(Reading time: 20 - 39 minutes)

அந்தபக்கம் இருந்த சுமதி பதட்டத்துடன் அச்சோ... என்ன ஆச்சு இப்போ. என்னால் அங்க வர முடியாது நிச்சயம் முடிந்ததும் நானும் விசுவும் வருகிறோம் என்றாள்.

அதனை கேட்ட ரமேஸ், ‘சுமதி’ சீரியஸ் எதுவும் கிடையாது இன்னைக்கு உங்க வாழ்கையின் முக்கியமான நாள் என்று கூறிக்கொண்டு இருக்கும் பொது குடுங்க ரமேஸ் நான் பேசுறேன் என்று வாங்கிய அழகுநிலா சுமதி எனக்கு இலேசான அடிதான் நீயும் விசுவும் சந்தோசமாக இருக்கனும் இன்னைக்கு நீ இங்க வருவது சரியில்லை. நானே நாளைக்கு உன்னை வந்து பார்கிறேன் என்றவள் தொடர்பைத் துண்டித்தாள்.

இவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே அவளுக்கு தலையில் ஸ்கேன் பார்த்த விபரத்தை நர்ஸ் கையில் சுமந்தபடி டாக்டருடன் அவளுடைய அறைக்கு வந்தவர்

அதித்திடம் ஷி இஸ் நார்மல், தலையில் அடிபட்டதில் காயம் மட்டும் கொஞ்சம் டீப்பா இருக்கு அழ்குநிலாவின் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றவர், காயம் கொஞ்சம் பலமாக இருப்பதால் ஆறுவதற்கு தையலும் போட்டிருக்கிறோம் .

மேலும் ரத்தம் மிகவும் வெளியேறிவிட்டதாலும் மேலும் உடலில் அங்காங்கே சிராய்ப்பு காயம் உள்ளதால் கொஞ்சம் காயம் ஆறும்வரை சத்தான ஆகாரம் சாப்பிடும் படியும், நீங்க விருப்பப்பட்டால் இங்கே கிளினிக்கில் இன்று தங்கலாம் ஆனால் கட்டாயம் தங்கவேண்டும் என்று அவசியமில்லை என்று கூறினார்.

அவர் கூறியதும் அழகுநிலா பதில் கூறும் முன்பே, இல்ல டாக்டர் அம்மா வீட்டிற்கு கூட்டிவரச்சொன்னார்கள் அவங்க கவனித்துக் கொள்வார்கள் நாங்க டிஸ்சார்ஜ் ஆகிக்கொள்கிறோம் என்று கூறியதும்,

நர்ஸ்.. அப்படினா இவங்களுக்கு தேவையான மெடிசின் எல்லாம் எழுதி கொடுத்துவிட்டு பில் செட்டில் பண்ண டீடைல்டு கொடுத்திடுங்க என்றவர்,

அழ்குநிலாவிடம், டேக்கேர் என்றபடி ஆதித்துடன் பேசிக்கொண்டே வெளியில் சென்றார்.

ஆதித்தின் பேச்சில் அதிர்ச்சியான அழகி அவனிடம் மறுத்துபேச முயன்றதை கவனிக்காதவாரு டாக்டருடன் வெளியில் சென்றதைப் பார்த்தபடி ம்...கூம் அதெப்படி அவங்கவீட்டுக்கு நான் போவது. நான் மறுத்துப் பேசப்போவதை கவனித்தும் கவனிக்காததுமாதிரி இப்படிப் போறாரே என்ற எண்ணியபடி அவன் போன பக்கமே பார்த்தபடி இருந்த அழ்குநிலாவை,

அவன் வெளியே சென்றதும் ரமேஷ் அழகுநிலாவிடம், ஆதித் என்று மொட்டையாக ஏன் சொன்னீங்க அழகுநிலா . ஜானகி பில்டர்சின் ஓனர் ஆதித்தராஜ் என்று ஏன என்னிடம் சொல்லவில்லை. எவ்வளவு பெரிய ஆள் அவர். அவரே நேரில் வந்து உங்களுக்காக இத்தனை செய்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக நீங்க அவங்களுக்கு மிகவும் முகியமானவர்கலாகத்தான் இருக்கவேண்டும் என்று பிரமிப்புடன் சொல்லிமுடித்தான்

