(Reading time: 19 - 37 minutes)

னால் பெத்த  மகளும் மித்த  மகன் களும்  வந்தது அடுத்த நாள் மதியத்திற்கு  மேல் தான்.

தாத்தா வயது கிட்டதட்ட  தொண்ணூறு  நெருங்கி விட்டது. யாருக்குமே தொந்தரவு தராதவர் . தன்  உடையை கூட கடைசி வரை யாரையும்  துவைக்க விட்டது இல்லை. எத்தனை அருமையான மனிதர். கடந்த ஒரு வருடம் மட்டும் அடிக்கடி எங்காவது காணாமல் போய் தேட வைத்து விட்டார்.

இப்போதும் துலைந்து  போய் காட்டுக்குள் படுத்து அப்படியே உஈர்  போய் விட்டது. நல்ல சாவு தான் யாருக்கு கிடைக்கும் இத்தனை வயதில் பேத்தி பெயரன் கல்யாணம் பார்த்து அவர்கள் குழந்தைகளையும்  கொஞ்சும் பாக்கியம்.

கண்டிப்பாக கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் தாத்தாவின் எல்லா ஆசீர்வாதமும் என் அம்மாவுக்கு மட்டுமே கிடைக்கும்.  கடைசி காலத்தில் மட்டும் இல்லை அவருடைய எந்த பிள்ளைகளும் அவரை பார்க்காத போது மருமகளாய்  நடந்து கொள்ளாமல் மகளை போல்  பார்த்து கொண்டார்கள்.  

இரவு சில நேரம் வீட்டுக்குள் மோதிரம் பெய்து  விடுவார் அவரை அறியாமலே. அப்போது நான் கூட சில நேரம் முகம் சுலித்தது உண்டு ஆனால் அம்மா என்னை சமாதான படுத்துவார். அவர் ஒரு குழந்தை மாதிரி என்று. அருமையான மருமகள் ஆனால் யாரும் அறிய மாட்டார்கள் அம்மாவின் குணத்தை. சொந்தங்கள் அனைவருக்கும் முக்கியம் பணம் தான் 

அவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அதனால் பெத்த  தகப்பனையும்  தாயையும்  கவனிக்க தவறி விட்டார்கள். தினமும் ஊருக்கு  போகும் போது தாத்தா பாட்டிக்கு ஏதாவது  வாங்கி  கொண்டு போவார்கள் அம்மாவும் அப்பாவும் தினமும் சாப்பாடு செஞ்சு எடுத்து சென்று விடுவார்கள். இங்கு வந்து தங்க சொன்னால்  வர மாட்டார்கள் என்று சாப்பாடு கொண்டு போவது நான் சொன்ன யோசனை.

இப்படி கவனித்து கொண்ட என் பெற்றோர்களை அப்பாவின் சொந்தங்கள்  சொன்னது  தாத்தா பாட்டி  இன் பணம் எங்களுக்கு கொடுப்பதாக.

தாத்தா பாட்டி க்கு  கிடைப்பது மாதம் ஆய்ரம் ரூபாய் உதவி தோகை அதும் அவர்கள் பெயரிலே வங்கியில்  போட சொல்லி அம்மா வங்கி  கணக்கை உருவாக்கி விட்டார்கள்.

அந்த பணத்தை வாங்கி நாங்கள் என்ன செய்ய போகிறோம். ஆனால் அதை நாங்கள் வாங்கி கொள்கிறோமாம் . அது லட்ச லட்சமா சம்பளம் வாங்கும் அவர்கள் மகளுக்கும் மற்ற இரண்டு மகன்களுக்கும் பொறாமை. வருடம் ஒரு முறை கூட இவர்களை பார்க்க வராதவர்கள் . தொலைபேசியில் கூட நலம் விசாரிக்கதவர்களின் உயர்த்த எண்ணம் இது

இந்த உலகத்தில் பணம் தான் எல்லாமே போல. இறந்து போன தாத்தாக்கு ஒரு மாலை கூட வாங்கி வராத சொந்தங்கள். ஒரு மின் விசிறி கூட வாங்கி தராதவர்கள். வாங்கி தராமல் கூட இருக்கட்டும் கேட்டாலும் அவர்கள் வாங்கி தர வேண்டாம் என்று தான் கூறுவார்கள் ஆனால் வந்து பார்க்கும் போது ஒரு பேன் கூட இல்லாமல் இருக்கிறார்கள் எனக்கு மனசு கஸ்டமா இருக்குது என்று நீலி கண்ணீர் வடிக்காமல் இருக்கலாம் அல்லவா

பாசமே இல்லாமல் ஏன் நடிக்க வேண்டும். அவர் போய் சேர்ந்து விட்டார் இனி பாட்டி பாடு திண்டாட்டம் தான் அவரையும் கூறு போடுவார்கள். அவர்கள் வீட்டுக்கு கூடி செல்லவும் மாட்டார்கள் எங்கள் வீட்டில் வைத்து பார்த்தாலும் குறை சொல்லுவார்கள்

என்னுடைய பத்து வயதிலேயே கண்டு கொண்டேன் இவர்களின் நடிப்பை. ஆனால் என்னை பெற்றவர்களுக்கு இப்போது தான் புரிந்தது போலும்

அவரை அடக்கம் பண்ணி வந்த உடனே ஒரு கவலையும் இல்லாமல் என்னை பற்றி குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்

அதிகமாக படித்து விட்டு நான் சும்மா இருக்கெனாம். எந்த வித முயற்சி செய்யவில்லையாம். அவர்கள் சொல்லுவது என்னுடைய நல்லதுக்கு என்று எடுத்து கொள்ளாத படிக்கு ஊரில் உள்ளஅத்தனை பேர் முன்னிலையில் சொல்ல வேண்டிய அவசியம் தான் என்ன.

என்னை கூப்பிட்டு வைத்து இப்படி செய் அப்படி செய் என்று சொல்லலாமே அதை விட்டு விட்டு என் குடும்ப மானத்தையே வாங்கி விட்டார்கள்

தெரியுமா இவர்களுக்கு என் குடும்ப சூழ்நிலை உணர்ந்து அதிக மதிப்பெண்கள் இருந்தும் பொறியியல் படித்தால் அதிக செலவாகும் என்று கலை கல்லூரியில் படிப்பேன் என்று சொன்னது தெரியூமா. அப்போதும் கேக்க வில்லை என்னை பெற்றவர்கள் அது தான் மதிப்பெண் இருக்குதே இருக்கும் ஒரு நிலத்தை விற்று படிக்க வைப்போம் என்றனர்.

ஒரு தடவை கூட பெயில் ஆகாமல் கஸ்ட பட்டு படித்தது தெரியுமா

பொறியியல் நல்ல மதிப்பெண்களுடன் முடித்து நண்பர்களுடன் சென்னைக்கு வேலை தேடி சென்று குறைவான கட்டணம் வசுலிக்கும் அரையில் தாங்கி இருந்து நாயா பேயா வேலைக்கு அலைந்தது தெரியுமா ஒரு சாப்பாடு வாங்கி மூணு வேலையும் அதையெ உண்டு படும் கஸ்டம் வீட்டுக்கு தெரியாமல் வாழ்ந்தது தெரியுமா அவர்களுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.