(Reading time: 27 - 54 minutes)

சிறுகதை - கண்ணனின் மீதான என் காதல் - கார்த்திகா கார்த்திகேயன்

Love

ப்போதும்  போலவே  இப்போதும் மனதுக்குள்  புலம்பி கொண்டிருந்தாள் அவள். எதுக்கு இவனை போய் எனக்கு பிடித்தது. அவன் அழகாய் இருக்கிறான் அதனால் தானோ

இல்லை அவன் எப்படி  இருந்தாலும் அவனை பிடித்து தான் இருக்கும் ஆனால் இவளின் காதலின் எதிரொலி தான் அவனிடம் இல்லை.

டிகிரி முடித்து விட்டாள் தேன் மொழி. வீட்டுக்கு ஒரே பெண். அதனால் செல்லம் என்று  இல்லை அம்மா அப்பா விடம் பயம் உண்டு. ஆனால் கண்ணன் மட்டும் விதி விலக்கு அவனை பார்த்தால் மட்டும் இவளிடம் பயம் எதுவுமே இருக்காது

மொட்டை மாடி நில ஒளியில் அமர்ந்து அவனை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தாள். எதிர் காலமே இல்லாத அவளின் காதலை. காதல் இந்த வார்த்தை தான் மனிதனை எப்படி வீழ்த்துகிறது

பெரியவர்களுக்கு வேப்பங்காயாய்  கசக்கும் விசயம் சின்னவர்களுக்கு அமுதம் போல இனிக்கிறது

தேன் மொழியின் காதல் இல்லை இல்லை ஒரு தலை காதல். எப்படி வந்தது என்னுள் இந்த காதல் எனக்கும் காதலுக்கும் வெகு தூரம் தான் ஆனால் இப்போது?

இவர்கள் வீட்டின் அருகில்  தான் பழக் கடை வைத்திருந்தான் அவன். ஆனால் அவன் சிறு வயதில் இருந்தே  அங்கு தான் வைத்திருந்தான். இவர்கள் வீட்டருகில் இல்லை கொஞ்சம் தள்ளி. அப்போது அவனை சில நேரம் பார்த்திருக்கிறாள் 

அப்போது இவளிடம் எந்த சலனமும் இல்லை. இவள் வீட்டருகில் கடை வைத்து ஒரு வருடம் தான் ஆகிறது.

பல நாள் பார்த்திருந்தாலும் அப்போது தோன்றிடாத உணர்வு மூன்று மாதம் முன் தோன்றியது என்ன விந்தையோ .

இருவரும் முதல் முறை நேருக்கு நேர் பாத்தது மூன்று மாதம் முன்பு தான்.

இவள் வீடு கேட் முடியும்  இடத்துக்கு கொஞ்சம் தூரம் கழித்து தான் அவன் கடை. அப்படி  ஒரு நாள் பாத்திரம் விளக்க  தேங்காய்  நார் எடுத்து கொண்டிருக்கும் போது தான் அவன் இவள் வீடு எதிர் கடைக்காரரிடம் ஏதோ பேசி கொண்டிருந்தான்.

இவள் சும்மா நிமிர்ந்து யார் என்று பார்த்து குனிந்து கொண்டாள் அவனும் திரும்பி கொண்டான் தான்.ஆனால் அடுத்த நொடி  இவளை எது திரும்பி தலையை தூக்கி பாக்க வைத்ததோ தெரியவில்லை அவனும் அந்த நேரத்தில் ஏன் திரும்பினான்  என்றும் தெரியவில்லை.

இருவரும் பார்த்து கொண்டே  இருந்தனர் 5 நொடிகள் தான் அதுக்குள்ள  இதயம் இடம் மாறுமா. இவள் இதயம் அங்கு போய் விட்டது தான். ஆனால் அவன்?

அடுத்து அவளால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. உடனே  மனம் ப்ளான் செய்தது . இரவு நடை பயிற்சி  மேட்கொள்வது என்று

அடிக்கடி அவனை பார்க்க முடியாது தான் ஆனால் நடை பயிற்சி செய்தால் இவள் கேட் அருகே வரும் போது அவன் கடையை விட்டு வெளியே வந்தால் அவனை பார்க்கலாம். எதுவும் பேசி கொள்ள முடியாது.

ஆனால் இதை விட்டால் அவனை பார்ப்பது எப்போது அதே உரில் ஒரு அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள் இவள் அதனால் 9 மணிக்கு போய் விட்டு 5 மணிக்கு தான் வருவாள்

போகும் போது சில நேரம் சில நேரம் அவனை பார்க்கலாம் வரும் போது தினமும் பார்க்கலாம் ஆனால் பக்கத்தில் ஆள் இருப்பார்கள் அதனால் அவனை பார்க்க அவள் தேர்ந்தெடுத்த நேரம் இரவு நடை பயணம்

அன்றில் இருந்து தான் அவனை பார்க்காமல் என்னால் இருக்க முடிய வில்லை. 8 மணியில்  இருந்து 9 மணி வரைக்கும் நடை அவனை அதிக்மாக  நேசிக்க வைத்தது.

இவள் பார்ப்பதை அவனும் இரண்டு நாள்களில்  கண்டு கொண்டான். அவனாகவே  வந்து ஒரு ஓரமாக  நின்று இவளுக்கு அடிக்கடி காட்சி தந்தான். அது தேன் மொழியின் மனத்தை குளிர் வித்தது.

இது வெறும் இணக்கவர்ச்சியாக கூட இருக்கலாம் என்று சிந்தித்து பார்த்து விட்டாள். ஆனால் வேறு யாரை பார்த்தாலும் இது வரை தோன்றாத உணர்வு அவனை பார்த்ததும் தோன்றுவது ஏன்

எனக்கே எனக்கானவன்  என்னவன் என்ற உணர்வு அவலுள் அதிகமாக எழுந்தது.

காலையில்  போகும் போதும் வரும் போதும் அவனை பார்க்க வைத்தது மனது.

அதிலும் இவள் மனத்தை அவனும் கண்டு கொண்டது அவளை இன்னும் சந்தோசத்தில்  ஆழ்த்தியது.

விடு முறை. அப்போது மாலை வேலையில்  குளித்து விட்டு தலையை காய போடும்  போது அப்படியே  அவனை பார்க்க வேண்டும்  என்று கேட்  அருகே சென்றாள். அவனும் வந்து பார்த்தான் சந்தோசமான இந்த நேரத்தில் தான் அவன் அருகில் ஒருத்தன் வந்து சேர்ந்தான். அதிகமாக சாராயம் குடித்து விட்டு புலம்பி கொண்டிருந்தான்

அடுத்து அவன் கடை  அருகே வாந்தி எடுத்து வைத்தான் அந்த ஆள். நாலு அடி குடுக்காமல் அதை  கழுவி விட்டு கொண்டிருக்கிறான் கண்ணன். தேவையா இவனுக்கு. எனக்கு சரி கோபம் வந்தது ஏன் அப்படி செய்யணும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.