(Reading time: 23 - 46 minutes)

அவன் அழகுநிலாவைத்தான் கேட்கிறான் என்று தெரிந்துகொண்ட அவன் தம்பி, அண்ணே! அது இந்த ஊரு பெரியவீட்டு பொண்ணு. அது காலேஜில் படிக்குது இப்படி நீங்க முறைச்சு பாக்குறத அவங்க அண்ணன்காரன் பார்த்தால் நீங்க இஞ்சினியர் என்றுகூட பார்க்கமாட்டான், உங்களை பொலிபோட்டுடுவான். இது டவுன் இல்லை கொஞ்சம் அடக்கிவாசிங்க என்று கிண்டலுடன் கூறினான்.

ஆனால் தொடர்ந்து இந்த நான்குவருடமும் தனது ஊர் பொங்கலுக்கு வரும் தன அண்ணன் முரளிதரனின் கண் அழகுநிலாவைய் தேடுவதை அவன் அறிந்து கொண்டான்.

எனவே அழகுநிலாவின் வீட்டில் அவளுக்கு மாப்பிளை தேடுகின்ற விபரம் அறிந்துகொண்ட முரளிதரனின் தம்பி, தன அண்ணனும் படித்து சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினேயராகத்தானே இருக்கிறான் அவனுக்குத்தான் அழகுநிலாவின் மீது நோக்கம் இருகிறதே எனவே அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் என்ற விபரத்தை அவனின் காதில் போட்டுவைபோம். அவன் சமத்து, முடிந்தால் பெரியவர்கள் மூலம் பேசி திருமணம் செய்துகொள்ளட்டும் என்று அவனுக்கு போனில் தெரிவித்தான்.

ஏற்கனவே முரளிதரன் இந்தவருடம் அவள் படிப்பு முடித்திருப்பாள், எனவே பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது தன பெரியப்பாவிடம் பேசி அவர்கள் வீட்டில் தனக்கு அவளை பெண் கேட்க்கச்சொல்லலாம் என்று நினைத்திருந்தான். இந்நிலையில் அவன் தம்பி அவனுக்கு போன் செய்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விபரம் கூறியதைக் கேட்டதும் தாமத்திக்காமல் உடனே செயலில் இறங்கிவிட்டான்.

தனது அம்மா அப்பாவிடம் சொல்லி உடனே குட்லாம்பட்டிகு போய் தனது பெரியப்பாவை கூப்பிட்டுகொண்டு அழகுநிலாவின் வீட்டில் சம்பந்தம் பேசச்சொல்லி முடுக்கிவிட்டான்.

நேற்று இரவு போன் செய்த அவனது தாய் குட்லாம்பட்டியில் இருந்து போன்செய்தால், இரண்டுபேர் வீட்டிலும் சேர்ந்து போய் ஜாதகம் பார்த்ததாகவும் ஜாதகம் பொருந்தியுள்ளதால் அவர்களும் பெண்கொடுக்க சம்மதித்துவிட்டதாகவும வரும் புதன் கிழமை பெண்பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்யட்டுமா? அன்றே பேசி கல்யாணத்தேதியை முடிவு செய்துகொள்ளலாமா? என்றும் கேட்டார் உடனே தன சம்மதத்தை தெரிவித்துவிட்டான் முரளிதரன்

அதில் மகிழ்ந்து போன முரளிதரன் நல்லபடியாக திருமணப் பேச்சு முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றிகூறவும் மேலும் திருமணம் நல்லபடி நடந்து முடியவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிசொல்லவே இன்று காலையில் சென்னையில் வேலைபார்க்கும் அவனும் கோவிலுக்கு வந்திருந்தான்.

சாமிகும்பிட்டுவிட்டு சந்தோசத்துடன் படியில் இறங்கிவந்தவனின் கண்களில்தான் அழகுநிலாவை நெருக்கத்துடன் வேறு ஒரு ஆணின் அருகில் கோவில் படிகளில் கண்டவன் கனவு சுக்குநூற்றாக சிதறியது .

