(Reading time: 20 - 39 minutes)

அவன் கூறியதும் ஆதித், ஐ ஆம் ஆதித்தராஜ் ஜானகி பில்டர்ஸ் எம்டி என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டான். .ரமேசிற்கு ஆதிதை எங்கோ பார்த்தமாதிரி இருந்ததது. மேலும் அவன் தோரணையும், போலீஸ் முதல்கொண்டு டாக்டர் வரை அவனிடம் பேசிய பாங்கும் அவனை செல்வாக்கு மிகுந்த நபர் என்பதை உணரச்செய்தது. ஆதித் ஜானகி பில்டர்ஸ் எம் டி என்று தெரிந்ததும் இன்றைய தொழில் உலகின் ஹீரோவிடமா தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று பிரமிப்புடன் ஓர் எட்டு அவனை விட்டு தள்ளி நின்று மரியாதையாக மேலும் மரியாதையாக அவனிடம் பேசத்தொடங்கினான். .

ஆதித்துடைய பெயர் மட்டும் தொழில் உலகில் பிரபலம். பொதுவாக அவனின் புகைப்படங்கள் எந்த மேகசீனிலும் அவன் போட அனுமதிப்பதில்லை. தன்னுடைய பத்திரிக்கையாளர்கள் எடுக்கும் பேட்டிகளை அவனது ஜானகிபில்டர்ஸ் எம்பலம் மற்றும் அவனது நிறுவனத்தின் முகப்பு புகைப்படத்துடன் மட்டுமே வெளிவரும். மேலும் தன முகம் எல்லோருக்கும் பரிச்சயமாவது அவனுடைய ப்ரைவேட் வாழ்க்கையை பாதிக்கும் என்பது அவனது கருத்தாக இருந்தது.

ரமேஷ், அவனை பற்றி அறிமுகப்படுத்தி முடிக்கும் போது அங்கு வந்த நர்ஸ் சார் பேசன்ட் கண் முளிச்சுட்டாங்க என்று சொன்னதும் இருவரும் அழகுநிலாவை பார்க்க அறைக்குள் சென்றனர்.

அங்கு ஆதித்தை எதிர்பார்க்காத அழகுநிலா ஒருநிமிடம் இவர் எப்படி இங்கே என்று யோசனையுடன் ரமேசை பார்த்தாள். உடனே ரமேஷ், சார் மட்டும் ஆக்சிடென்ட் நடந்த இடத்திற்கு வரவில்லை என்றால் என்னால் எதுவுமே செய்திருக்க முடியாது. இப்போ நீ பத்திரமா இருப்பதற்க்கு சார் தான் காரணம் என்று கூறிகொண்டிருந்தான்.

அப்பொழுது ஜானகி, ஆதித்துக்கு மொபைலில் அழைத்தாள் அழகுநிலா எப்படி இருக்கிறாள்? என்று விசாரித்தார் .

மயக்கம் தெளிஞ்சிருச்சு போனை அவகிட்டயே குடுக்கிறேன் பேசுங்க என்று அவளிடம் தம் மொபைலை நீட்டி அம்மா பேசுறாங்க என்றான்.

அவளிடம் நலம் விசாரித்த ஜானகி அந்த கடவுள் புண்ணியத்தில் இதோட போய்விட்டதே உனக்கு! உடம்பு சரியானதும் என் கூட அம்மன் கோவிலுக்கு வரணும் நீ இந்த கண்டத்திலிருந்து மீண்டுவந்ததும் உன்பேரில் நான் அங்க அன்னதானம் செய்வதாக வேண்டி இருபதாக சொன்னார் ஜானகி.

அழ்குநிலாவிற்கு அவரின் அன்பும் ஆதித்தின் உதவியும் மூச்சுமுட்டும் அளவிற்கு நன்றிக்கடன் அவர்களிடம் பட்டதுபோல் இருந்தது. உணர்ச்சியில் வார்த்தை வர மறுத்தது.

கரகரத்த தனது குரலை கஸ்டப்படுத்தி மறைத்து உங்களை மாதிரியும் உங்களின் மகன் மாதிரியும் நல்லவர்கள் உதவி எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்ட்டம். நான் உங்களுக்கு ஆயுசுக்கும் கடமை பட்டிருக்கிறேன். எப்படி என் கடனை அடைக்கப்போகிகறேன் என்று எனக்கு தெரியல. கோபுரத்திற்கு குடிசையால் என்ன உதவிடமுடியும் என கேட்டாள்.

அதனை கேட்ட ஜானகி அசடு மாதிரி பேசாதே அழகி, மனுசமக்கள் ஒருத்தருக்கொருத்தர் உதவறது போய்... பெரிசா பேசிட்டுயிருக்க. சரி உன்வீட்டிற்கு உனக்கு ஆக்சிடன்ட் ஆனா விஷயத்தை சொல்லிட்டீங்களா உன்னை கூட்டிப்போக எப்ப உன்வீட்டில் இருந்து வரப்போறாங்க? என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் அச்சோ!... ஆண்டி வீட்டிற்கெல்லாம் சொல்றமாதிரி பெருசா எனக்கு எதுவும் அடிபடல, அம்மாவிற்கு தெரிந்தால் என்னை வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இப்போவே ஊருக்கு கூப்பிட்டுபோக நிற்பாங்க. நான் ஒருவருஷம் கண்டிப்பா வேலை பார்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன் என்று சொன்னாள்.

அவள் கூறியதை கேட்டதும், யோசனையுடன்.... “போனை ஆதித்திடம் கொடு அழகுநிலா” என்றாள்.

எதற்கு கொடுக்கச் சொல்கிறாள் என்று தெரியாமல் போனை ஆதித்திடம் நீட்டினாள் அழகுநிலா

வாங்கி ஆதித் காதில் போனை வைத்ததும், ஆதித் டிஸ்சார்ஜ் ஆனதும் அழகுநிலாவை இங்கேயே கூட்டிக்கொண்டு வந்துவிடு. இந்த நேரத்தில் ஹாஸ்ட்டலில் தனியா அவளை விடமுடியாது. ஒரு இரண்டுநாள் கவனித்து பின் அவளை அனுப்பலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் குறுக்கே பேசவந்த ஆதிதிடம், நீ எதுவும் மறுத்துச் சொல்லகூடாது ஆதித்.

எனக்கு அழகுநிலாவை ரொம்ப பிடிச்சிருக்கு. மேலும் ஒரே ஊர்காரங்க ஒருத்தரை ஒருத்தர் கஷ்ட காலத்திற்கு உதவுவதுதான் மனித தர்மம் ஆதித், என்றவர் மொபைலை வைத்துவிட்டார்.

அப்பொழுது அழகுநிலாவின் மொபைலுக்கு சுமதியின் அழைப்பு வந்தது அது ரமேசிடம் இருந்ததால் ரமேஸ் அதை அட்டன் செய்தவன் அந்த பக்கமிருந்து சுமதி நிச்சயவிழா ஆரம்பிக்கப்போகுது ஏன இன்னும் வரல என்று கேட்டதும் ரமேஷ், நிச்சயதார்த்தப் பெண்ணான அவளை சங்கடப்படுத்தவேண்டாம் என்பதற்காக,

சிஸ்டர் நானும் அழகுநிலாவும் பைக்கில் வந்தபோது ஒரு சின்ன ஆக்சிடென்ட் தலையில் லேசாக அழகுநிலவிற்கு அடிபட்டுவிட்டது. நாங்க ஹாஸ்பிடலில் இருக்கிறோம் என்று கூறியதும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.