(Reading time: 27 - 53 minutes)

டுத்த இரண்டாவது நாள்  ஷரவன் தம்பதியர் தேனிலவுக்காக கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க காலை 11 மணியளவில் பைல்ட் என்பதால் சஹானா அவர்களுக்கானதை செய்து கொடுத்துக் கொண்டிருக்க வாசலில் சத்தம் கேட்டு வெளியே சென்றாள்.அங்கே சிவா ஷரவந்தியோடு தன் அப்பா அம்மா சிவா பெற்றோர் என அனைவரும் வந்திறங்குவதை கண்டவள் ஆச்சரியத்தோடு சென்று வரவேற்றாள்..

வாங்கப்பா வாம்மா..என்ன திடீர்நு எல்லாருமா வந்துருக்கீங்க போன்ல கூட ஷரவ் நீ ஒண்ணுமே சொல்லல..

ஏன் இங்க நாங்க வரக்கூடாதா சொல்லிட்டு தான் வரணுமா என சிவா கேட்க.தெரியமா கேட்டேன் எருமை உள்ள வா..

ம்ம் எது மாறினாலும் இந்த மரியதை மட்டும் மாறமாட்டேங்குதே ம்ம் …

கார்த்திக்கை அழைப்பதற்காக அறைக்குச் சென்றவள் அங்கு அவன் தயாராகிக் கொண்டிருப்பதை கண்டு குழம்பினாள்..என்ன மாமா இன்னைக்கு லீவுநு தான சொன்ன இப்போ எங்க கிளம்பிட்டு இருக்க??

கூல் சஹிம்மா அத்தை மாமா எல்லாரும் வந்தாச்சு போல நா போய் அவங்களைப் பாக்குறேன் நீ அழகா ரெடி ஆய்ட்டு வா பாக்கலாம்..

அவங்க வர்றது உனக்கு ஏற்கனவே தெரியுமா??என்ன நடக்குது இங்க??

பேபி இன்னும் ஹாவ் அன் அவர்ல எல்லாமே தெரியும் உனக்கு நீ சம்மத்தா நா சொல்றத செய் பாக்கலாம்..என கன்னம் கிள்ளி விசிலடித்தவாறே வெளியே சென்றவனை பார்த்தவளுக்கு ஆர்வம் இன்னுமாய் அதிகரித்தது..கப்போர்டைத் திறக்க வழக்கமான அவன் பாணியில் உள்ளே ஒரு பார்சல் இருக்க மென்னகையோடே அதை கையில் எடுத்து பிரித்தாள்..அழகிய கடல்நீல நிற பட்டுப்புடவையும் அதற்கேற்றவாறு சின்னதாய் அதே நிற கற்கள் பதித்த நெக்லஸ் செட் இருந்தது..ஆர்வம் தாங்காமல் வேகமாய் அதை உடுத்தியவள் கண்ணாடியில் தன்னை சரிப்பார்த்தவாறு வெளியே வரகீதா கையில் கொண்டு வந்த மல்லிச்சரத்தை அவள் தலையில் சூட்டினார்..அம்ம்ம்மாமா நீ அழகாயிருக்க நாமயெல்லாம் இப்போ எங்க போறோம் தெரியுமா என தேவிகா அவள் காலைக் கட்டிக் கொள்ள ஷரவனும் சிவாவும் ஹே வாயாடி உன்ன இப்போ எஎன்ன பண்றோம் பாரு  என அவளை கையில் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினர்..

அனைவருமாய் காரில் கிளம்பி செல்ல சஹானா அமைதியாய் தன்னவனை ரசித்தவாறே அமர்ந்திருந்தாள்..அடுத்த 10வது நிமிடம் ஓரிடத்தில் கார் நிற்க இறங்கியவளின் கண்கள் அங்கிங்கு நகரவில்லை..கார்த்திக் அவளருகில் வந்து நிற்க அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள்..

மாமா..

ம்ம் நீ மறந்துருப்ப ஆனா நா மறக்கமாட்டேன் சஹிம்மா..நீ கத்துக்கிட்ட விஷயம் எப்பவும் வீணாப் போய்ட கூடாது..அதுக்காக தான் இந்த எஸ்.கே பொடிக்..எஸ் பார் சஹானா அண்ட் கே பார் கார்த்திக்..பிடிச்சுருக்கா???

நீ எனக்கு பிடிக்காதத என்னைக்குமே பண்ணமாட்டியே மாமா..தேங்க் யூ சோ மச்..

எனிதிங் பார் யூ சஹிம்மா போ போய் ரிப்பன் கட் பண்ணு நல்லநேரம் முடியபோகுது எல்லாரும் வெயிட் பண்றாங்க பாரு..பெருமையோடு ககத்திரியை தன்னவன் கைகளில் கொடுக்க இருவருமாய் சேர்ந்தே கட் செய்து உள்ளே சென்றனர்..