என்னது ஜானகி பில்டர்ஸ் எம் டி ஆதித்தராஜா? அவன் கூறிய செய்தி அவளுக்கு புதிது என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தால்கூட ரமேஷ் இப்போ நம்ப மாட்டான் என்று அவனது பார்வையில் புரிந்துகொண்ட அழகுநிலா, அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று வார்த்தைகளை யோசித்து வாய் திறக்கும்போது அங்கு பிரசன்னமானான் ஆதித்

எனக்கு டைம் ஆகிடுச்சு, வா முதல்ல... உன்ன வீட்டில் அம்மாகிட்ட சேர்த்திட்டு நான் கிளம்பனும் என்று அவசரப்படுத்தியவன் ராமேசை பார்த்து நாங்க கிளம்பறோம் உங்களுக்கும் நிறைய காயம்பட்டிருக்கு கவனிச்சுக்கோங்க என்றான்.

அழ்குநிலாவிற்கு சுர்... என்று கோபம் எழுந்தது. என்னிடம் அபிப்ராயம் கேட்காமல் அதெப்படி அவங்க வீட்டிற்கு என்னை கூட்டிப்போகும் முடிவை எடுக்கலாம் இவர். பெரிய இவராக இருக்கலாம்! எனக்கு ஆபத்தில் உதவியவராக இருக்கலாம், அதுக்காக் ஒரு கல்யாணம் ஆகாத பெண் கூப்பிட்டவுடன் வந்துவிடுவேன் என்று எப்படி நினைக்கலாம் என்ற கோபத்துடன், ரமேஷ்.. அவர் கூட நான் அவங்க வீட்டிற்கு போகல என்ன ஹாஸ்டலில் விட்டுடுங்க என்று அவள் கூறியதும், அவளை முறைத்துக் கொண்டு பேசத்தொடங்கும் போது, அவர்கள் ரூமிற்குள் வந்த நர்ஸ் அவளின் கையில் இருந்த வேயின் நீடிலை அகற்றிவிட்டு அவளுக்கு கொடுத்திருந்த மெடிசின்களை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என விபரித்து தலையில் இருக்கும் கட்டை இரண்டு நாள்கழித்து மாற்றவர வேண்டும் எனச் சொல்லி வெளியேறினாள்.

அவள் போனதும் அவளின் முன் தனது மொபைலை நீட்டிய ஆதித், அம்மா லைன்ல இருக்காங்க அவங்களிடமே நீ உங்க வீட்டிற்கு நான் வரமாட்டேன் என்று சொலிவிடு என்றபடி கொடுத்தான்.

தயக்கத்துடன் அதனை வாங்கி காதில் அழகுநிலா வைத்தவுடனே, ஜானகி ,நிலா இந்த ஆண்டி வீட்டிற்கு நீ வருவதற்கு யோசிக்கலாமா? இந்த நிலையில் உன்னை தனியா ஹாஸ்ட்டலில் விட்டுட்டு இருக்க என்னால் முடியாது நீ கண்டிப்பா இங்க வந்துதான் ஆகனும் ஆதித் கிட்ட மறுத்துச் சொல்லாதே. அவனுக்கு உன்னை சமாதானம் செய்ற பொறுமை எல்லாம் கிடையாது. என் மேல் நம்பிக்கை இருந்தால் நீ மறுப்பு ஏதும் சொல்லாமல் அவனுடன் கிளம்பிவா என்றவர், அவள் பேச வாய்ப்பு கொடுக்காமலே தொடர்பை துண்டித்தார்.

அழகுநிலாவிற்கு தான் போகாமல் இருந்தால் ஜானகியை அவமதிப்பதுபோல் ஆகிவிடுமோ! என்ற தயக்கம் ஏற்பட்டது. மேலும் இது ஒன்றும் கிராமம் கிடையாது ஆதித்ஒன்றும் தனியாக அந்த வீட்டில் இல்லையே! அவங்க வீட்டில் பெரியவங்க இருக்காங்க. சோ! போறது ஒன்றும் தப்பில்லை என்று தன்னை சமாதானப்படுத்தியவள் ஆதித்திடம், ஆண்டி நான் வராட்டி வருத்தப்படுவாங்க அதனால் நான் உங்க கூட வருகிறேன் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.