(Reading time: 7 - 14 minutes)

படிப்பை முடித்திருந்தாளாவது வேலைக்காவது போயிருக்கலாம்.கடைசி செமஸ்டரின் ஸ்டடி ஹாலிடேஸிலேயே திருமணம் முடிந்ததால் படிப்பும் அதனூடையே நின்றுபோயிற்று.

வீட்டிற்கும் திரும்பிப்போக மனமில்லை.அவர்களை உதாசீனப்படுத்தியால் வந்த குற்ற உணர்வு பிறந்த வீட்டிற்கு செல்ல ஒரு தடங்களாக இருந்தது.என்ன செய்வது என்ற யோசனையிலேயே பல நாட்கள் கழிந்தன.அப்படியே போனாலும் தன்னை வீட்டிற்குள் சேர்ப்பார்களா என்ற தயக்கம் வேறு.

ஒருவழியாக அவளுடைய அடுத்த பிறந்த நாளும் வந்தது.எல்லா பிறந்த நாட்களுக்கும்  அம்மாவுடன் கோவிலுக்கு போவதும் பின் அருகிலுள்ள அனாதை ஆசிரமத்திற்குப் போய் அந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே ஒருமுறை இங்கு வந்து அளவு எடுத்து அதற்கேற்ப தைத்த துணியை குடுத்து,அதை அவர்கள் அணிந்து வந்ததும் அந்த குழந்தைகளுடன் சேர்ந்து அனைவரும் சாப்பிடுவர்.அன்று முழுவதும் அந்த ஆசிரமத்திற்கு தேவையான அனைத்து செலவும் அவளுடைய தந்தையுடையதே.

எப்படிப்பட்ட அன்பான குடும்பத்தை பிரிந்து வந்து இப்படி மாட்டிக்கொண்டோம் என்று எப்பொழுதும் போல இன்றும் யோசித்தாள்.

அதே கோவிலுக்கு போய் வந்தாலாவது மனம் சிறிது ஆறுதல் அடையும் என்று தோன்றவே கோவிலுக்கு புறப்பட்டு சென்றாள்.அங்கு எதிர்பாராதவிதமாக தாய்,தந்தை இருவரையும் சந்தித்தாள்.அவளையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

தந்தைதான் முதலில் அருகில் வந்தார்.”நீ புத்திசாலிப் பெண் என்று எனக்குத் தெரியும்.முட்டாளின் சொர்க்கத்தில் வாழ விரும்ப மாட்டாய் என நினைக்கிறேன். ஆயினும் உன்னுடைய பெண் குழந்தையையும் மனதில் வைத்து முடிவெடு” என்றார்.அவர் கூரிய விதமே நடந்த அனைத்தும் அவருக்கு தெரியும் என்பதை எடுத்துரைத்தது.

தாயைப் பார்த்தாள்.அதை கவனித்த தந்தை தொடர்ந்தார்.”பார் பாப்பா, எங்களுக்கு இருப்பது நீ ஒரே குழந்தை.ஆகேவே உன்னுடைய நலனில் உன்னைவிட எங்கள் இருவருக்கும் அக்கறை அதிகம்.வாணரசனின் குணம் தெரியவே முடிந்தளவு உங்கள் இருவரையும் திருமணம் செய்ய விடாமல் தடுக்க முயன்றோம்.அதன் ஒரு பகுதிதான் சொத்து எதுவும் கிடையாது என்றது.அதைக் கேட்டதும் அவனே திருமணத்தை நிறுததி விடுவான் என எண்ணினோம்.ஆனால் அவனோ குழந்தை பிறந்தால் மனம் மாறி மீண்டும் அனைத்து சொத்தையும் உனக்கு கொடுப்போம் என்று எண்ணியிருக்கிறான்.அது நடக்கவில்லை எனவும் அவனுடைய உண்மையான சொருபத்தை உன்னிடம் காட்டி விட்டான்.எங்களுடைய காலம் வரை உன்னை கண்ணில் வைத்து எங்களால் காப்பாற்ற முடியும்.அதன்பிறகு பணத்தைத்தான் எங்களால் உனக்கு விட்டு செல்ல முடியும்.உன்னை ஏமாற்றி பணத்தை அவன் பெயருக்கு மாற்றி விட்டு,உன்னையும் அவன் கொடுமை செய்தான் என்றால் என்ன செய்வது.எனவே நீ அவனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் நினைத்தோம்.அதனால்தான் குழந்தை பிறந்த பிறகும் நாங்கள் உன்னை சேர்க்கவில்லை.இப்பொழுதும் உன் மேல் அம்மாவிற்கு கோபம்தான்.ஒரு தோழிபோல உன்னிடம் பழகியவளை நீ சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்பதால் வந்த கோபம்தான்.மற்றபடி நீ என்ன செய்தாலும் உனக்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு.நீ இப்பவே எங்களுடன் வா.குழப்பத்தில் எடுக்கும் எந்த முடிவும் எப்பொழுதும் சரியாக இருக்காது.உன் மனக்காயம் குறைந்தவுடன் நாம் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்போம்” என்றார்.

உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் இப்பொழுது மதிக்கு புரிந்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.