(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 09 - தீபாஸ்

oten

வளின் குட்டி ஹன்ட் பேக்கை அவள் கையில் இருந்து அகற்றி தனது இன்செய்திருந்த சட்டையின் மேல் மூன்று பட்டனை கழட்டி அதை உள்ளே வைத்து பட்டனை போடும்போபொது அந்த பேக்கினுள் இருந்த போன் ஒலிஎழுப்பியது.

மனம் தட..தட..க்க அதனை எடுத்து ஆன்செய்து காதிற்கு கொடுத்தான் ரமேஷ்.

அப்பொழுது அந்தப்பக்கம் இருந்து ஓர் பெண்மணியின் குரல், அழகுநிலா!, நான் ஆதித்தின் அம்மா ஜானகி பேசுகிறேன் என்றது அவன் காதில் விழுந்ததும் ரமேசிற்கு ஆதித் அழகுநிலாவை காப்பாற்றிவிடுவான் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. .

உடனே ஆண்டி ஆதித் சார் இருக்கிறாரா? இங்க அழ்குநிலாவிற்கு ஆக்சிடென்ட் ஆகி வேப்பேரி ரோட்டில் மயங்கிக்கிடக்கிறார்கள். நீங்கள் சாரை கொஞ்சம் உதவிக்கு அனுப்பமுடியுமா? என்று கேட்டான்.

ஆதித்தின் வீடும் அந்த ரோட்டுக்கு பக்கத்தில்தான் இருந்தது. எனவே ஜானகி ஒருநிமிஷம் பா... என்று பதட்டத்துடன் ஆதித்...... என சத்தமாக குரல் கொடுத்தாள். அப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்த ஆதித் இன்னும் உடைகூட மாற்றாமல் தனது ஷூவை கலட்டி வைத்துவிட்டு தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தவன் என்னம்மா? என்று அவளின் பதட்டம் பார்த்து கேட்டதும் அழகுநிலாவிற்கு ஆக்சிடெண்டாம் நம்ம வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் வேப்பேரி மெயின் ரூட்டில் தான் மயங்கிக்கிடக்கிறாளாம் நீ போய் என்னவென்று பார்! என்று அவனிடம் கூரியவள், இதோ இப்போ ஆதித் அங்கே வந்துருவான் பா என்றாள்.

ஜானகியின் அருகில் வந்த ஆதித் போனை கையில் வாங்கி நீங்க யார் என்று ஆதித் கேட்டதும் ரமேஷ் சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் அழகுநிலாவோடு வேலை பார்க்கும் ரமேஷ். நாங்கள் இருவரும் பைக்கில் வரும் பொது ஒரு மினி லாரி எங்களை இடித்துவிட்டு போய்விட்டது என்று அவன் சொல்லிமுடிபதற்குள் மறித்து பேசிய ஆதித், ஆம்புலன்சுக்கு போன் பண்ணவேண்டியதுதானே? என்று கேட்டான்

அவனின் பேச்சை கிட்ட இருந்து கேட்ட ஜானகிக்கே கோபத்தை கொடுத்தது. ஆதித்.....என்று அவள் குரல் உயர்த்தி கூப்பிட்டதும் நிமிர்ந்து தாயின் முகத்தை பார்த்ததும் அவளின் தவிப்பை கண்டு ஏதாவது அவளுக்கு அம்மாவிற்காகவாவது செய்யலாம் என்று நினைக்கையிலேயே....

ரமேசின் பதட்டமான குரல் சார்.... சார்.... ப்ளீஸ் இப்போ எங்களை ஆக்சிடென்ட் செய்ததே அந்த மினிஸ்டரின் வேலை தான். மேலும் அவர்களே ஆம்புலன்சை வேறு இங்கு அனுப்பி அழகுநிலாவை கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் இதோ எங்களின் அருகில் ஓர் ஆம்புலன்ஸ் வேறு வருகிறது என்று பதட்டத்துடன் கூறியதும்,

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆதித், ஒரு பத்து நிமிஷம் சமாளிங்க ரமேஷ் நான் வந்துவிடுகிறேன் என்றவன் தொடர்பை துண்டித்தான்.

