(Reading time: 11 - 22 minutes)

அவங்க உடம்பு கூட கிடைக்கலை.. அன்னியிலேர்ந்து எங்கண்ணன் பித்து பிடிச்சாப் போல ஆயிட்டாரு..", என்று லேசாய் அழும் குரலில் முடித்தாள் மேகலை.

"ஹேய் மேகி.. கூல்மா.. கன்டிரோல் யுவர்செல்ஃப்.. சாரி.. எனக்குத்தெரியாது.. அவர் மௌனத்தின் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கிறதென்று.. சாரிம்மா.. ஆனா அவரும் தன் கூட்டிலிருந்து வெளியே வரணும்னா.. நீ அவரையும் இன்வால்வ் செய் இதிலே.. கொஞ்சம் மனசாந்தி கிடைக்கும் அவருக்கு.. நான் அவரோட அதிகம் பேசலை.. ஜஸ்ட் பார்க்கும் போது ஒரு சிரிப்பு மட்டும் தான்.. சோ என்னாலும் இதில் தலையிட முடியாதும்மா.. பார்த்து நடந்துக்கோ.. வேணுமின்னா உங்க சித்தி ஹெல்ஃப் கேட்டுக்கோ.. தமயந்தி மேடம்.. கைட் செய்வாங்க உனக்கு..", என்று முடித்தவன் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தான்.

தானும் உடன் எழுந்தவளுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது.. அன்றைக்கு டான்ஸ் கிளாஸ் இருப்பது.

"சார் நான் கிளம்பறேன்.. கிழே டான்ஸ் மாஸ்டர் காத்திருப்பார்.. இன்னிக்கு மூணு புது ஸ்டூடண்ட்ஸ் வர்றாங்களாம்.. ஏற்கனவே கொஞ்ச நாளாக வருகிறவர்கள்தானாம்.. நான் கொஞ்சம் பிசியாக இருந்ததாலே என்னை டிஸ்டர்ப் செய்யலை மாஸ்டர்.. இப்போ ஃப்ரீ ஆனதும் கொஞ்சம் பேசிக் கிளாஸ் எடும்மான்னு சொன்னாரு.. கொஞ்சம் பெரியவங்கன்னு சொன்னார்.. இதோ எங்கம்மாவோட பணத்தாசைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.. கீழே டான்ஸ் மாஸ்டரிடம் எங்க கார் ஷெட்டை வாடகைக்கு விட்டிருக்காங்க.. மூணு காரும் வெளியே நிக்குது.. பார்க்கிங்கில் சாயங்காலம் கிளாஸ் நடத்துறார் சார்.. பார்த்துக்கோங்க..", என்று சொன்னவள்,

"வறேன் சார்..", என்று சொல்லிவிட்டு சட்டென்று கீழே இறங்கிப் போய்விட்டாள்..

மெல்ல அவனும் கீழே இறங்கினான்.. டான்ஸ் மாஸ்டரை இந்த ஒன்றிரண்டு மாத காலமாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்..

மணிமேகலை நன்றாய் நடனமாடுவாள்.. ரேணுகாவிற்கோ ஓ.சியில் கிளாஸ் ஆகிப்போனது.. வாடகையும் லாபம்.. “சும்மா கார் நிறுத்துமிடம் தானே.. எப்பவும் கார் வீட்டு வாசலில் இருக்கும் சிமெண்டு தரையில் தானே நிக்குது.. பார்க் செய்ய இவங்களுக்கெல்லாம் நேரம் எங்கே.. எப்பவும் வெளியேத்தானே நிக்கிது.. இப்போ அதையும் வாடகைக்கு விட்டு பணம் வருது..", என்று பீற்றிக் கொன்ள்வாள்.

கீழே போனவனுக்கு அதிர்ச்சிதான்..

அங்கே.. மணிமேகலை சொன்ன புத்தம்புது மாணவிகளாய் நம் சமோசா கேங்க்.. தையா தக்கா.. என்று ஸ்டெப்ஸ் போட்டுக் கொண்டிருந்தைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது.

'ஆஆண்டவா இதுங்க அலம்பலுக்கு ஒரு அளவே இல்லையா.. என்று நினைத்துக் கொண்டவன் அவர்களைப் பார்க்க.. என்னமோ நாட்டியப் பேரொளி பத்மினி கணக்கில் அலட்டிக் கொண்டு தப்புத் தப்பாக ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்தார்கள் மூவரும்.

இப்போதெல்லாம் இது ஒரு ஃபேஷனாகிப் போகிவிட்டது.. ஏதாவது ஒன்றில் ஈடுபட்டால் அந்தத் தினமே அவர்கள்.. ஏதோ கச்சேரி இல்லை, அரங்கேற்றம் செய்வது போல உடுப்புக்களும் ஆடை அணிகலன்களும்.

ஒரு சல்வார் கமீசே போதுமானது நாட்டியப்பயிற்சிக்கு.. இவர்களோ ஒரு படி மேலே போய் தேர்ந்த நாட்டியமங்கயர் அணியும் அரைப் புடவையும்.. ஜிமிக்கி அலங்காரமுமாய்.. பார்க்க காமெடி பீஸ் மாதிரி இருந்தார்கள்.. ‘இதுகளை எல்லாம் சுனாமி சுருட்டாதா?..’ என்று யோசிக்கத் தொடங்கினான்.

சிங்காரவேலனைப் பார்த்ததும் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி திருப்பிக் கொண்டாள் சுந்தரி.

வாயில் கேட்டைக் கடந்து சிரித்தபடி வெளியேறினான் வேலன்.. அவனுக்கா தெரியாது இன்றைய நங்கைகளின் மனமும் குணமும்.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1138}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.