(Reading time: 27 - 53 minutes)

ம்ம் கரெக்ட்தான் பட் இதுதான் எதார்த்தமும் மாமா..கொஞ்சநாள்ல எங்க மைண்டே ஆட்டோமடிக்கா மாறிடுது..இப்போ அது அம்மா வீடா மாறிடுது இதுதான் என் வீடா இருக்கு..அந்த பிரிவை ஈடுசெய்றமாதிரியான புகுந்தவீட்டு உறவுகளும் புருஷனும் கிடைச்சுட்டா அது ஒரு பெரிய விஷயமா தெரியாது..இப்போ எனக்கு கிடைச்சா மாதிரி என கண்சிமிட்டி சிரிக்க அவள் கன்னம் கிள்ளி தன்னவளை நினைத்து உவகை கொண்டான்..

இரு குடும்பங்களின் வாழ்வும் இனிமையாய் நகர கௌரி சென்னைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது..அவ்வப்போது சஹானாவை பார்க்கும் சாக்கில் வீட்டிற்கு வர வார இறுதியில் ஷரவன் சென்று அவளை பார்த்து வருவான்..கார்த்திக் அனைத்தையும் தெரிந்திருந்தாலும் கண்டும் காணாமல் இருந்தான்..ஏனெனில் இவர்களின் சந்திப்பால் இருவருமே தங்கள் கடமைகளை ஒழுங்காய் கவனிக்க தவறவில்லை..

மூன்று வருடங்களுக்குப் பிறகு,

தேவி எங்க இருக்க நீ??ரொம்ப படுத்துற நீயே வந்துரு என்கிட்ட..என்றவாறே தன் அறைக்குள் நுழைந்தாள் சஹானா..

ஆரம்பிச்சுட்டீங்களா ரெண்டு பேரும் இன்னைக்கு என்ன பிரச்சனை???

மாமா எல்லாம் நீ குடுக்குற இடம் தான் வர வர என் பேச்சை கேக்கவே மாட்றா என கார்த்திக்கிடம் பஞ்சாயத்திற்கு நின்றாள்..

பேபி அவளுக்கு இரண்டரை வயசுதான் ஆகுது நீ என்னவோ கல்யாண வயசுல இருக்குற பொண்ணை திட்றமாதிரி திட்டிட்டு இருக்க என்று அவன் சிரிக்க சஹானா அவளை முறைத்தாள்..

அவளை தன்புறம் இழுத்தவன்..ஹே பொண்டாட்டி ஒரு குழந்தைக்கு அம்மாவான உன்னையே நா செல்லம் கொஞ்சிட்டுதான் இருக்கேன் அப்பறம் என் பொண்ணை மட்டும் கொஞ்சமாட்டேனா?என மூக்குரச

அசடுவழிய தன்னவன்மேல் தலைசாய்த்துக் கொண்டாள்..ஜல் ஜல் என்ற கொலுசோசை கேட்க அவனை விட்டு விலகியவளை கைப்பற்றி தன்னருகிலேயே நிற்க வைத்தவன் வாசலைப் பார்க்க..

காத்தி என்ன பணுற??என்றவாறு ஆலாக்கு சைசில் பெரிய மனுஷி ஓடிவர,

அடி வாலு எத்தனை தடவ சொல்றேன் அப்பாவா பேர்சொல்லி கூப்டாதநு கேக்கமாட்டியா??

கேக்கமாட்டே என்றவாறு தந்தையிடம் கைத்தூக்க வாரி அணைத்துக் கொண்டான்..அப்படி சொல்லுடா என் தங்கம்..

ம்ம் போதும் உங்க அப்பா பொண்ணு பாசம் வா வா ஸ்கூல்க்கு டைம் ஆச்சு..

நா ஸ்ச்சூலுக்கு போ மாட்டேன்..நோ என மறுபடியும் வெளியே ஓட, ஐயோ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிகுறாளே என அவளைத்துரத்த சிரித்தவாறே வேலைக்கு தயாரானான் கார்த்திக்..

சித்தா சித்தா என்ன தூக்கு அம்மா வரா என ஷரவனைச் சுற்ற ஷரவன்  அவளை கையில் ஏந்தி சுற்றினான்..தேவி டார்லிங் அம்மா பாவம்தான நீ போய் ரெடி ஆகி சமத்தா ஸ்கூல்க்கு போய்ட்டு வருவியாம் நா ஆபீ போய்ட்டு வந்து உன்ன ஐஸ்கீரீம் கடைக்கு கூட்டிட்டு போவேனாம்..குட் கேள்ஸ்லா சித்தா சொன்னா கேப்பாங்க..

ம்ம்ம் சயி அப்போ என்ன கௌரி சித்தி பாக்க கூட்டிட்டு போவியா என கேட்க சஹானாவோடு வந்த கீதா அதைக் கேட்டு ஷரனைப் பார்க்க சஹானா ஒன்றும் தெரியாதவளாய் குழைந்தையை வாங்கிக் கொண்டு நகர கீதாவும் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார்..

ஷரவன் என்ன செய்வதென தெரியாமல் அண்ணணிடம் போய் நிற்க..வழக்கம்போல் நம்ம கூல் மாஸ்டர் நீ ஆபிஸ் கிளம்பு ஷரவா நா பேசிக்குறேன் என அசால்ட்டாய் கூறி நகர்ந்தான்..

சாப்பாட்டு மேஜையில் மோகனும் கார்த்திக்கும் உணவருந்த சஹானாவும் கீதாவும் பரிமாறினர்..கார்த்திக் மெதுவாய் தன் தந்தையிடம் பேச்சை ஆரம்பித்தான்..

அப்பா அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்..

என்னப்பா சொல்லு..

அது வந்துப்பா..நம்ம ஷரவன் கல்யாணத்தைப் பத்தி தான்..

ஓ..அதபத்தியா சொல்லுப்பா பொண்ணு படிப்பை முடிச்சுட்டாளா??கல்யாணதேதி முடிவு பண்ணிரலாமா??

சாப்பாட்டை வாயில் வைத்தவனுக்கு புரையேற சஹானா அருகிலிருந்த தண்ணீரை பருக கொடுத்தாள்..சற்று நிதானித்தவன்.அப்பா..

சொல்லுப்பா பொண்ணு வீட்ல பேசிரலாமா??

நீங்க யாரைபத்தி சொல்றீங்கப்பா..

உன் தம்பியும் நீயும் எந்த பொண்ணை முடிவு பண்ணிருக்கீங்களோ அந்த பொண்ணுதான்..

கார்த்திக் என்ன கூறவென தெரியாமல் முழிக்க சஹானா மெதுவாய், அங்கிள் கார்த்திக் பாவம் பொழச்சுப் போட்டும் விட்டுருங்க என சிரிக்க கார்த்திக் கீதாவைப் பார்த்தான்..

கார்த்தி அப்பா கௌரியைப் பத்தி தான் பேசுறாரு..எங்களுக்கு எல்லாம் தெரியும்..மனபூர்வமா சம்மதமும் தான்..

ம்மாமா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.