(Reading time: 10 - 20 minutes)

சிறுகதைத் தொடர் - ஆகாய வீதியில் நான் - 03. நானும் தென்னை மரமும் - ரேவதிசிவா

coconut

தென்னை மரம் பண்டையக் காலத்தில்,கடல் சீற்றத்தில் தப்பிப் பிழைத்த பல மக்களுக்குப் பெரும் தொண்டு ஆற்றியுள்ளது என்றால் அது மிகையில்லை

என்ன திடீரென்று கடலில் இருந்து தென்னை மரத்துக்குப் போயிருக்கேனு நினைக்கிறீங்களா? இரண்டுக்குமே ஒரு அழகிய பந்தம் உண்டு. எனக்கும் அதுக்கூட ஒரு மறக்க முடியாத நினைவும் உண்டு.

அங்கு

கேணியருகினிலே - தென்னைமரம்

கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்

பக்கத்திலே வேணும்

அழகாக பாடி சென்றுவிட்டார் பாரதி. அப்படிப்பட்ட தென்னை மரத்தப்பத்தி ரொம்ப யோசிக்கிற நாளும் வந்தது.

என்ன இப்படி முறைச்சு பார்க்குற?

சத்தம் கேட்டு சுற்றிப்பார்த்த என் தலையில் ‘மட்’என்று விழுந்தது,  குட்டியோ குட்டியான இளநீர். கீழே குனிந்து எடுத்த என்னை, அது மேலே பார்க்கச் செய்தது. முதலில் தோன்றிய சிந்தனை இதுதான், நல்லவேளை பெரிதாகப் போயிருந்தால்? என் நிலை! சட்டென்று அவ்விடத்தை விட்டு சிறிது நகர்ந்து, மறுபடியும் மேலே பார்த்தேன்.

என்ன திரும்பவும் முறைச்சு பார்க்குற, என்று சேட்டைக்காரனைப் போல் அடவாடிப் பண்ணியது நெடுநெடுவென வளர்ந்த கடியோன்.(பின், வந்ததிலிருந்து கடுகடுவென கடிக்கிறான்)

என் பார்வை நான் பார்க்கிறேன் உமக்கென்ன? என்று கேட்டேன்.

என்னைப் பார்த்தால், நான் கேள்விக் கேட்ப்பேன்.(சரிதான், இன்னும் சிறிது நேரம் உற்றுப்பார்த்தால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றாலும் வியப்பிற்கில்லை)

எவ்வளவு உயரமாக இருக்கிறாய், அதான் அதிசயித்துப் பார்த்தேன், என்று கூறினேன்.

நான் மட்டும்தானா  உயரமாக இருக்கிறேன்? எவ்வளவோ இருக்கின்றனவே? அவைகளைப் போய் பார்க்க வேண்டியதுதானே! என்று சிலுப்பிக் கொண்டது.

நீ ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய்? என்று கேட்டேன்.

பச்...ஒன்றுமில்லையென்று தலையை ஆட்டிக்கொண்டது.

நான் சிறிது நேரம் கடலலைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று நீரில் எதுவோ விழும் சத்தம் கேட்க, என் சிந்தனை கலைந்த அதிருப்தியில் சற்று எரிச்சலோடு அவ்விடத்தை நோக்கினேன்.

அங்கே நீரில் நடனமாடினப்படியே, ஓடம் இல்லாமலே ஓடிக்கொண்டிருந்தார் முற்றிய தேங்காய். காணும் பொழுதே கண்ணைவிட்டு, காணாமலும் போய்விட்டார்.

வருத்தத்துடன் மேலே பார்க்க, அவனோ சிரித்துக் கொண்டு இருந்தான்.நீ வருத்தப்படவில்லையா? என்று நான் கேட்டேன்.

இது இயற்கை. அது இன்னொரு இடத்தில் கரை சேர்ந்து மரமாகும், என்னைப் பிரிந்து சென்றால்தான் அதற்கு வளர்ச்சி கிட்டுமெனில் அதை மகிழ்வோடு வரவேற்க வேண்டுமல்லவா? எங்கு இருந்தாலும் அதன் பூர்வீகம் நானல்லவா!(மனிதன்தான் சில நேரங்களில் சிலவற்றின் பிடியில் சிக்கி, தன் வளர்ச்சியை மழுங்கடித்துக் கொள்வான்)

அது தண்ணீரில் மூழ்கிவிட்டால்? என்று வினவினேன்.

மூழ்காது, அதற்கு தண்ணீரில் மிதக்கும் ஆற்றல் உண்டு(buoyancy- தண்ணீரில் மிதக்கும் தன்மை). அதனால்தான் பெரும்பாலும் நாங்கள் கடற்கரையின் ஓரம் இருக்கிறோம்.(தேங்காய் 110 நாட்கள் அல்லது 4800கி.மீ  நீரில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது)

உவர்நீரின் அருகில் இருக்கிறாயே, அதனால் உனக்கு பாதிப்பில்லையா?என்று கேட்டேன்.

எங்களின் செயல்பாடுகள், அதற்கு ஏற்பப் பொருந்தியுள்ளதால் பிரச்சினை ஏதுமில்லை.எங்களின் வேர்களுக்கு உப்புகளைப் பிரித்து அனுப்பும் வேலைப்பாடு தெரியும். எங்களுக்கு வருடாந்திர மழைப்பொழிவும்( more than1000mm) காற்றில் சற்று ஈரப்பதமும்(70-80), வெப்பநிலையும்(more than 24°C)தேவை. இவை ஆனைத்தும் கடலோரப்பகுதியில் இருப்பதால், நாங்கள் இங்கு அதிகமாக இருக்கிறோம். அதுவுமில்லாமல் எங்களின் பெருக்கத்திற்கு கடல் பெரும் பங்கு வகிக்கிறது.

சரிதான். நீங்க ஏன் இப்படி மிகவும் வளைந்து,கடற்பகுதியின் பக்கம் நீண்டு இருக்கிறீர்கள்? என்று நான் கேட்க, மீண்டும் மலையேறி விட்டான் நெடியான்.

ஏதோ சோகமாக விசாரித்தாயே என்று பதில் கூறினால், நீயென்ன ஆசிரியர் போல் அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறாய்? உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறி தலையைத் திருப்பிக் கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.