ஒருவழியாக சன்னதியை அடைந்து சாமி கும்பிட்டுவிட்டு அர்ச்சனை முடித்து பிரகாரம் சுற்றிவரும் நேரம் அங்கு அழ்குநிலாவை பாலோ செய்துவந்த நரேனின் ஆட்கள் ஆதித்தின் குடும்பத்துடன் அழகுநிலா படியேறும் காட்சி மற்றும் காரைவிட்டு இறங்கும் காட்சி எல்லாவற்றையும் போட்டோ எடுத்து நரேனுக்கு வாட்சப்பில் அனுப்பினர்.

நேற்று இரவே அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததால் நரேனும் மாதேசும் அவர்கள் அரேஞ் செய்திருந்த ஆட்களை மாதேஷ் தங்கியிருந்த அந்த நட்ச்சத்திர ஹோட்டல் ரூமில் வைத்து ஆத்திரத்துடன் வசவால் குளுப்பாடிவிட்டு பின் மூடவுட்டில் அங்கேயே ஒன்றாக தூங்கி எழுந்தவற்களுக்கு காலையில் வாட்சப்பில் வசந்த அந்த போட்டோ, மேலும் அவர்களை கலவரப்படுத்தியது.

மாதேஷ்க்கு, தன தந்தையுடன் ஆதித் மற்றும் ஜானகியும் கூட அழகுநிலா இருந்த அந்த ஸ்டில் அவனுக்கு பெரும் நெருப்பை பற்றவைத்தது. அவனுக்கு உடல்முழுவதும் பற்றி எறிவதுபோல் இருந்தது. அதில் ஆதித்தின் அருகில் அழகுநிலா இருப்பதுபோன்று வந்த போட்டோவை தன் வாட்சப்பிற்கு சென்ட் செய்தவன் மனதிற்குள் என் அம்மா இருக்கும் இடத்தில் இருந்த ஜானகியையும் தன இடத்தில் உள்ள ஆதித்தையும் கண்டவன் ஆத்திரத்துடன், டேய் ஆதித்....... உன் அம்மா எப்படி என் அப்பாவை பரிச்சாங்களோ! அதேபோல் வர்சாவை உன்னைவிட்டு பிரித்ததுபோல் இந்த அழகுநிலாவையும் உன்னிடமிருந்து பிரிக்காட்டி நான் மஞ்சுளாவின் பிள்ளையில்லடா....... என்று கூறிக்கொண்டான் .

வீடு வந்த பின்பும் அழ்குநிலவிற்கு கோவில் படி ஏறும் போது ஆதித் தன்னை பிடித்து கூட்டிக்கொண்டு சென்றது எதோ ஒரு புரியாத பயத்தையும் நடுக்கத்தையும் கொடுத்தது. அந்த நேரத்தில் தன்னை யாரோ பார்ப்பதுபோன்று உள்ளுணர்வு கூறியதால் நிமிர்ந்து பார்த்த அழகுநிலாவிற்கு, தன்னை கண் சிவக்க பார்த்துக்கொண்டிருந்த அவனை கண்டதும் தன்னை அறியாமல் அவள் ஆதித்தின் பிடியில் இருந்து திமிறி விளக முயன்றாள்.

ஆனால் அதனை, ஒழுங்காக வா என்ற ஆதித்தின் குரல் தடுத்தது. அவன் மேலும் உன்னை ஆசையாக ஒன்றும் இப்படி கூட்டிக்கொண்டு வரல விட்டால் ஏறமுடியாமல் மயங்கி கீழே விழுந்து உன்னை தூக்கிக்கொண்டு போகும் படி செய்துவிடப்போகிறாய் என்று சொல்லி, மேலும் அவனுடன் தன்னை இறுகி பிடித்து கூட்டிச்செல்ல ஆதித்தின் பிடியில் இருந்தவள் யார் அவன் எங்கோயோ பார்த்த ஞாபகம்... என்று யோசித்தபடி படியேறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.