(Reading time: 27 - 53 minutes)

ஹே சஹி..

தேங்க்ஸ் கார்த்திக் தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்..லவ் யூ சோ மச்..அவளை தன்புறம் இழுத்தவன் நெற்றியில் இதழ்பதித்து எனிதிங் பார் யூ மை சஹி பேபி..என்று அவளை அழைத்துச் சென்றான்..

வழக்கம்போல் சிறியவர்கள் ஒரு காரிலும் பெரியவர்கள் தனியாய் வர இந்த இரு காதல் ஜோடிகளிடமிருந்து தப்பிக்க ஷரவன் தன் காதல்புறாவோடு போனில் பேசிக் கொண்டு வந்தான்.

என் அழகியே நீ எப்போ படிச்சு முடிப்ப??

என்ன??

என்ன என்ன இப்படி 600 கி.மீ தாள்ளி உக்காந்து எவ்ளோ நாள்தான் காலத்தை ஓட்றது..நினைச்சா பாக்ககூட முடில மிஸ் யூ பேட்லி..நாங்க வெளில போய்ட்டு இருக்கோம் நீயும் இருந்தா நல்லாயிருந்துருக்கும் தெரியுமா??

ம்ம்..இப்போதைக்கு ஒரு குட் நியூஸ் மட்டும் வேணா சொல்லட்டுமா??

பார்ரா சஸ்பென்ஸ்லா வைக்குற என்னனு சொல்லு குட் நியூஸா இல்லையாநு நாதான் சொல்லனும்..

இன்னும் ஒன் மந்த்ல செமஸ்டர் முடியுதுல..அதுக்கப்பறம் பிஜி க்கு சென்னை காலேஜ்ல தான் அப்ளை பண்ண போறேன் அப்பாவும் சரிநு சொல்லிட்டாரு..அதுமட்டுமில்ல கார்த்திக் அண்ணாதான் அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கி குடுத்துருக்காரு நாங்கலா இருக்கோம் தைரியமா அனுப்புங்கநு சொன்னாராம்..

வாவ் வாவ் அப்போ நீ நம்ம  வீட்ல தங்கிதான் படிக்க போறியா??

ஆஆஆ ஆசை தோசை அதெல்லாம் இல்ல அண்ணா ஹாஸ்டல் பாத்து தரேன்னு சொல்லிருக்காங்க..

அதானே..ம்ம் 600 கி.மீக்கு இது பரவால்லைதான்..சரிடா ஹோட்டல்க்கு வந்துட்டோம் நைட் கால் பண்றேன் பை..என்றவாறு காரைவிட்டு இறங்க ஷரவ் சிவா சஹானா சேர்ந்து அவனை ஒரு வழி ஆக்கிவிட்டனர்..

ஒரு சின்ன பையன் தனியா மாட்டினா போதுமே உடனே ஓட்ட ஆரம்பிச்சுருவீங்களே..

யாரு நீ சின்ன பையனா இவ்ளோ நேரம் நீ வறுத்த கடலைல கார் புல்லா தீஞ்சவாடை..இதுல சின்ன பையனாம் என ஷரவ் சிரிக்க..

மாமா பக்கத்துல இருக்குற தைரியத்துல ஆட்ற ம்ம் வீட்டுக்கு வா உனக்கு இருக்கு..

அடடா நானும் சிவாவுமே பரவால்ல போலயிருக்கே..இப்படி அடிச்சுக்குறீங்க…பசி உயிர் போகுது வாங்க சாப்ட போலாம்..-சஹானா..

பேச்சும் சந்தோஷமுமாய் உணவை முடித்து அனைவரும் கிளம்ப தயாராக சிவா  தன் காரில் ஷரவ் குடும்பத்தை அழைத்துச் செல்வதாய் கூற சேகர் சங்கரையும் அவர் மனைவியையும் தன்னோடு அழைத்துச் சென்றார்..கார்த்திக் சஹானாவோடு காரில் அமர,எங்க போலாம் சஹிம்மா??

 ஆனாலும் நீயும் சிவாவும் இப்படி திருட்டுதனம்லா நல்லா பண்றீங்க..எப்போ இந்த ப்ளான் போட்டீங்க???

ஹே சிவாவா தான் கூப்ட்டு போனாருடா..நா எதுவுமே சொல்லல என பாவமாய் கண்ணை உருட்ட..

ம்ம் நம்பிட்டேன்.. சரி எங்க வேணா போலாம் இவ்ளோ ப்ளான் பண்ண நீ அதையும் ப்ளான் பண்ணிருப்பியே சொல்லு எங்க போறோம்???

வாவ் யூ ஆர் மை டார்லிங்  சஹி..கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட ப்ளான்லா பண்ணல பட் நீயும் நானும் சேர்ந்து மூவி போனதேயில்லல அதான் போலாம்நு தோணிச்சு..என்ன டிக்கெட் கிடைக்குதோ போய்ட்டு வரலாம் என்ன சொல்ற அப்படியே மால்ல கொஞ்சம் சுத்திட்டு வர்லாம்..

ம்ம் என்னவோநு நினைச்சேன் நீ தேறிட்ட மாமா…குட் என அவன் தோள்தட்ட பணிவாய் கைகட்டி அதை ஏற்றுகொண்டு சிரித்தான்..

ன்றைய நாள் சஹானாவுக்கு மறக்க முடியாததாய் இருந்தது..வீட்டிலேயே தாங்குபவன் வெளியில் கேட்கவும் வேண்டுமா..அவளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவள்முகம் பார்த்து தேவையுணார்ந்து என குழந்தையாய் பார்த்துக் கொண்டான்..இப்படியாய் வாரங்கள் நகர சஹானா மகிழ்ச்சி என்ற ஒன்றை தவிர வேறெதுவும் அறிந்திருக்கவில்லை..கார்த்திக்கும் விடுமுறை முடித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான்..பகல் பொழுதில் அனைவரும் வெளியே சென்றுவிட சஹானா கீதாவோடும் மோகனோடும் பேசியபடி கீதாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள்..கார்த்திக்கை பற்றி மேலும் மேலும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்…மாலை கார்த்திக் வந்தவுடன் அன்று நடந்த அனைத்தையும் அப்படியே ஒப்பிக்க அவனும் தன்னுடைய நாள் சென்றவிதம் பற்றி கூறுவான்..

அன்றும் வழக்கம்போல் கார்த்திக் ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வர சஹானாவை எங்கும் காணவில்லை..என்னவென கீதாவிடம் கேட்க மொட்டைமாடிக்குச் சென்றதாய் கூறினார்..உடைமாற்றி இருவருக்குமாய் காபி எடுத்துக் கொண்டு மாடிக்குச் செல்ல வானத்தில் எதையோ ரசித்தபடி கைகட்டி நின்றிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.