(Reading time: 10 - 20 minutes)

தைப் பார்ப்பதற்கு வாழைத் தண்டு போல் இருந்தது. அது மரத்தின் குருத்துப் பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்படும். வயதான மரங்களிலிருந்து அவை எடுக்கப்படும்.( மிகவும் சுவையாக இருக்கும் என்று சொன்னதை நம்பி வாயில் வைத்தேன், ம்...எனக்கென்று கொடுத்தது சரியில்லையோ ?அல்லது இயற்கையின் சுவையை விட செயற்கையின் சுவையில் அதிகம் நாட்டம் இருந்ததாலோ?என்னால் அப்போது அதை ரசிக்க முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் தூக்கிப் போட்டு விட்டேன்[சிறுப்பிள்ளை அல்லவா! அதன் மகிமை தெரியவில்லை மற்றும் பெரியவர்களும் அருகில் இல்லை]. ஆனால் இப்பொழுது அதை சுவைக்கப் பேராவலாக உள்ளது!)

தென்னஞ்சோறு கருப்பைத் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

யாரோ கூப்பிடும் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தேன். வேறு யாரு நம் நெடியோன்தான்!இம்முறை நான் அவனை அலட்சியப்படுத்தலாம் என்று எண்ணினேன்,ஆனால் அதை செய்ய விடாமல் மனம் தடுத்தது.

எழுந்து அவனருகில் சென்று, எதற்காக இப்பொழுது அழைத்தாய் என்று வினவினேன். அதற்கு என்ன தோன்றியதோ? என்னிடம் இயல்பாகப் பேசியது. வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லையென்றாலும் நன்றாகப் பேச ஆரம்பித்தது.(மனிதரில் சில பேர் இவை மாதிரிதான் கோபமாக நடந்துக்கொள்வர் பின் அப்படி ஒன்றும் நிகழாத மாதிரி இயல்பாகப் பேசுவர். அவர்களின் செயல்களை அவர்களே புரிந்து உணராதவரை, நாம் என்ன சொன்னாலும் ஏறாது!)

நீ அப்ப கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்,”நாங்கள் வெளிச்சத்தை நோக்கி வளருகிறோம்.அதனால் ஒளியின் திசைக்கேற்ப நாங்கள் அதை நோக்கி இருப்போம்.(Phototropism)

நாங்கள் அதிகமாக  இருக்கும் பகுதியில் கடற்பறவைகள் வந்து தங்காது. எங்களுக்கு அவைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் வழி இல்லாததால் பெரும்பாலான கடற்பறவைகள் எங்களை தங்களின் வசிப்பிடமாக ஏற்றுக் கொள்ளாது.

சரிதான்! நீ நான் கேட்காதற்கும் சேர்த்து தகவல் தந்தற்கு நன்றி என்று கூறி புறப்பட்டேன்.அதுவும் மகிழ்ச்சியுடன் சில இளநீர்களைக் கொடுத்து வழி அனுப்பியது.(ஒருவேளை என் தொந்தரவைத் தாங்காமல் இவ்விடத்தை விட்டு இவள் போனால் போதும் என்று எண்ணி விட்டதோ? யாருக்கு தெரியும்! )

கையில் இருக்கும் இளநீரையும் கடற்கரையும் பார்க்கும் பொழுது எனக்கு,  கதைப்புத்தகத்தில் படித்த ஒன்று நினைவுக்கு வந்தது.அந்தக் காலங்களில் கடலில் பயணம் செய்பவர்கள் குடிப்பதற்கு நீராய் இவைகளைத் தான் பயன்படுத்தினரென்று! பண்டமாற்ற முறையும் இவைகளைக் கொண்டு நிகழ்ந்துள்ளது என்பதே!

எது எப்படியோ நண்பர்களே! எனக்கு இளநீரையும் கடற்கரையையும் பார்க்கும் பொழுது எப்பொழுதும் நினைவுக்கு வருவது ஒரு கார்டூன், அதில் வருவது என் டோனல் டக்கும் பாட்டீல் பீட்டலும் தான். அது எனக்கும் மிகவும் பிடித்த டோனலின் கார்டூனில் ஒன்று. இவர்கள் இரண்டு பேரும் ஆளில்லா தீவில் தஞ்சமடைய அப்போது அவர்களுக்கு ஒரு இளநீர் கிடைக்க அதில் பீட்டல் நுழைந்து பண்ணும் கூத்து அருமையா இருக்கும்! நம்ம டக்கும் லேசுப்பட்டவரல்ல அவரும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்வார். முடிந்தால் அதை யு. டுபில் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கும்!

கையில் இருப்பதற்கும் என் வாயிற்கும் வேலை கொடுக்க இருப்பதாலும், பிறகு பயணத்தைத் தொடரப்போவதாலும்  உங்களிடமிருந்து இப்பொழுது விடைபெறுகிறேன். மீண்டும் சந்திக்கலாம்  நண்பர்களே!

coconut

I dedicated this story to all grandparents .

Aagaya veethiyil naan

{kunena_discuss:1106}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.