(Reading time: 27 - 53 minutes)

23. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ

இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்

மொத்தில் இது என்ன வகை பந்தமோ

இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்

இது என்ன கனவா நிஜமா

இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்

இது என்ன பகலா இரவா

இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே...

காயத்ரியிடம் செக்அப் முடித்து சென்னை வந்து இருதினங்கள் கடந்திருந்தது..இரண்டு நாட்களில் ஷரவன் ஷரவந்தி சிவா என மாறி மாறி கார்த்திக் சஹானாவிடம் தனிமையில் பேசிவர பெரியவர்களுக்கு சந்தேகம் எழ ஆரம்பித்திருந்தது..ஏற்கனவே 20 நாட்கள் தங்குவதாய் இருந்த விடுமுறையை குறைத்து உடனே வந்ததே பெரியவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது..சஹானா அம்மா நேரடியாகவே கார்த்திக்கின் தாயாரிடம் போனில் விசாரித்துவிட்டார்..இளசுகளும் எதையோ தெளிவாய் மறைக்க இன்று சேகர் சிவா குடும்பத்தோடு கார்த்திக்கின் வீட்டிற்கே வந்துவிட்டார்..சில நிமிடங்கள் பொதுவான உபசரிப்போடு கழிய கார்த்திக்கின் தந்தை மெதுவாய் விஷயத்தை ஆரம்பித்தார்..

கார்த்திக் ஏன்ப்பா ட்ரிப் இவ்ளோ சீக்கிரமா முடிச்சுட்டு வந்துட்டீங்க அதுவும் வரபோறோம்நு ஒரு போன் கூட பண்ணல நானும் சரி நீயா சொல்லுவநு நினைச்சேன்..ஆனா இப்போ நீங்க எல்லாரும் பெரியவங்க எங்ககிட்ட எதையோ மறைக்குறீங்கநு தோணுது..சொல்லுப்பா எதுவும் பிரச்சனையா??பாரு பொண்ணைப் பெத்தவரு என்னவோ ஏதோனு பயந்து போய் இருக்காரு என்னப்பா இதெல்லாம்??

அப்பா ஐயோ நீங்க பயப்படுற அளவு ஒண்ணுமேயில்லப்பா நீங்கலா இந்த அளவு இந்த விஷயத்தை எடுத்துப்பீங்கநு நா நினைக்கல..என அவர்களின் ஊகத்தை எண்ணி பயந்து ஒவ்வொருவரும் தங்களுக்குள் கண்களால் பேசிக் கொள்ள..மோகன் விடுவதாய் இல்லை..

கார்த்திக் இது சரியில்ல..நாங்க எதாவது விஷயம் இருக்காநு உன்னை கேக்கல..கண்டிப்பா ஏதோ இருக்கு அதை மறைக்காம சொல்லுனு சொல்றோம்..சமந்தியையும் வச்சுட்டு நீ இப்படி பண்றது தப்புப்பா..என்னனு சொல்லு..

கார்த்திக் சஹானாவை பார்க்க அவள் சம்மதமாய் தலையசைக்க நீண்ட மூச்செடுத்தவன் அனைவரிடமும் மேலோட்டமாய் விஷயத்தை கூறி முடித்தான்..கீதாவும் மோகனும் ஒன்றுமே கூறாமல் இருக்க..சேகரும் துளசியும் கார்த்திக்கின் கையை பற்றிக் கொண்டனர்..

மாப்பிள்ளை உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது..என் பொண்ணை பத்திரமா பெரிய ஆபத்துல இருந்து மீட்டு எடுத்துருக்கீங்க..வாழ்நாள் பூரா நாங்க கடமைபட்டுருக்கோம்..நாங்ககூட இவ்ளோ நிதானமா யோசிச்சுருப்போமாநு தெரில..ரொம்ப நன்றிப்பா என கண்ணீர் மல்க சேகர் அவனை தழுவிக் கொண்டார்..சஹானா அவர்களை சமாதானப்படுத்த கார்த்திக் மோகனின் அருகில் சென்று அமர்ந்தான்..

அப்பா..

நீ ஒண்ணும் சொல்ல வேணாம் கார்த்திக்..

அம்மா நீயாவது கேளும்மா..எனக்கு உங்களைப்பத்தி தெரியும் இருந்தாலும் இந்த விஷயம் தெரிஞ்சு கல்யாணத்துக்கு எதாவது தடை வந்துருமோநு பயந்துட்டேன்..அதுமட்டுமில்லாம சஹானாக்கே 4 நாள் முன்னாடி தான் தெரியும்..அவளுக்கு தெரிஞ்சுடகூடாதேநு தான் மறச்சுட்டேன்ம்மா..சாரிப்பா..

மோகன் அவன் கைப்பற்றி அமர்த்த அவரருகில் அமர்ந்தான்..கார்த்திக் நீ பொறந்ததுல இருந்து ஒவ்வொரு விஷயத்துலயும் எங்கள பெருமைப்படுத்தி தான் பாத்துருக்க..இப்பவும் அதேதான்டா நடந்துருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு..ஒரு பையனா அப்பா அம்மாக்கு உதவுறது பெரிய விஷயம் கிடையாது..நம்மளயே நம்பி தன் குடும்பத்தைவிட்டுட்டு வர பொண்டாட்டியையும் மனம் நோகாம பாத்துக்கனும் அதுதான் ஆணுக்கு அழகு..நீ புள்ளையா நிருபிச்சதைவிட ஆயிரம் மடங்கு புருஷனா நிரூபிச்சுட்டடா..நீங்க ரெண்டு பேரும்100வருஷம் நல்லாயிருக்கனும்..என கண்கலங்க அவரை இறுக தழுவிக் கொண்டான்.கீதாவும் மகனை ஆதரவாய் தாங்கிக் கொண்டார்..

அனைத்தும் சுபமாய் முடிய சிவா ஷரவந்தியின் திருமணபேச்சு ஆரம்பிக்க கார்த்திக் நான்கு மாதங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுகூற சிவாவோ வானில் பறக்காத குறைதான்…மதிய உணவிற்கு அனைவருமாய் வெளியே செல்ல முடிவெடுத்து தயாராக கார்த்திக் கார் சாவி எடுப்பதற்காக தன் அறைக்கு வந்தான்..அவன் பின்னே மெதுவாய் வந்தவள் பின்னிருந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.