(Reading time: 27 - 54 minutes)

ஹ்ம் தாங்க்ஸ். சரி எதுக்கு அப்படி  கேட்டீங்க

என்னது

அதன் கேட்டீங்களே  அது

கிஸ்ஸா

ம்ம்ம்

தோணுச்சு அதான்

ஏன் தோணுச்சு

குடுத்தா இன்னும் பாசம் அதிகமாக ஆகும்  அதான்

ஒஹ்ஹ் ஆனா வீட்டில முடியாது கஸ்டம்.

ம்ம் தோணுச்சு அதான்  பரவாயில்லை விடு

சரி வச்சிரவா

ம்ம்

அதுல இருந்து இவளிடம் இருந்து பக்கம் பக்கமாக வசனம் போகும் ஆனால் அவனிடம் இருந்து சாப்பிட்டாயானு மட்டும் தான் பதில் வரும். அந்த அக்கறையே அவன் மீது இருந்த அன்பை அதிக படுத்தியது.

வாழ்க்கையில் அவன் வந்த பின்பு தான் சந்தோசம் வந்தது. இது வரை இவள் கேட்டு வீட்டில் அம்மா அப்பா எதுவுமே மறுத்தது இல்லை. கண்டிப்பா கண்ணனை பிடிக்கும். ஏற்கனவே இரண்டு தடவை பேசி இருக்கிறார்கள் ரொம்ப நல்ல பையன் சின்ன வயசுல இருந்தே இங்க தான் இருக்கான் என்று. ஆனால் எல்லாம் யோசித்தவள் அவன் வீட்டை பற்றி யோசிக்க வில்லை 

அவனை பற்றியும்  யோசிக்க வில்லை. தான் காண்பது கனவு, ஒரு நாள் அது கனவாகவே போகலாம் என்பதை மட்டும் நினைக்க மறந்து விட்டாள்

அவளுக்கு தெரிந்தது அவன் மட்டுமே. பார்த்த உடன் காதல் வருமா என்ன. ஆனால் வரும் பெற்றோர்கள்  நடத்தி வைக்கும் திருமணம் மட்டும் எப்படியாம்   ஒரு தடவை முகத்தை மட்டும் பார்த்தே பிடித்து விட வில்லையா. அது காதல் இல்லாமல் எது

அவனை பார்த்தாலே  மனது தடு மாறுகிறது. சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் அவனை நிமிர்ந்து  பார்க்க சொல்லி மனது தூண்டுகிறது. அதுவும் அவன் பார்த்து விட்டால் சந்தோசத்தில் மனது சிறகடிக்கிறது

இப்படியே சென்றது தேன்மொழி வாழ்க்கை. காலை இல் அவனை பார்ப்பது வேலை செய்யும் போதும் அவனுக்கு மெஸேஜ் அனுப்புவது. அடுத்து நைட் அவனை பார்ப்பது.

அவனை பார்த்தால் மட்டும் போதும் வேறு எதுவும் தேவை இல்லை.

தே நேரத்தில் கண்ணனும் இவளை பற்றி தான் யோசித்து கொண்டான்.

மேடம் கிளம்பி போய் 5 நிமிடம் ஆகுது இன்னும் மெஸேஜ் வர வில்லை என்று.

ஆஹ் வந்து விட்டது இன்னும் 5 மணி வரைக்கும் வந்து கொண்டே இருக்கும். அவள் அனுப்புவது சுவாரசியமாக இருக்கும். ஆனால் பதில் அனுப்ப தான் இவனுக்கு நேரம் பத்தாது ஏதாவது அனுப்புங்க பாஸ். மனசுக்கு கஸ்ட  மாக இருக்கு என்பாள் பதிலுக்கு சாப்பிட்டாயா   என்று கேட்டால் போதும் அப்படியே  சந்தோசத்தில்  குதிக்கும்  பொம்மையை அனுப்பி வைப்பாள்.

அவளும் இப்படி குதிப்பாளா . ஒரு நாள் இப்படி  தான் எனக்கு கஸ்டமா இருக்கு பாஸ் என்று அனுப்பி வைத்தாள். இவன் வேலை அதிகமானதால் பதில் அனுப்ப வில்லை .

உங்களுக்கு  என்னை பிடிக்க வில்லை  அதனால் தான் என்கிட்ட பேசவே செய்யலை நீங்க உங்க முகத்தை எனக்கு காட்டவும் இல்லை. என்னை பிடிக்கலையா 

இல்லை என்று அனுப்பி வைத்தான்

அப்படி என்றால்  என்கிட்ட பேச பிடிக்க வில்லை அதனால தான. இதுக்கு மட்டும் மெஸேஜ் அனுப்பி வச்சிருங்க  ப்லீஸ்

உன்னை எனக்கு பிடிக்கும் நீ பேசுறதும் பிடிக்கும் என்று அனுப்பினான் 

அடுத்து அவளிடம் இருந்து மெஸேஜ்  குமியும்

நிஜமாவா அப்படி என்றால்  என்னை  பிடிக்குமா. நீங்க  வேலை இருக்கிறததால்  தான் எனக்கு அனுப்ப லையா .நான் புரியாம  தொல்லை செய்றேணா   ஸாரீ பாஸ்.

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாஸ் முதலில் உங்களை பார்க்கும் போது எனக்கு ஒண்ணும் தோனாது ஆனா அன்று நீங்களும் என்னை நிமிர்ந்து பார்த்தது எனக்குள் பாதிப்பை உருவாக்கிவிட்டது 

நீங்க  எனக்குள்ளே  போன மாதிரி இருந்தது . ஏன் பிடித்திருக்கு என்று  காரணம் கேட்டால்  எனக்கு தெரியாது. ஆனா உங்களை அதிகமாக பிடிக்கும் 

கூடவே இருக்கணும் பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு.

வீட்டுக்கு போனா என்னை  நினைப்பிங்களா . அப்படியே  நினைச்சாலும்  என்ன நினைப்பிங்க சரியான லூசுணு தான.

உங்க கிரீன் ஷர்ட்  ரொம்ப பிடிக்கும் பாஸ். நாளைக்கு அதை  போடும் போது என் ஞாபகம் வருதானு சொல்லுங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.