(Reading time: 19 - 37 minutes)

னக்குள் அவர்கள் உருவாக்கிய அவமான வழி இருந்தாலும் எனக்கு ஆறுதல் சொல்லும் அன்னையின் முகம் என்றும் மறவாது 

அப்போது மனத்தினில் எழுந்தது ஒன்றே ஒன்று தான் இனி என் பெற்றோகள் என்னால் அவமான பட கூடாது. இந்த வருடம் இன்னும் மூன்று தேர்வுகள் இருக்கிறது அதில் ஒன்றில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் அனைவர் முகத்திலும் காரியை பூச வேண்டும். வேலை கிடைத்து விட்டால் மறுபடியும் பல்லை இளித்து கொண்டு வருவார்கள் 

சாப்பாட்டுக்கே கஸ்ட படும் போது எதுக்கு உன் மகளை பொறியியல் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவர்கள். இன்று அன்னைக்கு நாங்க சொன்னோம் எதுக்கு பொறியியல் என்று கேட்டியா என்றவர்களின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் 

இத்தனை வைராக்கியத்தொடும் மனத்தில் உறுதியோடும் இப்படி பேசி விட்டார்களே என்ற வலியோடும் இருக்கும் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் ஆனால் அவர்களுக்கு ஒரு பதிலடி கொடுக்காமல் நான் ஒய மாட்டேன் 

ரவு பகல் பாராது படித்தேன் போன பரிச்சையில் செய்த தவறுகளை ஆதித்த பரிச்சையில் திருத்தி கொண்டேன் ஆனாலும் அதிலும் என்னால வேலை பெற முடியவில்லை ஆனாலும் என் நம்பிக்கை மட்டும் போக வில்லை சரியாக 9 மாதம்  கழித்து பெற்றேன் வேலையை 

முதலில் அதை சொன்னது மாமா க்கு அழைத்து சொனேன்ன். என் மேல் நம்பிக்கை வைத்த அவரின் எண்ணத்தை நிறை வெற்றி விட்டேன் ஆனாலும் இன்னும் பதிலடி கொடுக்க வேண்டிய காலத்திற்காக காத்திருந்தேன் 

என்றுமே வாய் திறந்து எதுவுமே பேச மாட்டேன் என் அப்பாவிடம் அன்று பேசினேன் நான். எனக்கு கல்யாணம் முடிந்தாலும் சரி முடியாவிட்டாலும் சரி உங்க சொந்த காரர்களிடம் இருந்து ஒரு சின்ன தொகை கூட வாங்க கூடாது இது என் மேல் ஆணை 

ஆனால் அப்பா சொன்ன பதில் என்னை சந்தோசத்தை தந்தது. நான் அவர்களிடம் வாங்க மாட்டேன் அதை அன்னைக்கே அவர்களிடம் சொல்லி விட்டேன் 

என்னைக்கு என்ன சொன்னீங்க

நீ அன்னைக்கு ஆழும் போது மனத்துக்கு வருத்தமாக இருந்தது நீ போன உடனே அன்றே சொல்லி விட்டேன். என்ன சொன்னேன் தெரியுமா 

என் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க தான் போறேன் கூட பிறந்தவர்கள் உங்களிடமும் கலந்து பேசி செய்யலாம் என்று தான் இன்று பேச்சை ஆரம்பித்தேன் ஆனால் உங்களின் எண்ணம் புரிந்து விட்டது 

கல்யாணம் என்று சொன்ன உடனே உங்க கிட்ட உதவி கேப்பேன் என்று நினைத்தாயோ சத்தியமாக மாட்டேன் என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும் இனி இதை பற்றி பேச வேண்டாம் . இப்படி நான் சொன்ன உடனே உங்க அத்தை ஆரம்பித்தாள் எதுக்கு கல்யாணம் என்று அவளை நான் என்ன சொன்னேன் தெரியுமா 

ஒரே பொண்ணு என்று உனக்கு தான் அதிகம் செலவு செய்தார்கள் வீட்டில் அதிகம் படித்தது நீ தான் அதிகம் சம்பளம் வாங்குவது நீ தான் ஆனால் அத்தனை கஸ்டம் பட்ட இந்த அம்மா அப்பாக்கு நீ என்ன செஞ்ச மாசம் ஒரு 1000 அனுப்பி வச்சா உன் பண மூட்டையில் இருந்து குறைந்து விடுமா நீ பேசாத என் பொண்ணுக்கு என்ன செய்யணும் அவ வேலைக்கு போகவே இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை கடன் வாங்கியாவது செய்வேன் ஆனா உங்க கிட்ட கை எந்த மாட்டேன் இது வரை உங்க கிட்ட எதுவுமே நான் கேட்டது இல்லை இனியும் கேக்க மாட்டேன் 

கடைசி காலத்துல அம்மா அப்பாவ பாத்தது நான் தான் அவர் போய் சேர்ந்துவிட்டார் அம்மாவை நீங்க கண்டிப்பா பாக்க மாட்டீர்கள் அவளையும் நானே பார்த்து கொள்ளுவேன் 

சந்தோசத்தில் அப்பாவை கட்டி கொண்டேன் நான் . நான் கொடுக்க நினைக்கும் பதிலடியை என்றோ கொடுத்து விட்டார் அப்பா 

ரியாக 6 மாதம் கழித்து கல்யாணமும் வந்தது. அடுத்த நாள் கல்யாணம் என்று இருக்கும் போது முந்தைய இரவு அனைவரும் பேசி கொண்டிருக்கும் போது ஊரில் ஒரு பெரியவர் சொன்னார் கடைசியில் பொன்னை நல்ல படிக்க வைத்து நல்ல பையன் கிட்ட கல்யாணமும் செய்து வைக்க போறான் இங்க வா தாயி நீ நல்லா இருக்கணும் உங்க அம்மா ரொம்ப கஸ்ட பட்டுவிட்டாள் கடைசி காலத்துல ரெண்டு பேரையும் நீ தான் பாத்து கொள்ளனும் 

நீங்க கவலை படாதீங்க தாத்தா. எங்க அம்மா அப்பா பட்ட கஸ்டதை நான் சின்ன வயசில் இருந்தே பார்த்து கொண்டே தான் இருக்கிறேன் அதனால் இனி அவர்களை நன்றாக பார்த்து கொள்வேன் சில பேரை மாதிரி கடன் வாங்கி படிக்க வைத்து நல்ல வேலையும் வாங்கி தந்த பிறகு கருவேப்பிலை மாதிரி தூக்கி போட மாட்டேன். 

அந்த தாத்தா சொன்னார் என் அம்மாவிடமும் அப்பா விடமும் பேத்தியா எப்படி தெளிவா பேசினா நல்ல பொண்ணு பா

ஆமா மாமா அவ மித்த பிள்ளைங்க மாதிரி எதுக்குமே ஆசை பட மாட்டாள் இப்படி ஒரு பொண்ணு எங்களுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கணும் இப்ப கிடைச்சிருக்க மாப்பிள்ளையும் நாலா மாதிரி தான். எங்களுக்கு என்ன இனி வயசு ஆய்த்து எங்க பேர்ல பங்க்ல பணம் போட்டு வைத்து இருக்கிறாள் அதுவே போதும் 

அடுத்த நாள் திருமணத்தின் போது தன் கழுத்தில் தங்க சங்கிலி அணிய வந்து தன்னுடைய அந்தஸ்தை காட்டி கொள்ள வந்த அத்தை யை தடுத்து நிறுத்தி இதை எங்க அம்மா அப்பாவிடம் குடுத்து விடுங்கள் எனக்கு வேண்டாம் என்றேன் நான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.