(Reading time: 20 - 39 minutes)

அவள் கூறியதை எப்பொழுதும் போல் தன் ஒரு புருவ உயர்த்தலுடன் ஏற்றுக்கொண்டவன், ரமேஷ், நீங்க வீட்டிற்கு போக டாக்சி எதுவும் அரேஞ் பண்ணவா? என்று கேட்தும், இல்ல சார் நான் என் பிரண்டை வரச்சொல்லி போன் பண்ணியிருகிறேன் இப்போ அவன் வந்துடுவான், என்றபடி அழகுநிலாவை எழுந்து வரச் சொல்லி தலை அசைவுடன் அந்த ரூமை விட்டு வெளிச்செல்ல திரும்பும் போது அழகுநிலா தனது படுக்கையை விட்டு எழுந்தாள்.

ரத்தம் நிறைய வெளியேறியதாலும், உடலின் அசதி மற்றும் வலியாலும் நின்றவுடன் தலைசுற்றி விழப்பார்த்தவளை, ஏய்.... பார்த்து என்று கூறியபடி விரைந்துவந்து தாங்கிப்பிடித்தான் ஆதித்.

பின் அவளை தாங்கியபடி நடக்க ஆரம்பித்தான் .முதலில் தன இயலாமையால் அவனை தாங்கிப்பிடித்து நடக்க ஆரம்பித்த அழகுநிலா பின் சற்று முயன்று தன் காலை ஊன்றி நடக்க ஆரம்பித்த பிறகு இப்போ நானாவே வருகிறேன். இப்போ கொஞ்சம் தலை சுற்றல் சரியாகிவிட்டது என்று அவன் பிடித்திருப்பதால் ஏற்பட்ட சங்கடத்துடன் முனுமுனுத்தாள் அவனிடம்.

அந்த நேரம் ரமேசின் நண்பன் அங்கு அவர்களை எதிர்கொண்டு வந்தவன் என்னடா ஆச்சு உனக்கு ஒன்றும் அடி ரொம்ப கிடையாதுள்ள என்றவன் நீ சொன்ன உன் கலீக் அழகுநிலா எப்படி இருக்காங்க என்றான்

இதோ இவங்கதான் தலையில் கொஞ்சம் காயம் பட்டிருக்கு ஆனா பயப்படறமாதிரி இல்லை என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவளை தாங்கி பிடித்திருந்த ஆதித்தை பார்த்த அவன் அவனை அடையாளம் கண்டுகொண்டான்.

பார்த்தவன் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது. ஏனெனில் ஆதிதை பற்றி அறிந்தவன் அவன். வர்சாவின் நண்பர்கள் வட்டத்தில் உள்ளவன் அவன். வர்சாவை தவிர வேற எந்த பெண்களையும் நெருங்க விடாத கண்ணியவான் என்றும் அவனின் திறமையின் மீதும் வளர்ச்சின் மீதும் பிரமிப்பு மிக்கவன் அவன்.

அவன் அழ்குநிலாவை தாங்கி பிடித்து நடந்து வந்துகொண்டிருப்பதை பார்த்தவனுக்கு அவர்களின் உறவை தவறாக விமரிசிப்பதற்கு மனம் தயங்கினாலும் மற்றொரு மனமோ இவரின் உயரத்திற்கு அம்மா தங்கை மற்றும் அவருடையவளை தவிர மற்ற யாரையும் இப்படி தாங்கி பிடிக்கும் ஆள் இல்லை என்ற உண்மை உரைக்க, ஹாய் சார் நீங்க ஆதித்த ராஜ் தானே ஐ ஆ,ம் வினோத் என்றவன் கண்கள் ஆராய்ச்சியோடு இருவரையும் தழுவியதை கண்ட இவருவரும்,

தங்களை அறியாமலே விலகி நின்றனர் உடனே ஆதித் யா ,ஐ ஹேவ் சம் அர்ஜென்ட் வொர்க், சோ ஐ அம் லீவிங் என்றவன் ரமேசின் பக்கம் திரும்பி, அப்போ நீங்க உங்க நண்பன் கூட கிளம்புங்க நாங்க வருகிறோம் என்றவன் அழ்குநிலாவிடம் இங்க நில்லு நான் காரை எடுத்து வந்துவிடுகிறேன் என்றபடி விரைந்தான்

