அவளது விரிந்த விழிக்குள்ளே விழுந்தது கண்கள் முழுவதும் காதலுடன் அந்த முத்தத்தில் மூழ்கியிருந்தவன் மட்டுமே...
அவள் மூச்சுக்கு தவித்தபொழுது அவளது உதடுகளை விட்டவன் அவளது நெற்றியில் இதழ்பதித்து அவளை அணைத்தவாரே கண் மூடினான்.
அவனது இந்த அனைத்து செயல்களிலும் தடுமாறி போனவள் அவனை பார்த்தவாறே அவனது கையணைப்பில் இருக்க ,அதை உணர்ந்துக் கொண்டவன் போல் கவி தூங்குடா நேத்து நைட் தான் நான் ரொம்ப நாளுக்கு அப்பறம் நல்லா தூங்குனேன்,இப்ப அதுமாதிரியே தூங்கணம்னு நினைக்கிரேன்டா நீயும் தூங்கு....
என்று அவன் கூற அவனது அணைப்பு தந்த இதத்தில் அவளும் தூங்க ஆரம்பித்தாள்.இவங்கள distrub பண்ணாம நாமா மத்த ஜோடிய போய் பார்த்துட்டு வருவோம்...
முதல நாமா விஷ்வா-யாமினி
"விஷ்வா விடு அவ என்கிட்ட இப்ப பேசுறா பாரு...,அதுமாதிரி உன்கிட்டையும் பேசுவா.."என்று யாமினி சொல்ல
"இல்ல யாமி அவ என்கிட்ட பேசமாட்டா அவ அம்மாவப் பத்தி வேற பேசிட்டேன்.இப்ப பாரு உன்கிட்ட கூட நல்லா பேச மாடுற
...ப்ச்.."என்று அவன் வேதனை பட அவனின் பெண் அவளோ "அப்படி எல்லாம் இல்ல விஷ்வா,அவ உன் மேலேயும் காவி மேலையும் ரொம்ப பாசமா இருக்கா அதான் கொஞ்சம் அதிகமா கோபம் வந்திருச்சு..,நான் கிளம்பிரேன் நீ வா.."என்று அவனது மூடை மாற்ற அவளது முயற்சி புரிந்து அவனும் அவளிடம் தங்களின் எதிர்காலம் குறித்து பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தான்...
அறை முழுவதும் இருள் பரவியிருக்க எழுந்த கவியின் கண்களில் அஸ்வின் தென்படவில்லை.அவன் அருகில் இல்லை என்றாலும் சில மணி நேரத்திற்கு முன் நடந்தவை அனைத்தும் நினைவிற்கு வந்து அவளை உற்சாகம் கொள்ள வைத்தது.அதன் பிறகு இரண்டு நாட்கள் வேகமாக செல்ல அவர்கள் நிச்சயத்திற்கு ஆடை எடுக்கும் நாளும் வந்தது இதற்குள் மித்ரா அமர் குடும்பமும் கோவை வந்து சேர்ந்தது.
மித்ராவின் பெற்றோரின் வருகை கவிக்கு மேலும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது.
மித்ராவின் அப்பாவை கவி ஒவ்வொரு முறை அப்பா என்று அழைக்கும் பொழுதும் பெரிதாக ஏக்கமாக பார்க்க வேண்டிய முறை மளர்கண்ணன் உடையது ஆகி போனது.
தனது மாமாவின் ஏக்கம் புரிந்தபோதும் அஸ்ஹவினால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவளது முகத்தில் சந்தோசத்தை பார்த்த அவனால் அதை கெடுக்க முடியவில்லை...
அந்த வீட்டில் அவள் இவ்வளவு சந்தோசமாக இருந்தது கிடையாது
அதை பார்த்தவனால் அதை கெடுக்க மனது வரவில்லை.
அஸ்வின்,கவியை இன்னும் நெருங்க வைக்க நினைத்த பெரியவர்கள் அங்கு நடக்க போகும் நிச்சய ஏற்பாட்டை அவர்களை கவனிக்க கூறி விட்டார்கள்.
அதனால் அவர்கள் இருவரும் மற்றவர்களது துணையோடு செய்ய ஒத்துக் கொண்டனர்.
நிச்சயத்திற்கு உடை எடுக்க போவதற்கு அனைவரும் கிளம்பினர்.
பட்டுப்புடவை எடுக்க பெண்கள் செல்ல மாப்பிள்ளைகளுக்கு உடை எடுக்கும் இடத்திற்கு ஆண்கள் சென்றனர்.
என்னதான் தனித்தனியாக சென்றாலும் கடைசியில் தங்களது வாழ்க்கை துணை தேர்ந்தெடுத்ததை தான் எடுத்தனர்.
இதுக்கு முதலயே ஜோடியா போயிருந்தா சேல்ஸ் மேனாவது சந்தோசமா இருந்துருப்பார் இல்ல...
யாருப்பா அத யோசிக்கிறா...நாமா யோசிச்சாதான் ....
அப்ப கவி மட்டும் சும்மாவா அவளுக்கும் அவ ஆளுதான் எடுத்துக் கொடுத்தான்.
மற்ற அனைவரும் ஜோடி ஜோடியாக எடுக்க போனபின்பும் கவி மூன்று புடவைகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு எதை எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அஸ்வினை எதிர் பார்த்தவள் அவன் எங்கே என்று தேடிப் பார்க்க அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவள் தன்னை திரும்பி பார்ப்பாளா என்று ஏங்கிக் கொண்டே அவன் அவளை பார்த்துக் கொண்டே இருக்க அவள் அவனை திரும்பி பார்த்த அந்த நிமிடம் அவன் அவளை நோக்கி சென்றான்.
அந்த மூன்று புடவைகளையும் அவள் மீது வைத்து பார்த்தவன் க்ரீன் வித் ப்ளூவில் இருந்த புடவையை அவளுக்கு தேர்ந்தெடுத்தான்.அந்த புடவையால் தனது வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம் தெரியாமலே.....

தொடரும்
{kunena_discuss:1099}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.