“நான் மட்டும் தனியாவா இருக்க முடியும்?”
“சரிதான். அவளுங்களை தங்கையா நினைத்தா ஒரு அண்ணன் கிடைச்சான்னு சந்தோசப்பட வேண்டியதுதானே?”
“அண்ணனாவா? அதுவும் இவனையா?”
கேட்டவள் தன் வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரிப்பாள்.
“இப்ப எதுக்கு லூசு மாதிரி சிரிக்கிறே?”
“பின்னே! சிரிக்காம என்ன செய்ய சொல்றே?”
“சொல்லிட்டு சிரிடி.”
“அம்மா! நீ சொன்னது அவளுங்க யார் காதிலாவது விழுந்திருந்தால் என்ன ஆகும் தெரியுமா?”
“அப்படி என்ன ஆகுமாம்?”
“அவளுங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்.”
“அந்த அளவுக்கு பலவீனமானவளுங்களா?”
“அதெல்லாம் இல்லை. அவளுங்களே உன் மகனை மன்மதனா நினைச்சு ஜொள்ளு விடறாளுங்க. அவளுங்க எப்படி அவனை அண்ணனா ஏத்துக்க முடியும்?”
குறை போல் சொல்லும் நி
...
This story is now available on Chillzee KiMo.
...
்னே நினைவு வந்தது.
தங்களிடம் இல்லாத சொத்தா?
எதற்காக பெரிதாக ஆசைப்படனும்? இப்போது வேதனைப்படனும்?
“நடந்ததையே நினைத்து எதுக்கு உன்னை வருத்திக்கறே?”
“என்னால் முடியலை.”
சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அதைத் துடைக்கக்கூட அவள் முயலவில்லை.