இன்னைக்கு கோயில்லுக்கு போனீங்களா நல்லா சாமி கும்புடுவீங்களா எனக்கு கடவுள் பக்தியே கிடயாது பாஸ்
உங்களை மெஸேஜ் பண்ணி தொல்லை செய்துடே இருக்கேன் பாஸ் ஆனா நான் அனுப்புரத நீங்க படிக்கும் போது என் கூடவே இருக்குற மாதிரி இருக்கு அதான் அனுப்பிடே இருக்குறேன்
சாயங்காலம் நான் வரும் போது சுற்றி இத்தனை பேர் கூட நீக்குறீங்க நான் எப்படி உங்களை ஸைட் அடிக்க முடியும்
நாளைக்கு கடை லீவ் கிடயாது தான அதுக்கும் இல்லைனு பதில் அனுப்பிருங்க பாஸ் ஒரு நாள் பாக்காம இருக்க முடியாது.
உங்க வீட்டில யார் எல்லாம் இருக்கீங்க
எங்க அம்மா கிட்ட உங்க கடையில் ஆரஞ்சு பழம் வாங்கி தர சொன்னேன் ஆனா வாங்கி தர மாட்டிகுராங்க சளி புடிச்சிருக்குனுசொல்லி
நீ சாப்பிடியா என்று அனுப்பினான்
ஏற்கனவே மனசு சந்தோசமா இருக்கு இதுல இன்னைக்கு நீங்க மெஸேஜ் வேற பண்ணிரூக்கிங்க ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. அதனால பசிக்க வில்லை கொஞ்ச நேரம் உங்கள மெஸேஜ் பண்ணி கொடுமை பண்ணிட்டு போறேன் சரியா
இப்படி எதையாவது அனுப்பி கொண்டே இருப்பாள். நாம ஒரு வார்த்தை பேசுனா எத்தனை மெஸேஜ் ஐயோ இவள வச்சு என்ன தான் செய்யவோ.
இருவரும் காதல் சொல்லி கொள்ள வில்லை. இவன் அதிகம் பேசவும் இல்லை. இவனை பற்றி எதுவுமே தெரியாது அவளுக்கு. ஆனாலும் அவளால் நேசிக்க படுவதை விரும்பினான்
அவள் அனுப்புவதை படிக்கும் போதெல்லாம் அவனிடம் ஒரு ஆள் பேசி கொண்டிருப்பதாய் தோணும். அவனின் தனிமை உணர்வு அவனை விட்டு சென்றது அவனை கவனிக்கவும் ஒரு ஆள் இருப்பது நிம்மதியாய் இருந்தது
அவளை பார்த்த இந்த இரண்டு மாதங்கள் ரொம்ப சந்தோசமான நாள்கள் பாஸ் என்று சொல்லுவாள். ஆனா இவனுக்கும் அதே சந்தோசாமான நாள்கள் தான் அவை. அவள் சொல்லி விடுவாள் ஆனால் இவன் சொன்னதில்லை.
சொல்லணும் என் மனத்தில் உள்ள அனைத்தையும் அவளிடம் சொல்ல வேண்டும் ஆனால் சொல்ல முடியுமா என்னால். என் வீட்டில் பேச முடியுமா அவளை பற்றி. முருகா நீ தான் துணை இருக்கணும். ஒரு வார்த்தை நான் பேசினால் சந்தோச படுகிறாள் நான் இவளுக்கு கிடைக்காமல் போனால் தாங்கி கொள்வாளா .
அவளை விடு அவளை தவிர வேறு ஒருத்தியை உன்னால் கட்டி கொள்ள முடியுமா . முடியாது தான்ஒற்றை பார்வையால் என்னை மயக்கியவள் அவள் என்னை வைத்த கண் எடுக்காமல் பார்க்கும் போது வரும் சிலிர்ப்பை எனக்கு உணர்த்தியவள் அவள் இல்லாமல் நான் அதிக போராட்டங்களை சந்திக்க வேண்டும்.
தான் சட்டை யை தொட்டு பார்த்தான் அவளுக்கு பிடித்த சட்டை . ஸ்வீட் வேணுமாம் அவளுக்கு. இதே தொல்லை தான் அவளிடம் தான் அணிந்து வரும் இரண்டு சட்டைகளில் உள்ள கலரில் அவளும் அணிந்து கொண்டு ஸ்வீட் தாங்க என்று கேட்பாள்
உங்க கிட்ட உள்ள கலர்ல நான் ட்ரெஸ் போட முடிய வில்லை பாஸ் ஆனாலும் நான் போட்டுட்டு இருக்குரதும் கிரீன் தான் அதனால ஸ்வீட் தாங்க
குட்டி பசங்க கூட விளையாடுவீங்க தானே இப்ப ஆளவே காணும்
நீங்க சிரிச்சுகிட்டே இருக்கணும் பாஸ் எப்பவுமே
என்கிட்ட கிஸ் கேக்காதீங்க. நீங்க கேட்டு என்னால குடுக்க முடியாது னு நினைக்கும் போது கவலையா இருக்கும். அதனால கேக்காதீங்க நீங்க யாரிடமும் எதும் கேட்க கூடாது. எல்லாரும் உங்க கிட்ட தான் கேக்கணும்.
நீங்க ஹெல்மெட் தூக்கிட்டு நடந்து போகும் போது அழகா இருக்கும் தெரியுமா
இன்னைக்கு உங்க சாப்பாடு பாக்ஸ் பார்த்தேன் யாரும் இல்லை என்றால் தூக்கி கொண்டு வந்திருப்பேன்
சாப்பிட்டாயா சாப்பிட்டாயா என்று மட்டும் கேக்குறீங்க சாப்பிடாம இருந்தா வந்து ஊட்டி விட போறீங்களா
இப்படி எதையாவது அனுப்பி கொண்டே இருப்பாள். அதிலும் உங்களை மெஸேஜ் பண்ணி கொடுமை படுத்துறேன்ல எனக்கு உங்க கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு பாஸ் னு வேற சொல்லிறுவா.
அதும் காலைல வரும் போதும் போகும் போதும் பார்க்கும் அந்த ஒற்றை பார்வை அவனை என்னமோ செய்யும் . காதலை கற்று தந்தவள். அவளது கிறக்க பார்வையும் அதும் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் என்னை தேடி கடைசியாக என் முகத்தில் நிலைக்கும் அந்த பார்வை ஒரு நொடியில் கடந்து போய் விடும் ஆனால் இரவில் தூங்க விடாமல் செய்கிறாள் .
சொல்லணும் எல்லாமே அவளிடம் சொல்லணும். என்னுடைய ஆசை தவிப்பு ஏக்க்ம் காதல் அனைத்தையும் அவளிடம் சொல்லி விடனும்.
அன்று ஞாயிறு இவனுக்கு அழைத்தாள். என்ன வீட்டில இருந்து போன் பன்னீருக்க யாரும் இல்லையா
அம்மா வெளிய போய்ருக்காங்க.