(Reading time: 20 - 39 minutes)

அதில் ஒருவன் ரமேசின் சட்டை பட்டன் திறந்திருந்த இடைவெளியில் அவளின் பேக்கை பார்த்து அவன் வைத்திருந்த கத்தியை காட்டி வேகமா அந்த பேக்கை என்கிட்டே கொடுத்திடு இல்லையென்றால் உன்ன குத்திடுவேன்... என்று போலீஸ் ஜீப்பின் மீது ஒருகண்ணும் கிளம்பி தனக்காக காத்துக்கொண்டிருந்த ஆம்புலன்சின்மீது ஒரு கண்ணும்மாக இருந்தான்.

மற்ற ரவடிகள் வேனில் ஏறிவிட்டதாலும் போலீஸ் ஜீப் சமீபத்தில் வந்துகொண்டிருப்பதாலும் தைரியம் வந்த அந்த ஸ்டூடன்ஸில் ஒருவன் தான் வைத்திருந்த பேக்கை அந்த ரவடி கத்தி பிடித்திருந்த கையில் கத்தியை குறிபார்த்து தூங்கி எறிந்தான்.

கனமாக தனது கையில் அந்த பேக் மோதவும் அந்த கத்தியை நழுவவிட்டவன் போலீஸ் ஜீப் அருகில் நெருங்கிவிட்டதால் ஓடிப்போய் ஆம்புலன்சில் ஏறவும் வேகமெடுத்து பறந்தது.

அங்கு போலீஸ் ஜீப்பும் உண்மையான ஆம்புலன்சும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது நின்றதும் போலீஸ் அங்கு நிலவரத்தை விசாரித்துக்கொண்டு இருக்கும்போதே ஆதித்தும் அங்கு விரைந்து வந்தான் .

அழகுநிலா தலையில் கட்டிய துணியையும் மீறி ரத்தம் கசிய மயங்கியிருந்த நிலையை பார்த்தவனுக்கு ஏனோ! நெஞ்சம் உரியவனுக்கு துடிப்பதுபோல் துடித்தது. ஆம்புலன்சில் அவளை ஏற்றும்போதே ஆதித் தனக்கு தெரிந்த பெரிய மருத்துவமனைக்கு எடுத்து போகச்சொன்னான் ரமேஷையும் அவளுடன் ஆம்புலன்சில் ஏறச்சொல்லி ஆம்புலன்சின் பின்னால் தனது காரை செலுத்தினான்

அவன் முன்கூட்டியே அந்த மருத்துவமனைக்கு தகவல் சொல்லி இருந்ததால் வெளியில் ஆம்புலன்ஸ் நின்றவுடனே அங்கு விரைந்துவந்த டாக்டர் டீம்ஸ் அழகுநிலாவை ஐ சிou you யூ வார்டில் அட்மிட் செய்யதனர்.

ரமேசுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டு கட்டுப்போட்டு வெளியில் வந்ததும் ஆதித்தை அவன் தேடினான்.

ஆதித் டாக்டரிடம் அவளின் நிலையை விசாரித்துக்கொண்டு இருந்தான்.

அவள் தூக்கி எறியப்பட்டது அங்கு ரோட்டோரமாக உணவு விடுதி கட்ட அடித்திருந்த மண்மேட்டில் விழுந்ததால் பெரிதாக அடி ஒன்றும் இல்லையென்றும் விழுந்த வேகத்தில் மண்டை மோதியதால் காயம் ஆகி இங்குவர தாமதம் ஆனதால் இரத்தம் நிறைய வெளியேறியதாலும் அதிர்ச்சியாலும் மயக்கத்திற்கு சென்றுள்ளதாகவும் தலையின் காயத்தை பரிசோதித்து மேலும் மூளைக்கு ஏதும் பாதிப்பு இருக்கிறதா என்று எம் ஆர் ஐ ஸ்கேன் எடுத்துவிட்டு சொல்வதாக் மருத்துவர் கூறிக்கொண்டிருந்தார்.

அவர்களின் அருகில் வந்த ரமேசும் டாக்டர் கூறியதை கேட்டு அவளுக்கு உயிர் பயம் இல்லை என்று தெரிந்த ரமேசும் நிம்மதியடைந்தான்.

மேலும் அங்குவந்த போலீசும் ஆதித் இப்போதைக்கு ஆக்ஸிடென்ட் என்று மட்டும் எழுதிக்கொள்ளும்படியும் மேலும் அழகுநிலா சரியானதும் தானே அவளுடன் போலீஸ் ஸ்டேசன் வந்து மேற்கொண்டு எதுவும் கம்ப்ளைன்ட் கொடுக்கவேண்டுமென்றால் கொடுப்பதாகவும் கூறினான். 

அவர் போனதும் ரமேஷ் ஆதித்திடம், இது பக்கா கொலை முயற்சி. ஏன ஆக்சிடன்ட் என்று மட்டும் எழுதச்சொன்னீர்கள்? என்று கேட்டான்.

உங்களுக்கு மினனிஸ்டர் காந்தனின் செல்வாக்கு பற்றித்தெரியாது. இப்போ கோபப்பட்டு கம்ளைண்ட் கொடுத்தால், மினிஸ்டர் மகன் தனது அப்பா பேரை சொன்னால் உடனே விசாரணை செய்வது போல் செய்து பின் அந்த மொபைலை போலீசிடம் ஒப்படைகச் சொல்லுவார்கள்.

இந்த போனில் மினிஸ்டருக்கோ அல்லது அவரின் மகனுக்கோ எதிரான பதிவு ஏதோ ஒன்று இருக்கவேண்டும். அதனால் இதை போலீசுக்கு கொடுப்பதால் டிப்பார்ட்மெண்டை அவரின் அதிகாரத்தால் கைக்குள் கொண்டுவந்து போனை மினிஸ்டர் கைப்பற்றிக்கொள்வார்.

மேலும் இந்த ஆக்சிடென்ட் கேசை திசை திருப்ப அன்று ஹோட்டலில் அந்த மினிஸ்டர் மகன் அழகுநிலாவுடன் எடுத்த வீடியோ பதிவை வேறுமாதிரி சித்தரித்து வெளியிட்டுவிட்டால் அது நிலாவிற்குத்தான் பிரச்சனை

எனவே, அந்த வீடியோ பதிவை முதலில் டெலிட் செய்யவேண்டும். இரண்டாவது அந்த போனில் அப்படி என்ன வீடியோ அமைச்சருக்கு எதிராக உள்ளது என்று பார்வையிட்டு முடிந்தால் அந்த பிரச்சனையை வைத்து அழ்குநிலாவை திரும்ப அவர்கள் டார்ச்சர் செய்யாதபடி மிரட்ட என்னால்முடியும் என பதில் கூறினான் ஆதித்.

அவன் கூறியதை கேட்ட ரமேஷ் அரசியல்வாதியை எதிர்க்க தன்னைப் போன்ற அழகுநிலாமாதிரியான சாமானிய மக்களால் முடியாது. அதற்கு ஆதித் போன்ற செல்வாக்கான ஆட்களால் மட்டும்தான் முடியும் என்று உணர்ந்துகொண்ட ரமேஷ், சாரி சார்! நாம் இருவரும் ப்ராப்பரா அறிமுகமே ஆகவில்லை. அழ்குநிலாவிற்கு தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாம் அறிமுகமாகியிருகிறோம் என்று சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.