(Reading time: 13 - 25 minutes)

“எல்லாம் நேரம்டா... இவ்ளோ பெரிய ஈவென்ட் பொறுப்பு எத்துருக்கேன்.. என்னை போய் இப்படி சொல்லிட்டியே..?”

“அடேய்.. எப்பேர்பட்ட கடமை கண்ணாயிரமும் காதல்நு வந்துட்டா இப்பேற்பட்ட பட்டம் வாங்கித்தான் ஆகணும்.. போ ..போ.. “

“இப்போ உன் நேரம்.. நீ நடத்து...” என்றபடி கிளம்பினான்.

ன்றைக்கு வீட்டிற்கு சென்ற மலர் ,

“அம்மா... “ என்று அழைத்தபடி வந்தாள். அவள் குரலில் உற்சாகமும், சந்தோஷமும் நிறைந்து இருந்தது. அதை உணர்ந்தவராக அவள் அம்மாவும், ஆச்சியும் அவளை நோக்கி வர

“என்ன கண்ணு .. ரொம்ப சந்தோஷமா இருக்க... “

“ஆச்சி. இன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சு காலேஜ்லே நான் டான்ஸ் ஆடினேனே..”

“அடிக் கழுதை.. சொல்லவே இல்லை.. சொல்லிருந்தா நாங்களும் வந்திருப்போம்லே..”

அவளின் ஆச்சியோ “ஏங்கண்ணு .. நீ ஆடினா அந்த சரஸ்வதி தேவியே ஆடின மாதிரி இருக்குமே.. அங்கன எல்லோரும் என்ன சொன்னாக..?”

“ஆச்சி.. இது எல்லாம் உனக்கே ஓவரா தெரியல.. “ என்று இடுப்பில் கைவைத்து முறைக்க.

“அட.. எனக்கு என் பேத்திதான் உசத்தி.. “

“போ.. உன்னை மாத்த முடியாது..” என்றுவிட்டு தன் அன்னையிடம் திரும்பியவள்.

“நான் காலேஜ்லே யார்கிட்டேயும் சொல்லலமா.. பசங்களுக்கு சொல்லி குடுத்துட்டு இருந்தப்ப.. பசங்க எல்லாம்.. நீங்க ரொம்ப நல்லா டான்ஸ் ஆடறீங்க.. நீங்களும் எங்க கூட ஆடுரீங்களான்னு கேட்டாங்க.. முதலில் யோசிச்சேன்.. அப்புறம் நானும் சரின்னுட்டேன்.. “

“இவ்ளோ நடந்துருக்கு.. நீ வீட்லே ஒண்ணுமே சொல்லலியே..”

“இல்லைமா.. நேத்து வரைக்கும் ரொம்ப சந்தேகமா இருந்துச்சு.. நேத்திக்குதான் தெரிஞ்சுது வேறே ரெண்டு லெக்சரரும் ஆடுறாங்கன்னு.. இருந்தாலும் கடைசி வரைக்கும் ரெட்டை மனசாவே இருந்துச்சு..இன்னிக்கு டான்ஸ் ப்ரோக்ராம் ஆரம்பிச்சதும் அவங்க உற்சாகம் எல்லாம் பார்த்ததும்.. சரின்னு நானும் ஆடிட்டேன்..”

அவள் அம்மா “ரொம்ப சந்தோஷம்டா.. “ என,

ஆச்சியோ அவள் முகத்தை திருஷ்டி எடுத்து “இந்தா வள்ளி.. புள்ளைக்கு சூடம் சுத்திபோடு.. “ என்று மருமகளை ஏவினார்.

வீட்டில் அவள் அப்பா வரவும், அவரிடமும் விவரம் கூற, அவரோ சந்தோஷத்தில் மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

அன்று இரவு செழியன் மலருக்கு போன் செய்ய, எடுத்தவள்

“ஹாய்.. இளா... உங்க போன் ஈவ்னிங்லேர்ந்து எதிர்பார்த்துட்டு இருக்கேன்..”

“எதுக்காம்..?”

“ஹ்ம்ம்.. உங்களுக்கு தெரியாதா?”

“நீ சொன்னாதானே தெரியும்?”

“ம்ச்.. நான் டான்ஸ் ஆடினத பற்றி ஒன்னும் சொல்லலயே?”

“நீ டான்ஸ் ஆடினியா? எப்போ?”

“ம்.. இந்த விளையாட்டுதானே வேண்டாம்.. நான் ஆடும்போது நாலுதடவை உங்களை பார்த்தேன்.. நீங்க என்னையவே தான் பார்த்துட்டு இருந்தீங்க..?”

“அது நாலு தடவை இல்லை கண்ணம்மா.. ஆறு தடவை..

உன் இதழ் கொண்டு வாய் மூடவா  .. என் கண்ணா

இந்த லைன் ஆடுறப்ப ரெண்டு தடவை பார்த்த.. அத நீ சொல்லலையே..“

இதை கேட்டதும் மலருக்கு வெட்கமாக இருந்தது.. பின் தன்னை சமாளித்தவளாக

“நான் .. அந்த கணக்கு எல்லாம் கேட்கலை.. டான்ஸ் நல்லா இருந்துதா?”

“சூப்பரா இருந்துது.. எனக்கு டான்ஸ் விட நீ ஆடினது செம சர்ப்ரைஸ் ... ஏன் எங்கிட்ட சொல்லல “

தன் வீட்டினருக்கு சொன்ன காரணத்தையே சொன்னாள்..

“ஹ்ம்ம்.. இருந்தாலும் இப்படி தீடிர் ஷாக் எல்லாம் கொடுக்கதம்மா.. இந்த சின்ன இதயம் தாங்காது..”

“ஏன்.. உங்களுக்கு இது பிடிக்காதா?”

“யாரு சொன்னா? நீ பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்ட.. நான் உன்ன பார்த்துட்டே இருந்ததுலே .. செந்திலே கவனிக்கலே.. அவன் என்னை ஒட்டி தள்ளிட்டான்.. அதுக்குதான் சொல்றேன்.. இந்த மாதிரி எல்லாம் ஷாக் கொடுத்து மாமாவ பல்பு வாங்க வைக்க கூடாது .. எத பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும் .. ஓகேவா..?”

“சரி.. சரி.. அடுத்த முறை உங்ககிட்டே சொல்லிட்டே உங்களுக்கு பல்பு வாங்கி கொடுக்கிறேன்.. “ என

“ஒய்... நீயும் ஒட்டுரியா.. ?”

“உங்ககிட்ட டான்ஸ் முடிஞ்சு வந்ததுமே கேட்கனும்னு நினைச்சேன்.. நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரியாமல் அங்க வச்சி பேச வேண்டாம்னு விட்டுட்டேன்”

“நல்லவேளை.. நீ அங்க வரல.. நான் இருந்த கண்டிஷன்க்கு அங்க நீ என் பக்கத்தில் வந்து இருந்தன்னா எதாவது எடக்கு மடக்கா பண்ணிருப்பேன்.. அப்புறம் காலேஜ்லே மானம் போயிருக்கும்.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.