பிரதர் அவங்க தலையில் இருந்து ரத்தம் நிறைய போகுதுபாருங்க இந்தாங்க இந்த டவலால் அழுத்திப்பிடிங்க என்று ஒருவன் டவல் கொடுக்கும் போதே அவர்களின் அருகில் வந்து நின்ற ஆம்புலன்சில் இருந்து நான்குபேர் ஸ்ட்ரெச்சருடன் இறங்கி வந்தனர்.

தனது காரில் ஏறிய ஆதித் வேப்பேரி ரோட்டிற்கு அதை ஓடவிட்டபடி அந்த ஏரியா போலிஸ் ஸ்டேசனின் எஸ்.ஐ அவனுக்கு வேண்டியவரானதால் அவருக்கு தனது மொபைலில் அழைத்தான் .

போனை எடுத்த எஸ்.ஐ சொல்லுங்க ஆதித் என்றதும் வைப்பேரி ரோட்டில் தனக்கு வேண்டிய அழகுநிலா என்றபெண் ஆக்சிடென்ட் ஆகி இருபதாகவும் அந்த ஆக்சிடென்டை செய்யச்சொல்லி ஏவியவனே பின்னாடி ஆம்புலன்சை அனுப்பி அவளை தூக்கிப்போக முயல்கிறார்கள் உடனே அதை தடுத்துநிருத்தும்படியும் தான் ஸ்பாட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், மீதிவிபரம் நேரில் பார்த்து சொல்வதாக கூறி இணைப்பை துண்டித்தான்.

அந்த எஸ் ஐ அந்த ஏரியாவின் மெயின் ரூட்டின் ரோந்துப் போலீசுக்கு போன் செய்து ஆக்சிடன்ட் பற்றி கூறி போலி ஆம்புலன்ஸில் அங்கு காயம்பட்டிருகும் பெண்ணை கடத்துவதாக தகவல் வந்திருப்பதாக கூறி உடனே ஸ்பாட்டுக்கு போய் நிலவரத்தை அறியுமாறு கூறினார்

ரோட்டிலோ அழ்குநிலாவை தூக்கிப்போக அந்த ஸ்ட்ரச்சரை அவளுக்கு அருகில் கிடத்தியதும் ரமேஷ், “நான் ஆம்புலன்சிற்கெல்லாம் போன் செய்யவில்லையே! எப்படி அதற்குள் நீங்க வந்தீர்கள்?” என்று பேச்சை வளர்பதற்காக கேட்டபடி அழ்குநிலாவை அவர்கள் தூக்காதவாறு பிடித்துக்கொண்டு கேட்டான்.

உடனே அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற அந்த ஸ்டூடன்ஸ், அவன் ஆதித்திடம் பேசும்போது அங்குதான் இருந்ததினால் அவர்களுக்கும் அந்த ஆம்புலன்ச்சில் இருந்து இறங்கிய நால்வரையும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்த்தனர்.

அந்த நால்வரின் தோற்றமே பார்க்க ரவடிகள் என்று அப்பட்டமாக காட்டிக் கொடுத்ததால் அந்த பையனில் ஒருவன் தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயன்றான்.

உடனே அந்த ரவ்டிகளில் ஒருவன் தம்பி ஒழுங்கா போனை பையில போட்டுட்டு திரும்பிப்பார்க்காம போயிருங்க. பார்க்க சின்ன பையன்களா இருக்கீங்க ஒரு அடிக்கு தாங்க மாட்டீங்க! என்று மிரட்டினான்

அப்பொழுது அங்கு ரோந்து போலீஸ் விரைந்து வந்தது அதை பார்த்ததும் மாரி போலீஸ் வருதுடா வாங்க போய்விடலாம்... என்றபடி அவர்களின் ஆம்புலன்சில் ஏறி தப்பித்துச்செல்ல முயன்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.