ஆமா பாத்தேன் எங்க போறாங்க
கடைக்கு.
சரி சொல்லு
உங்க வாய்ஸ் கேக்கணும் போல இருந்தது பாஸ் அதான்.
ம்ம்
அப்றம்
சொல்லு
என்ன சொல்ல
ஏதாவது சொன்னா தான பேச முடியும்
ம்ம் பேசணும் போல தோணுது ஆனா என்ன பேசனு தெரிய வில்லையே
ம்ம் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். கடைய வேற இடத்துல மாத்த போறேன்
ஏன் என்ன ஆயிற்று
இல்ல இங்க போற்றுகிரது சும்மா ப்ளாட்ஃபார்ம்ல வச்சிருக்க மாதிரி தான அதான் கடைக்கு மாத்த போறேன்
அப்ப நைட் பகலில் பாக்க முடியாதா
ம்ம் ஆனா நீ போகும் போது நான் வறேன் அப்ப பாக்கலாம். நைட் பாக்க முடியாது.
எனக்கு கஸ்டமா இருக்கு
ம்ம் இங்க ஒழுங்கா வியாபாரம் நடக்க மாட்டிக்கு அதான்.
சரி சரி உங்க வேலை தான் முக்கியம் என்னைக்கு மாறனும்
வேலை நடந்துட்டு இருக்கு ஒரு வாரத்துல முடியும்னு நினைக்குறேன்
ஹ்ம் சரி ஆல் த பெஸ்ட் ஆனா அங்க போய் அப்ப அப்ப பேசணும் சரியா
கண்டிப்பா பேசுவேன் அங்க போன உடனே நேரம் கிடைக்கும் கூட யாரும் இருக்க மாட்டாங்க அப்ப பேசுறேன்
சரி அம்மா வந்துருவாங்க வச்சிரவா
சரி
இன்னைக்கும் அவன் மனத்தில் உள்ளதை அவளிடம் சொல்ல முடியாமல் போய் விட்டது.
ஒரு நாள் 5 மணிக்கு வீட்டுக்கு வர வேண்டியவள் 4 மணிக்கு வந்தாள் என்ன அச்சு இவளுக்கு உடம்பு சரி இல்லாயோ மெஸேஜ் ல கூட ஒண்ணும் சொல்ல வில்லை யே
அவளும் குழப்பத்தில் தான் வந்தாள்.அப்போது தான் அவள் அம்மா அவளை கூப்பிட்டு உடனே வீட்டுக்கு வா என்றார்கள்.காரணம் கேட்டதுக்கு சொல்ல வில்லை. ஒரு வேலை நேத்து கண்ணன் ஞாபகத்துல கவிதையா எழுதி அவன் கிட்ட தூக்கி போட்டது தெரிஞ்சிருக்குமோ
நேத்து அதை தூக்கி போட்டதும் அவன் அதை பிடித்ததும் பக்கத்து வீட்டு சிறுமி மீனா பார்த்து விட்டாள்.
பாத்ததும் இல்லாமல் என்னத்துக்கா போட்டிங்க அந்த அண்ணன் காட்ச் பிடிக்குறாங்க என்று சொல்லியும் வைத்தாள். அடுத்து அவளை ஐயாோ நான் குப்பையில் போட்டேன் அவங்க மேலெ பட்டு விட்டதா தப்பா நினச்சிருப்பாங்கள என்று கேட்டேன் நான் அப்டி கேக்கவும் அவளும் நம்பி இல்ல அக்கா கீழ தான் விழுந்துச்சு என்றாள்
ஒரு வேலை அந்த விசயம் தான் வீட்டுக்கு தெரிஞ்சிருக்கும் போல என்று பயத்துடன் சென்றாள். ஆனால் அவன் கடை இல் எந்த குழப்பமும் இல்லாமல் தான் இருந்தான் நான் சீக்கிரம் வந்தது அவனுக்கும் குழப்பம் தான் போல என் என்னை அம்மா கூப்பிடாங்க என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றாள் அங்கு இரண்டு பெண்மணி அமர்ந்திருந்தார்கள்
எதுக்கு வந்திருக்காங்க இவங்க யாரு என்று நினைக்கும் போதே அம்மா சொன்னாங்க உன்னை தான் பார்க்க வந்திருக்கிறாங்க என்று சட்டென்று மனதில் விளக்கு எரிகிறது பொண்ணு பார்க்க வந்தவர்கள் என்று
தலையில் இடி விழுந்தது போல இருந்தது. அவர்கள் எங்களுக்கு பிடித்திருக்கிறது ஜாதக பொருத்தம் பார்ப்போம் என்று சொல்லி சென்று விட்டார்கள் எதிர் பார்தது தான் ஆனால் மனத்துக்கு வருத்தமாக இருந்தது . கண்ணன் தன்னை விரும்பினாள் கூட வீட்டில் பேசலாம் இப்போது என்னசெய்வது நாளைக்கு கண்டிப்பா அவனிடம் பேச வேண்டும்
அன்று இரவு அவளுக்கு இருந்த மன நிலையில் அவனை பார்க்கவும் செல்ல வில்லை காலையில் அவன் முகத்தையும் பார்க்க வில்லை.
அவனும் குழப்பத்தில் தான் இருந்தான் என்ன ஆகி விட்டது இவளுக்கு சரி மெஸேஜ் பண்ணும் போது கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டான்
மெஸேஜ் ல் அவள் கேட்டது எதுக்கு என்கிட்ட முத்தம் வேணும்னு சொன்னீங்க என்று தான்
பதில் இல்லை அவனிடம்
இன்னைக்கு ஒரு நாள் நீங்க என்கிட்ட பேசி தான் ஆகணும். எந்த உறவு ல நீங்க என்கிட்ட அப்டி பேசுநீங்க. முத்தம் மனைவி அல்லது காதலி கிட்ட தான் கேப்பாங்க நீங்க ஏன் கேட்டீங்க. நான் உங்களுக்கு யாரு என்ன பிடிக்குமா பிடிக்காதா. பதில் சொல்ல மாட்டீங்க அப்டி தான் இருங்க உங்களுக்கு இப்ப போன் பண்றேன் எனக்கு பதில் தெரியணும்
எந்த கேள்வி அவள் கேட்பாள் என்று எதிர் பார்த்தானோ அந்த கேள்வியை கேட்டு விட்டாள் ஆனால் பதில் இல்லை அவனிடம் அவளுக்கு பதிலும் அனுப்ப வில்லை அவள் அழைத்த போது அவளிடம் பேசவும் இல்லை