உடனே அதை விரித்தால் . அதில் முத்தம் தா என்று ஒரு பேப்பர் இருந்தது. மறுபடியும் கோபம் வந்தது . ஆனால் கூடவே மற்றொரு தாள் சுறுட்டி வைக்க பட்டிருந்தது. அதில் அவனின் நம்பர் . சந்தோசம் தாங்க முடிய வில்லை அவளுக்கு
அடுத்த நாள் ஞாயிறு வீட்டில் அனைவருமே இருப்பார்கள் எப்படி அவனிடம் பேசுவது. திங்கள் அன்று தான் பேச முடியும் . ஞாயிறு நாலு மணிக்கு தலைக்கு குளித்து விட்டு தலையை காய போடுவது போல கேட் அருகே சென்றாள் . ஞாயிறு அன்று எதிர் கடை வேற விடுமுறை அவனை அதிக நேரம் பார்க்கலாம் என்று சென்றாள்
நினைத்த படியே அவனை பார்த்தாள் அவனும் அவளை தான் பார்த்தான் இத்தனை நாள் இருட்டில் செய்த சைகையை இப்போது செய்தான்
விரலை உதட்டில் வைத்து தா என்றான்
இவளிடம் வெக்கமும் சி போ என்ற பதிலும் சொல்லி விட்டு திரும்பி நடக்கும் போது அவள் அம்மா பார்த்து விட்டார்கள். என்ன தன்னால் சிரிச்சுட்டு வர என்று கேட்பவரிடம் என்ன சொல்ல முடியும் அவளால்
இல்லையே சிரிக்கவே இல்லை
இல்லை சிரிச்ச தேனு நான் பார்த்தேன்
அது அந்த காக்கா இன்னொரு காக்கா கு சாப்பாடு குடுத்தது அதை தான் பார்த்தேன் மா
அம்மாவை சமாளித்து விட்டேன் என்ற நிம்மதியும் அடுத்து அவன் சிரிப்பு முகத்தை பார்த்த நிம்மதியும் வந்தது. மறுபடியும் அவனை பார்க்கும் போது அவன் பக்கத்தில் வரவா என்றான் சிரிப்புடன் மறுத்து விட்டாள்
திங்கள் அன்று பட பட வென்று வந்தது. முதல் முறையாக அவனிடம் பேச போகிறோம். இவள் தான் இவளுடைய போன் ஐ அங்க எடுத்து செல்ல மாட்டளே . அங்க ஓபீஸ் நம்பர் இல் இருந்து அழைத்தாள் அவனை. யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயம். அவனிடம் பேச வேறு பயம். அடுத்து என்ன பேச என்று தயக்கம் அனைத்தும் சேர்ந்து இதயமே வெளிய வந்து விடும் போல பயம்
ஒரு வழியாக எடுத்தான் அழைப்பை.
ஹெலோ
ஹெலோ யாரு
ஹ்ம் உங்க பாட்டி
பாட்டியா
ஆமா
ஓ நீயா சொல்லு
எதுக்கு என்னோட ஃபேஸ்புக் கு மெஸேஜ் செய்யல
நான் தேடி பார்த்தேன் உன் ஐடீ கண்டு பிடிக்க முடியலை
ஓ சரி உங்க ஐ டீ சொல்லுங்க நான் அனுப்புரேன். உங்க பேர் என்ன
என்னனு நீயே கண்டு பிடி
எனக்கு தெரியாது சொல்லுங்க
கண்ணன்
சரி ஐ டீ
அடுத்து அவனுக்கு எத்தனை மெஸேஜ் அனுப்பியும் அவனிடம் இருந்து பதில் இல்லை. அடுத்து மறுபடியும் அவனை போனில் அழைத்து கேட்டதுக்கு வேலை இருந்துச்சு மதியம் அனுப்புரேன் என்றான்
ஆனால் மதியமும் வர வில்லை. அடுத்த நாளும் அதே தான் சாப்பிட்டாயா என்று கேட்டு மட்டும் அனுப்புவான்
அடுத்த நாள் எதுக்கு அனுப்பலை என்கிட்ட பேச பிடிக்க வில்லையா என்று அனுப்பினாள் பதில் இல்லை. கோபத்தில் சரி நீங்க ஒண்ணும் பேச வேணாம் ஆளை விடுங்க என்று அனுப்பி விட்டாள்.
ஆனால் அடுத்து பேசாமல் இருக்க முடிய வில்லை தேன் மொழிக்கு மறுபடியும் அனுப்பினாள் . பதில் இல்லை.
கடைசியாக ப்லீஸ் எதுக்கு என்கிட்ட பேசலை ன்னு மட்டும் அனுப்புங்க என்று கெஞ்சி அனுப்பினாள் .
அவனிடம் இருந்து பதில் வந்தது. நீ தான இனி பேசவே வேண்டாம்ணு அனுப்பினாய் என்று
ஐய்யோ ஸாரீ அது நீங்க எனக்கு மெஸேஜ் பண்ணல அந்த கோபத்துல அனுப்புனேன் ப்லீஸ் என்று கேட்டவுடன் அவனும் சமாதானம் ஆகி விட்டான்.
அடுத்து அவனுக்கு போன்இல் கூப்பிட்டும் மன்னிப்பு கேட்டாள் எனக்கு நீங்க பேசவில்லைனு கஸ்டமா இருந்துச்சு அதனால தான் அப்படி சொன்னால் பேசுவீங்க அப்படினு நினைத்து அனுப்பிவிட்டேன் ஸாரீ
அதெல்லாம் ஒண்ணும் இல்லை எனக்கு வேலை இருக்கும். கஸ்டமர் வந்து கிட்டே இருப்பாங்க. அப்படி இல்லை என்றால் யாராவது பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள் அதனால தான் அனுப்ப முடிய வில்லை
ஹ்ம் நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் ஸாரீ நீங்க பேசாம இருந்தாலும் நான் பேசிக்கிட்டே இருப்பேன் இனி உங்களை தொல்லை பண்றது தான் என் வேலை என்று அனுப்பினாள்
நீ அனுப்பு நான் எனக்கு முடியும் போது நான் அனுப்புரேன் .