(Reading time: 27 - 54 minutes)

ந்த  ஆளை திட்ட  கூட இல்லை கஸ்டமா போய்ட்டு அன்னைக்கு  ஆனா அதிகமா அன்னைக்கு தான் அவனை பிடித்தது  என்னவன் நல்லவன் பொறுமையானவன்  இவன் என்று அதிகமாக ஆசை வைத்தது மனது.

ஒரே ஒரு நொடி தான் அவன் முகத்தை பார்ப்பாள்.ஆனால் அதுவே பெரிய வரமென்று தோன்றும். இப்படியே  பரி மாறி கொண்டிருந்த பார்வையை மாற்றி ஏதோ சைகை செய்தான்

அந்த இருட்டிலும் வேறு யாரும் பார்ப்பார்கள் என்ற பயத்திலும் அவனுடைய செய்கைகள் இவளுக்கு புரியாமல் போய் விட்டன.

எதுக்கு அடிக்கடி உதட்டில்  கை வைக்கிறான் . என்ன சொல்ல வரான் . ஐயோ  புரிய வில்லையே என்ற தடு  மாற்றம். அதற்க்கு  மேலும் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை இவளுக்கு.

எங்கிருந்து வந்தது அப்டி ஒரு தைரியம். ஒரு துண்டு பேப்பர் யில்  இவளுடைய ஃபேஸ் புக்  முகவரியை எழுதி அவன் பார்க்கும் போது இவள் வீடு வாசலில் போட்டு வைத்தாள் . அவனும் அதை எடுத்தான்

ஆனால் அடுத்து அவனிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை. தவறாக  நினச்சிருப்பானோ என்று பயம் மட்டுமே.

டுத்து இரண்டு தினம் கழித்து அவன் தூக்கி போட்டான் ஒரு தாளை

அவசரமாக ஆனந்தமாக  எடுத்து பார்த்தால் அதில்  இருந்தது அவன் கை எழுத்து ஆனால் அதை ரசிக்க விடாமல் செய்தது அதில் இருந்த வாசகம். இப்போது அருகில் வந்தால் முத்தாம் தருவாயா என்று.

என்ன நினைத்து விட்டான் என்னை சட்டென்று வந்தது கோபம் .அவனைநினைத்தால்   மனதில்  கவிதை தான் வரும் ஆனால் அவனுக்கு  முத்தம் கேக்க தோணுது.தன்  நிலையை நினைத்து இரவு முழுவதும் கண்ணீரில் கரைந்தது தேன் மொழிக்கு.

அடுத்த நாள் காலையில்  வேலைக்கு கிளம்பும் போது கேட்  அருகே நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனை முறைக்க தான் முடிந்தது அவளால். ஆனால் அவள் முறைத்ததும் அவன் ஒரு சிரிப்பு சிரித்தான் அதை இவளால் எப்போதும் மறக்க முடியாது

நான் இங்க உருகி உருகி அவனுக்காக தவிக்குறேன் . ஒத்தையில்  நடந்தா  அம்மா திட்டுவாங்கனு  சொல்லி பக்கத்து வீட்டு  பிள்ளைங்க  கூட சண்டை போட்டு விடுவேன் என்று  மிரட்டி கூட நடக்க வச்சிருக்கேன். ஆனா இவனுக்கு கிஸ் வேணுமாம்

ஏன்  கிஸ் கேட்டா தப்பா என்று மனசாட்சி கேள்வி கேக்க தப்பு இல்லை  தான் ஆனா  காதல் சொல்லாம என்னை  பற்றி  ஏதும் தெரியாமல்  அவன் எப்படி  அப்படி  கேக்கலாம்

என்னை  அவனுக்கு  பிடிக்க வில்லை . ஆமா புடிச்சிறுக்காது அவனை  மாதிரி நான் ஒண்ணும் அழகு இல்ல. ஆனா பிடிக்க வில்லை என்றால் என்னை பார்க்காமல் போய்ருக்க வேண்டி தான ஏன் பார்த்தான். ஒரு வேலை என்னிடம் விளையாட அப்படி கேட்டிருப்பானோ

று நாள் அடுத்த துண்டு தாளில் எழுதினாள்  - விளையாட ஒரு அளவு இருக்கணும் உங்க போன் நம்பர் தாங்க என்று.

அதை அவன் முன்னாடியே  கேட்  அருகில் போட போகும் போது தடுத்து தூக்கி போடு என்றான் அதை போட்டதும் அவன் பிடித்து விட்டான். ஆனால் அவனிடம் இருந்து பதில் தான் இல்லை 

என் உயிர்  உடல் ஆன்மா எல்லாமே  அவனை தான் தேடுகிறது. ஆனால் அவனுக்கு அப்படி ஏதும் இல்லை போலவே . இரண்டு நாள் ஒழுங்கா சாப்பிட கூட இல்லை தேன்மொழி. அப்போதும் இவள் முறைத்ததும் அவன் சிரித்ததும் தான் ஞாபகம் வந்தது

எப்போதும் அவன் சிரித்து கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். ஆனால் உன்னை மட்டும் அழ வைப்பான்

அன்றும் கண்ணன் அதே போல் சைகை தந்தான். எப்போதுமே மூளை நமக்கு தகுந்த மாதிரி தானே யோசிக்கும். ஒரு வேலை அவனுக்கும் என்னை புடிச்சிருகோ அதனால் தான் முத்தம் கேக்குறானோ.ஏனோ அந்த நொடி முழுவதும் சிலிர்பாய் இருந்தது அவளுக்கு.

9 மணிக்கு மேல தான் அவன் வண்டியை எடுத்து கொண்டு செல்வான். அவன் போகும் வரை இருந்து அவனை பார்ப்பது தான் முக்கியம் அவளுக்கு. ஆனால் 9 மணிக்கு மேல அங்க இருக்க வேணாம் என்று சொல்லும் அம்மா மேல் வீண் கோபம் வந்தது

அவனும் தன்னை விரும்புகிறான் என்று மனது முடிவு செய்தசெய்த பின்னர்  தான் அவளுக்கு முகத்தில் சந்தோசமெ  வந்தது.

அவன் மறுபடியும்  முத்தம் தா என்று அனுப்பினான். அவன் நம்பர்  தரவும் மாட்டான். என் நம்பர் க்கு  தன்னை கூப்பிடவும்  மாட்டான் என்று புரிந்து விட்டது தேன் மொழிக்கு.

கடைசியாக  ஒரு தாளில் எழுதி கொடுத்தாள். இனி எதுவும் அனுப்ப மாட்டேன் உங்க நம்பரும் தர வேண்டாம் என்று

அவனுக்கு தன்னை புடிக்க வில்லை என்று இவள் முடிவு செய்த நேரம் அவன் இவள் முன்பு போட்டான் ஒரு தாளை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.