(Reading time: 13 - 25 minutes)

“தோகை இளமையில் ஆடி வருகுது வானில் மழை வருதோ “

என்ற பாடல் பாட கலேரி அமைதியாக இருந்தது.. மலர் அந்த ஒரு பாடல் மட்டும் தான் பாட வந்து இருந்தாள். அதனால் அவள் கலேரிக்கு சென்று விட, செழியனின் கண்கள் அவளை தேடிக் கண்டது.

“விழிகளிலிலே காதல் விழா .. நடத்துகிறாள் சாகுந்தலா

அன்னமே இவளது நடை அழகினில் சங்கீதம் உண்டாகும்”

இந்த வரிகள் பாடும் போது அவன் விழிகள் தன் மனகவர்ந்தவளின் முகமே பார்த்தது.. பொதுவாக அவன் ஆடியன்ஸ் பார்த்து பாடுவதாக இருந்தாலும், மலருக்கு மட்டும் புரிந்தது அவன் தன்னை எண்ணி பாடுகிறான்.. என்று..

இதனை நேரம் இருந்த ஒருவித  தயக்கம், சங்கடம் எல்லாம் அவனின் பார்வையிலும், பாடலிலும் மாயமாய் போனது.

இந்த பாடல் முடிந்த பின் மீண்டும் மாணவர்கள் வந்து பாட ஆரம்பித்தனர். அதற்கு பின் கடைசியாக முஸ்தபா ..முஸ்தபா .. பாடல் பாடி இதற்கு அணைத்து மாணவர்களும் எழுந்து பாட ஆரம்பித்து இருந்தனர்.

ன்று இரவு வீட்டிற்கு சென்ற பின் செழியன் மலருக்கு போன் செய்தான்..

“சாரி மலர்.. எனக்கு தெரியாது ..இந்த பாட்டு உன்னோடு சேர்ந்து பாட போறேன்னு.. தெரிஞ்சி இருந்தா வேற ஏற்பாடு பண்ணிருப்பேன்..”

“இட்ஸ் ஓகே.. உங்களுக்கு மட்டும் இல்லை.. யாருக்குமே தெரியாது... உண்மை என்னன்னா.. இன்னிக்கு இந்த பாட்டு பாட வேண்டிய பொண்ணு வர முடியல.. மற்ற பொண்ணுங்க எல்லாம் ப்ராக்டிஸ் இல்லாம பாட கஷ்டம்ன்னுட்டு பயந்தாங்க... பசங்க எங்கிட்ட வந்து என்ன செய்யறதுன்னு கேட்டப்ப, சரி நான் பாடுறேன்நு சொன்னேன்.. ஆனால் எனக்கும் தெரியாது .. மேல் வாய்ஸ் நீங்க பாடரீங்கன்னு... தெரிஞ்சு இருந்தா அட்லீஸ்ட் இத அவாய்ட் பண்ணிருப்பேன்..”

“ஹேய்.. அது எல்லாம் ஒன்னும் இல்லை.. உன்கூட பாடினது எனக்கு உண்மையில் செம ஹப்பி.. ஆனால் வீண் வதந்தி எதுவும் வரக்கூடாது ன்னு தான் பயம்.. பட் பசங்க சொல்லி தான் அப்படின்னா அவங்களே அதா பார்த்துப்பாங்க.. சோ நோ வொர்ரீஸ்”

என்று கூறி அவளை சமாதானபடுத்தினான்..

ஹாய் பிரெண்ட்ஸ்... கதை இழுக்கிற மாதிரி பீல் ஆகுதா?.. இன்னும் ஓர் அப்டேட் இந்த காலேஜ் பங்க்ஷன் வச்சி இருக்கும்..  அதுக்கு அப்புறம் கதைக்குள்ளே போயிறலாம்.. செழியன் மலர் சேரனும்னா நல்ல ஸ்ட்ராங் பாண்டிங் வேணும்.. அவங்க அதிகமா வெளியில் மீட் பண்ண வைக்காததால் காலேஜ் சீன்ஸ் தான் நிறைய கொண்டு வர முடிஞ்சுது.. அடுத்த அப்டேட்க்கு பிறகு நீங்க எதிர்பார்க்கிற சீன்ஸ் எல்லாம் வரும்நு நம்பறேன்.. சோ .. கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்..

வழக்கம் போல் உங்க கமெண்ட்ஸ் பார்க்க வெயிட்டிங் & தேங்க்ஸ்..“

தொடரும்!

Episode # 28

Episode # 30

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.