சின்ன இடம்தான் இருப்பினும் அம்சமான இன்டீரியரோடு கண்கவரும் ஆடைகளோடும் அழகாய் காட்சியளித்தது..என்னால முடிஞ்சது சஹிம்மா..ப்யூசர்ல டெவலப் பண்ணிக்கலாம் மெயினா இந்த மாதிரி ரெசிடென்ஷியல் ஏரியால ஓபன் பண்ண ரீசன் இது கொஞ்சம் பார்ஷ் ஏரியாசோ நல்ல டிசைன்ஸ் மேனேஜபில் ரேட்ல குடுத்தோம்னா சீக்கிரம் டெவல்ப் ஆகிடும் ஆல்சோ ஸ்ட்ரிச்சிங் ஆப்ஷன் இருக்குறதால அதுக்காக வர்றவங்களும் வருவாங்க இப்போதைக்கு அதோ அவங்க ரெண்டு பேரையும் டெய்லர்ஸா போட்ருக்கேன்..தேவையை பொறுத்து வேணும்னா ஆள் சேத்துக்கலாம்..எல்லாம் ஓ.கே வாடா எனக்கு தெரிஞ்ச லெவல்ல பண்ணிருக்கேன் வேற எதுவும் மாத்தனும்னாலும் சொல்லு பண்ணிக்கலாம் என அவள் பதிலுக்காக அவளை பார்க்க அக்கம்பக்கம் பார்த்தவள் சட்டென அவன் கன்னத்தில் இதழ்பதித்து லவ் யூ சோ மச் கார்த்திக்..ஐ பீல் வெரி வெரி ப்ரௌட்..தேங்க்ஸ் அ லாட் மாமா..கடைதிறந்த முதல் புடவையை கீதாவிற்கும் துளசிக்கும் கொடுக்க ஷரவ் கௌரி மற்றும் சிவாவின் தாய்க்கும் ஒன்றை பரிசளித்தாள்..

அன்றைய நாளின் மகிழ்ச்சி நீண்டு கொண்டேயிருப்பதாய் தோன்றியது சஹானாவிற்கு குழந்தையை தூங்க வைத்துவிட்டு பால்கனிக்கு வந்தவள் வானத்தையே பார்த்திருக்க கார்த்திக் அவள்காதருகில் மூக்குரசி என்ன தொழிலதிபர் அவர்களே தூங்க போலையா என்று சிரிக்க,

எப்படி தூங்குறது மாமா கழுத்து வரை சந்தோஷத்துல மூச்சடைக்குது..நீ ஏன் இப்படியிருக்க..தனக்கு ஒருபடிமேல பொண்டாட்டிய வச்சுபாக்குற நினைப்பு எல்லா புருஷன்களுக்கும் வந்துராது மாமா..நீ லட்சத்துல ஒருத்தன் மாமா..என கண்கலங்க தோள் சாய்ந்து கொண்டாள்..

சஹிம்மா..

மனதில் உன்னை சுமந்து

உயிராய் உன்னில் கலந்து

நீயே கதியென உன் சதியாய்

ஜென்ம ஜென்மமாய்

நின்னையேசரணென்று அடைந்தேன்

என் உயிரே.!!!..

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னோட உனக்கான சஹியாகவே பிறக்கனும் மாமா..அப்படி நடக்கும்னா எனக்கு மோட்சமே வேணாம் என்றாள் கண்கொள்ளா காதலோடு..

ஹலோ ப்ரெண்ட்ஸ்..என்னுடைய இரண்டாவது கதையை வெற்றிகரமாக முடித்ததற்கு சில்சீக்கும் வாசகர்களுக்கும் முதல் நன்றி..நிச்சயமாய் என்னால் இந்தளவு எழுத முடியும் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நீங்கள் அனைவரும் தான் மிக முக்கிய காரணம்ஒவ்வொரு ரியாக்ஷன் எண்ணிக்கையிலிருந்து கமெண்ட் வரை அனைத்துமே அந்த எபியிற்கான திருப்தியை தரும்..கார்த்திக் சஹானாவின் பயணம் இதோடு முடிவடைகிறது..கூடிய விரைவில் என் அடுத்த கதையானஇன்பமே வாழ்வாகிட வந்தவனேதொடர் மூலம் அனைவரையும் சந்திக்க வருகிறேன்..அதற்கும் உங்களுடைய பேராதரவு நிச்சயம் வேண்டும்..நன்றி நன்றி நன்றி மக்களே.. smilesmilesmile

******முற்றும்******

Ninnai saranadainthen - 22

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.