அவரின் கவலையை போக்கும் விதமாக உதட்டில் உறைந்த சிரிப்புடன் அப்படி இந்த ராஜா என்னை துரத்தி பிடிக்காவிட்டால் இன்று நான் ஒத்தை மரமாக தனித்திருந்திருப்பேன் என்று சொன்னதும் அவள் சொன்னதை ஏற்கும் வகையில் தலையாட்டியபடி ம்....அது என்னவோ உண்மைதான் என்றார்.
அழகுநிலாவிற்கு இதென்னடா அவங்க மகனுக்கு தம்பதி சகிதமா நின்று ஆசி கொடுக்கச் சொன்னதுக்குப் போய் இவங்க எல்லோரும் ஓவரா ரியாக்ட் கொடுக்கறாங்களே! என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் அவளை பார்த்து திரும்பிய ஆதித்தின் பார்வையில் இதுவரை இல்லாத ஏதோ அவளுக்கான ஒரு சேதி இருப்பதாக தோன்றியது அழகுநிலாவிர்க்கு. அவளை பார்த்துக்கொண்டே மாடிக்கு உடை மற்றப்போன ஆதித்தையே பார்த்து நின்ற அழகுநிலா
அவள் மனதிற்குள்ளேயே என்ன? இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவளின் தோளில் உணர்ந்த ஜானகியின் ஸ்பரிசத்தில் அது அடிபட்ட இடம் ஆதலால் ஸ்...ஆ என்று வழியில் சத்தம் எழுப்பியபடி திரும்பிபார்த்தாள் அழகுநிலா
உடனே என்னமா அங்கேயும் அடிபட்டுள்ளதா? நான் தெரியாமல் அங்கேயே தட்டி கூப்பிடுவிட்டோனோ! என்று பதறியபடி கேட்டார் ஜானகி
சோல்டரில் லேசாக அடிபட்டிருக்கு ஆண்டி, அதனால் தான் நீங்கள் தட்டியதும் லைட்டா வலிச்சுடுச்சு என்றாள்.
அழகுநிலா நாம இன்னைக்கு வீட்டிலேயே சாமிகும்பிட்டுக் கொள்வோமா! காயத்துடன் உன்னை அலைய வைப்பதா? என்று தயக்கத்துடன் கேட்டார் ஜானகி
நேற்று இரவு அவளை குளித்து மாற்று உடையை அவளுக்கு கொடுத்த ஜானகி அவளுக்கு இரவு உணவு அவள் தங்கியிருந்த அறைக்கே அழகியின் சோர்வைப் பார்த்த ஜானகி எடுத்து வந்துவிட்டாள். குளித்துவந்ததும் அவளுக்கு கொடுத்த உணவை சாப்பிட்டுக்கொண்டே, எப்படி ஆண்டி நீங்க சரியாக நான் ஆக்சிடென்ட் ஆன நேரம் எனக்கு போன் பண்ணுனீங்க என்று அழகுநிலா கேட்டாள்.
அதற்கு, நான் தான் ஏற்க்கனவே உன்னிடம் ஆதித்தின் பிறந்தநாளின் முதல்நாள் உன்னை போனில் அழைப்பேன் என்று கூறியிருந்தேனே! நாளை ஆதித்தின் பிறந்தநாள். எனவே உன்னை அதற்கு அழைபதற்காக போன் செய்தேன் என்றாள்
அவள் கூறியதும் ஆண்டி அப்போ நாளை பார்டி அரேஞ் பண்ணுவதில் நீங்க பிசியாக இருக்கும்போது நான்வேறு உங்களுக்கு தொந்தரவாக இப்போ இங்குவந்து விட்டேனோ! என்று தவறு செய்த பிள்ளைபோல் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டதும் ஜானகி அச்சச்சோ.... அப்படியெல்லாம் நீ நினைக்காதே நிலா, நாங்க எப்பொழுதும் அவன் பிறந்தநாள் அன்று காலையில் கோவிலுக்குப் போய்விட்டு வந்து வீட்டில் வடை பாயாசத்தோடு முடித்துகொள்வோம். வெளியாட்களை எல்லாம் அழைத்து கொண்டாடும் வழக்கம் இல்லை .என்ன.... நீ இப்படி அடிபட்டுவந்திருப்பதால் நாளை கோவிலுக்கு மட்டும் போகமுடியாது. அதனாலென்ன வீட்டில் இருந்தபடி சாமிகூம்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறினாள்.
அவள் கூறியதுமே அழகுநிலா தன்னால் அவர்கள் கோவிலுக்குப் போவது தடைபடக்கூடாது என்று இரவே முடிவெடுத்துவிட்டாள்.
எனவே காலையில் ஆறுமணிக்கே முழித்தவள் அவளது அடிபட்ட இடம் வலித்தாலும் அதை வெளியில் காண்பிக்காதவாறு குளித்து சிரித்தமுகத்துடன் சமையல் அறைகுச் சென்றாள். அங்கு காலையில் தனது மகனுக்கு பிடித்த உணவு மற்றும் கேசரி வடையை தயாரித்துக்கொண்டு இருந்த ஜானகிடம் வந்தவள் அவளுக்கு சமையலில் உதவிபுரிய ஆரம்பித்தாள்.
ஜானகி, அச்சோ! அடிபட்டு வந்தபிள்ளை ரெஸ்ட் எடுக்காம எதுக்கு இங்கவந்து வேலை பார்க்கிற. நீ போய் படு. நான் உனக்கு குடிக்க பால் எடுத்துக்கொண்டு வருகிறேன், என்று கூறினாள் ஜானகி
ஆண்டி எனக்கு வலியெல்லாம் இல்லை. அதுதான் நேற்றே தையல் போட்டு மருந்து மாத்திரை கொடுத்து என்னை ஒரே நாளில் எழுந்து ஓடுறமாதிரி நீங்களும் உங்க மகனும் தேத்திடீங்களே என்றவள்,
உங்கள் மகனுக்கு இன்று பிறந்த நாள் அதனால் தடபுடலா விருந்தே ஏற்பாடு செய்றீங்க போல நானும் சேர்ந்து உங்களுக்கு சமையில் ஹெல்ப் செய்தால் எல்லோரும் வேகமாக கிளம்பி காலையில் கோவிலுக்கு போய், உங்க புள்ளைக்கு நிறைந்த ஆயுளை கொடுக்கச்சொல்லி கடவுளை கும்பிட்டுவிட்டு அவர் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு ஒரு ஒன்பதுமணிக்கு வீட்டில்வந்து காலை சாப்பாட்டை முடித்துவிடலாம் என்றாள்.
அவளை தலைமுதல் கால்வரை பார்வையை செலுத்தி ஆராய்ந்த ஜானகியை பார்த்தவள் அச்சோ ஆண்டி “ஐ ஆம் ஓகே” என்று தன்னை முன்னும் பின்னும் திருப்பி அவளிடம் காண்பித்து கோவிலுக்கு கிளம்ப அவளை ஒத்துக்கொள்ள வைத்ததாள் அழகுநிலா.
ஆண்டி எத்தனைதடவை சொல்லிட்டேன் எனக்கு காரில்கூட போக முடியாதாளவு ஒன்றும் அடிபடவில்லை என்றாள் புன்னகையுடன்.