அழ்குநிலாவிற்கும் இப்பொழுது தன்னால் ஏற்கனவே ஆதித்தின் காதல் வாழ்க்கையில் பிரச்சனை. இப்பொழுது அவருடன் வீட்டிற்கு போவதால் மேலும் தொந்தரவாகவும் சுமையாகவும் இருக்கும் என பெரும் தயக்கம் சூழ்ந்தது. எப்படி அவனிடம் கோபப்படுத்தாமல் ம்றுத்துக் கூறுவது என்ற யோசனையுடன் அவள் அங்கு நின்றுகொண்டிருகும் போதே ஆதித்தின் கார் அவளின் முன் வந்து நின்றது.

இயந்திரம்போல் அதில் ஏறும் போது ரமேஷ் வேகமாக அவளிடம் வந்து இதோ உன் பேக் அழகுநிலா இதில் அந்த போன் பத்திரமாக் இருக்கு. ஆதித் சார்கிட இதை கொடுத்திடுங்க அழகுநிலா. சார் இந்த பிரச்னையை ஈசியா சமாளிச்சுடுவார். உடம்பை கவனிச்சுக்கோங்க என்று கூறியவன் சென்றுவிட்டான்.

அவன் கூறியதைக் கேட்டவாறே ஆதித்துடன் காரில் ஏறியவலுக்கு ஏனோ ஜானகி சொல்லை மீறி அவனிடம் பேச பயமாக இருந்தது. காரில் ஏறியதில் இருந்து அவன் அழ்குநிலாவின் பக்கமே திரும்பாமல் தன காதில் ஹெட் போனை பொருத்தியவன் தனது பி.ஏவிடம் அவனது பிசினஸ் பற்றிய பேச்சுகளில் மூழ்கிக்கொண்டே ட்ரைவிங் செய்து கொண்டிருந்தான்.

அவனது கையில் கார் குலுங்கல்கள் இல்லாமல் விமானத்தில் பறப்பது போன்ற வேகத்துடன் சாலையில் ஓடியது. அவனின் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் வரை அவனது பிஸ்னஸ் பேச்சும் முடிவதாக இல்லை.

கார் வந்து நின்றதும் ஆரன் கொடுத்தான் அப்பொழுது ஓடிவந்த வீடு வேலை கார அம்மாவிடம் இவங்களை கை பிடிச்சு அம்மாகிட்ட கூட்டிப்போங்க தலையில் காயம் பட்டிருக்கு. இந்தா அவங்க பேக்கையும் வாங்கிக்கோ. எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை காரணமாக வெளியே போக வேண்டியிருக்கு என்றவன் அழ்குநிலாவின் கார் டோரை ரிமோட்டின் உதவியால் திறந்து, உள்ள அம்மா இருப்பாங்க நீ போ என்று கூறியதும் காரை விட்டு அழகுநிலா இறங்கினாள்.

அதற்குள் வாசலுக்கு வந்த ஜானகி வேகமாக படி இறங்கி அழகுநிலாவின் அருகில் வருவதற்குள் காரை ரிவேர்சில் எடுத்து திருப்பிய ஆதித் அம்மா பை என்று கை காட்டிவிட்டு சென்ற மகனை முறைத்தபடி,

பாரு இவன உன்னை கூட்டிட்டுவந்தவன் உள்ள கூட வராமல் அப்படியே ஓடுறத. அவன் அப்படிதான் நிலா, நீ ஒன்னும் மனசில் வச்சுக்காத என்றவள், அவளின் தலையில் இருந்த கட்டையும், ஓய்ந்து போன அவளின் தோற்றத்தையும் பார்த்தவள் கைத்தாங்கலாக அவளை பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள்.

----தொடரும்----

Episode 08

Episode 10

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.