின்றன.அந்தி மற்றும் இரவு நேரத்தில் மட்டுமே, இவை உற்சாகமாக வேலை செய்யும். பெரும்பாலும் குழுக்களாக இருக்கும்.

ஆண்மானுக்கு மட்டுமே கொம்புகள் உண்டு. இதனின் கொம்புகள் ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து,பின் வளரக் கூடியது. இதன் கொம்புகள் எலும்பால் ஆனவையல்ல.இவை உண்மையான கொம்பும் கிடையாது.

இப்படி இவற்றைப் பற்றி நிறைய சொல்லலாம்.

இப்பொழுது நான் ராஜஸ்தான் செல்கிறேன்,அதற்கு காரணமும் இதே மான்தான். அங்கு சாம்பார் ஏரி உள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு ஏரிதான் சாம்பார் ஏரி. ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டது. இந்திய மக்ளுக்குத் தேவைப்படும் 9% உப்பு, இங்கிருந்துதான் பெறப்படுகிறது.ஜெய்பூரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.சாம்பார் வனவிலங்கு சரணாலயமும் உள்ளது.பல பறவைகள் இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன.பறவைகளைப் பார்ப்பதற்குச் சிறந்த இடம்.

இந்த ஏரியைப் பற்றி நான் அறிந்துக்கொண்டதற்கு முக்கியக் காரணம், நம் மான்தான்,அதனால் ஏரியைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொண்டதிற்கான நன்றியை, நீங்கள் நம் மானிடம் தெரிவித்து விடுங்கள். இல்லை என்றால் என் மேல் வழக்கு தொடடுத்தாலும் தொடுத்து விடும்.

நண்பர்களே! உங்களுக்கு ராஜஸ்தான் போகும் வாய்ப்பு ஏற்பட்டால், அவ்வேரியையும்,சரணாலயத்தையும் சந்தித்துவிட்டு வாருங்கள். நம் மானைப் பார்க்க வேண்டுமென்றால்,பல இடங்களில் இருந்தாலும், மத்திய இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றது.

சமத்து சாம்பாரில் இருந்து சாம்பார் ஏரி வரை போய்விட்டு வந்ததால், எனக்கு பசிக்கிறது நண்பர்களே! நான் என் இட்லியையும் சாம்பாரையும் சந்தித்துவிட்டு பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்.

முக்கியக் குறிப்பு: “சாம்பார்” என்ற எனது உச்சரிப்பு மான் மற்றும் ஏரிக்குச் சரியாக இருக்கலாம்.இல்லை அவை “சம்பார்” அல்லது “சாம்பர்” என்றும் உச்சரிக்கப்படலாம்.

Sambar

This story is dedicated to all sambhar’s lovers.

Aagaya veethiyil naan

{kunena_discuss:1106}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.