(Reading time: 23 - 46 minutes)

கோவில் சென்று வீடுவந்த அழகுநிலாவிற்கு எதோ தவறு செய்வதுபோல் மனம் படபடத்தது ஆதித்தின் வீட்டில் தான் தங்கியிருக்கும் விபரம் தன் வீட்டில் தெரிந்தால் நினைக்கவே பயமாக இருந்தது. மேலும் யார் அவன் தன்னை அப்படி முறைத்துப் பார்த்தனே! எங்கோ அவனை பார்த்தமாதிரிவேறு தோன்றுகிறதே! என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் அவளின் மொபைல் தன்னை எடேன் என ஒலிஎழுப்பியது .

அதனை எடுத்துப் பார்த்த அழகுநிலா, தனது வீட்டில் இருந்து தான் போன் என்றதும் படபடக்கும் மனதோடு எடுத்து ஹலோ.. என்றதும் அவளின் அம்மா ராசாத்தி ஆத்தி!... அழகி! நல்லா இருக்கியா புள்ள, என்ற வாஞ்சையான குரல் கேட்டது அவளின் அன்பொழுகும் குரலில் தனது குற்ற உணர்வு அதிகரித்தது போல் இருந்தது. நான் நல்ல இருக்கேன்மா! வீட்டில எல்லோரும் நல்ல இருக்கிறீங்களா? என்று கேட்டாள். ரொம்ப சந்தோசமா இருக்கோம் டீ அழகி! உனக்கு கல்யாணம் கூடிவந்துருச்சு. நம்ம மேலத்தெரு மாணிக்கம் தம்பி மவனுக்கு உன்னை கேட்டு வந்தாங்க ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சு பொருத்தம் இருக்குனு சொல்லிடாங்க. வரும் புதன்கிழமை உன்னை பொண்ணுபார்க்க வீட்டுக்கு வருகிறார்கள் நீ என்ன பண்ற இன்னைக்கு வெள்ளிகிழமைதானே! நாளைக்கு சாயந்தரம் உன் அண்ணனை அனுப்புறேன் ஒருவாரம் லீவ போட்டுட்டு கிளம்பி வா... என்று கூறினாள்.

அவள் பேசிக்கொண்டிருக்கும் பொது அவளின் அண்ணன் குமரேசன், என்னிடம் கொடுமா நான் பேசறேன் தங்கச்சிகிட்ட என்று போனை வாங்கினான் குமரேசன். தன அண்ணனின் கைக்கு போன் சென்றதை அறிந்ததும், என்னன்னே ஒருவருஷம் நான் வேலை பார்த்தபிறகுதானே கல்யாணம் கட்டிக்கிடுவேன் என்று சொல்லியிருந்தேனே... தீடீர்னு இப்படி சொன்னால் எப்படினே என்றாள்.

அவள் கூறுவதை கேட்ட குமரேசன், அழகி ஒனக்கு என்ன வேலை பார்க்கனும் அவ்வளவுதானே. நான் மாப்பிளையிடம் நேத்தே போனில் பேசிட்டேன் அவரும் சாப்ட்வேர் இஞ்சினியராக சென்னையில்த்தான் வேலை பார்க்கிறார். நீ வேலைக்கு போவதற்கு முழு சம்மதத்தை தெரிவித்து விட்டார். நீகூட மாப்பிளையை பார்த்திருக்கலாம் அழகி. நம்ம ஊரு பொங்கலுக்கு மேலத்தெரு மாணிக்கம் மாமா வீட்டிற்கு விருந்தாளியா வாட்ட சாட்டமா ஒரு இஞ்சினேயர் பையன் ஒருத்தர் வருவாருல்ல, அவர் தான் மாப்பிள்ளை. உன்னை திருவிழாவில் பார்த்துட்டு பிடிச்சிருக்குனு கேட்டு வந்தாங்க. நல்ல சம்பந்தம் நாம அறிஞ்ச இடம். அதுதான் பேசிமுடிச்சுட்டோம் எனக் கூறினான். .

தன அண்ணன் கூரியவுடன்தான் இன்று கோவிலில் தன்னை பார்த்து முறைத்துப்பார்த்தது அவன் தான். ஆமா! அவன்தான் அந்த மாப்பிள்ளை. நாம திருவிழாவில் கலந்துகொள்ளும் போதெல்லாம் அங்கங்கே நின்று தன்னை அவன் பார்த்திருப்பதை தான் கண்டும் காணாததுமாக போன நினைவு அவளுக்கு வந்தது. அவளின் இதயத்தயுடிப்பு நின்றுவிடுவதைப்போல் ஒருநிமிடம் அதிர்ச்சியில் பேச வார்த்தை கூட வராமல் அப்படியே இருந்தாள்.

அழகி... அழகி... லைன்ல இருக்கியா நீ? என்று திரும்பத்திரும்ப குமரேசன் கூப்பிட்ட பிறகே கடினப்பட்டு முயன்று ம்ம்ம்.. லைனில்தான் இருக்கேன் என்றாள் .

குமரேசன் நினைத்துவிட்டான், கல்யாணப்பேச்சு எடுத்ததும் மாப்பிள்ளை இவர்தான் என்று தெரிந்ததும் தங்கைக்கு கூச்சத்தில்தான் சிறிது நேரம் பேச்சு வரவில்லைபோல என் நினைத்தவன், சரிடா! அப்போ அண்ணன் நாளைக்கு சாயந்தரம் உன்னை கூப்பிட வந்திடட்டுமா? என்று கேட்டான்

உடனே அண்ணே! ஒருவாரம் உடனே லீவ் கொடுக்கச் சொன்னால் மாட்டாங்க நீ செவ்வாய்கிழமை சாயந்தரம் வா நான் உன்கூட வர கிளம்பி இருப்பேன் என்று கூறியவள், அண்ணே எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்குது சாயங்காலம் பேசுறேன் என்று சொன்னவள் தொடர்பைத் துண்டித்து தலையை பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் .

----தொடரும்----

Episode 10

Episode 12

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.