(Reading time: 13 - 25 minutes)

“சீ.. வர வர ரொம்ப லவ் டயலாக் எல்லாம் சொல்றீங்க.. இப்போ நான் வைக்குறேன்..” என்று வைக்க போக

“ஹேய்.. நாளைக்கு ஐயாவோட திறமைய பாரு ..” என

“பார்க்கலாம் . பார்க்கலாம் “

தற்கு அடுத்த நாள் லைட் மியூசிக் ... காலேஜ் ஆர்கெஸ்ட்ராவினர் நடத்தினர். செழியன் காலேஜ் படிப்பதற்காக சேர்ந்த முதல் வருஷத்துலேர்ந்து இப்போ ப்ரோபாசர் ஆன இன்று வரை ஆர்கெஸ்ட்ராவில் இருப்பதால், இது முழுக்க முழுக்க அவன் பொறுப்பு தான்.. ஆனால் மற்ற வேலைகள் நிறைய இருந்ததால் செழியனால் ரெகுலராக ப்ராக்டிஸ் வர முடியவில்லை.. அவன் வரும் நேரம் அவன் பாடல்கள் மட்டும் பாடிவிட்டு சென்று விடுவான்.

செழியன் ஆர்கெஸ்ட்ராவின் மற்ற வேலைகள் எல்லாம் செந்திலிடம் ஒப்படைத்து இருந்தான்..

கச்சேரி ஆரம்பிக்கவும் முதலில் ஒரு சாமி பாடல் பாடிவிட்டு , பிறகு

அழகே அழகு

நிற்பதுவே நடப்பதுவே

போன்ற பாடல்கள் எல்லாம் மாணவர்களை பாட வைத்தனர். பாடல் வரிசை எல்லாம் செந்திலின் பொறுப்பு என்பதால் செழியன் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தான்.

மூன்று பாடல்களுக்கு ஒரு பாடல் செழியன் பாட , முதலில்

“இது ஒரு பொன்மாலை பொழுது “ பாடினான்..

அதற்கு பின் மீண்டும் மாணவர்கள் பாட , அவர்கள் அநேகமாக குத்து பாடல்கள் தான் தேர்ந்து எடுத்து இருந்தனர்.. அப்போதானே அவர்கள் கலேரி களை கட்டும் என்று..

அடுத்த பாடல் செழியன் பாட வரும்போது செந்தில்

“மச்சான்.. நீ காலேஜ்லே இருக்க.. நியாபகம் வச்சிக்கோ.. கொஞ்சம் கண்ட்ரோலாவே இரு..” என்று பூடகமாகவே பேசி விட்டு செல்ல,

“இப்போ இவன் ஏன் எனக்கு டென்ஷன் ஏத்துறான் என்று எண்ணியபடி செழியன் மேடைக்கு போக

“பிரெண்ட்ஸ்.. அடுத்து வர போவது ஒரு டூயட் பாடல்.. எஸ்.பி.பி.. அவர்களின் பாடல் உங்களுக்கே தெரியும் .. நம்ம காலேஜ் பாடும் நிலா உங்கள் செழியன் சார் தான் ஆண் குரல் பாட போறார்.. இவருக்கு ஜோடியாக பாட போகும் பெண் குரல் ..நம்ம மலர் விழி மேடம் தான்.. “ என்று அறிவிப்பு கொடுக்க

ஒருநொடி செழியன் திகைத்து நின்று விட்டான்.. கீழே உள்ளவர்களுக்கு முதுகு காட்டியபடி ஏதோ பார்ப்பது போல் திரும்பியவன், தன்னை ஆழ மூச்செடுத்து அமைதி படுத்தி திரும்பினான்.

அவன் செந்திலை பார்த்த பார்வையில் பலத்த கண்டனம் இருந்தது. அப்போதுதான் மேடை ஏறிய மலரும் சற்று திகைத்துத்தான் போனாள். இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நேராக ஆடியன்ஸ் பார்த்தபடி பாட ஆரம்பித்தனர்..

       “மலரே மௌனமா.. மௌனமே வேதமா “ என்று செழியன் பாட 

       “மலர்கள் பேசுமா.. பேசினால் ஓயுமா “ என்று மலர் பாடினாள்.

உண்மையில் செழியன் இந்த பாடலை மிகவும் விரும்பி தான் தேர்ந்தெடுத்து இருந்தான்.. ஆனால் இப்படி ஒரு சூழல் வரும் என்று எண்ணவில்லை..

இவர்கள் காலேஜில் சாதாரணமாக இதுவரை இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் எதவும் தோன்றவில்லை.. இல்லாவிட்டால் மிகுந்த சங்கடம் ஆகி இருக்கும்.

இருவரும் சரியாக பாடி முடித்தபின் ஒரு நொடி கூட மேடையில் நிற்காமல் நகர்ந்து சென்று விட்டனர்.

அடுத்த பாடலை மாணவர்கள் பாட வைத்து விட்டு செந்தில் வர, அவன் முதுகில் ஓங்கி அறைந்தான்.

“ஏண்டா.  அறிவு இருக்கா..? நீயே எல்லாருக்கும் விலாவரியா சொல்லிருவா போலிருக்கே..? அதுவும் பாட்டு வேற செலக்ட் பண்ணி கொடுத்து இருக்க பாரு பக்கி..? நாளைக்கு எப்படிடா ஸ்டுடென்ட்ஸ நாங்க பேஸ் பண்றது ?”

“மச்சி.. இதுக்கு நான் காரணம் இல்லைடா.. இது எல்லாம் ஸ்டுடென்ட்ஸ் ஏற்பாடுதான்.. எனக்கே இன்னைக்கு தான் தெரியும்..  பசங்க கிட்டே கேட்டா

“இதில் என்ன சார் இருக்கு.. ? நாங்க எல்லாம் டூயட் பாடலையா ? அது மாதிரி தானே இதுவும் “

அப்படின்னுடாங்க.. அதுக்கு மேலே நான் வேண்டாம்நு சொன்னா காரணம் கேப்பானுங்க.. அத சொல்றதும்.. எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைன்னும் சொல்றதும் ஒண்ணுதான்.. அதான் அப்படியே விட்டுட்டேன்..”

“அட போடா.. நான் மட்டும் நேத்து மாதிரி ஸ்டன் ஆகி இருந்தேன்னு வை..ரொம்ப சங்கடம் ஆகி இருக்கும்.. “

“அதுக்குதான் மச்சி.. முதலில் உன்கிட்ட சொன்னேன்.. “ என்று பேசிக் கொண்டு இருக்கும்போது அடுத்த பாடல் பாட செழியனுக்கு அழைப்பு வர

இந்த முறை சோலோ சாங் தான் .. இது அவனின் தேர்வுதான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.